812 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், ஞானப்பிரகாசியார் பட்டணம்

  

புனித ஞானப்பிரகாசியார் ஆலயம்

இடம்: ஞானப்பிரகாசியார் பட்டணம், சுப்ரமணியபுரம், சாயர்புரம் வழி, தூத்துக்குடி, 628 251

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: தூத்துக்குடி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அடைக்கல மாதா ஆலயம், நடுவைக்குறிச்சி

2. புனித அன்னம்மாள் ஆலயம், இராயப்பபுரம்

3. புனித சுவாமிநாதர் (டொமினிக்) ஆலயம், செபத்தையாபுரம்

4. புனித ஜெபமாலை மாதா ஆலயம், மணலூர்

5. புனித அந்தோனியார் ஆலயம், கொத்தலரிவிளை

6. புனித சூசையப்பர் ஆலயம், கண்ணான்டிவிளை

பங்குத்தந்தை: அருட்பணி. J. சகாய ஜஸ்டின்

குடும்பங்கள்: 450 கிளைப்பங்குகள் சேர்த்து

அன்பியங்கள்: 4 (கிளைப் பங்குகள் சேர்த்து 15)

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

திங்கள், புதன், வெள்ளி, சனி காலை 06:00 மணி திருப்பலி

செவ்வாய் மாலை 07:00 மணி புனித அந்தோனியார் கெபியில் திருப்பலி

திருவிழா: ஜூன் மாதம் 21 ஆம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. சாந்தம்

2. அருட்பணி. ரீகன்

3. அருட்பணி.‌ வில்லியம்

வரலாறு:

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதி மக்கள் பழையகாயல் பரதவ மக்களோடு மீன் கருவாடு வியாபாரம் செய்து வந்த போது, அவர்களுடன் மிகுந்த நட்புறவுடன் பழகி வந்துள்ளார்கள். அவ்வேளையில் பழையகாயல் மக்கள் பின்பற்றி வந்த கத்தோலிக்க கிறித்தவ மறையில் ஈர்க்கப்பட்ட திரு. மரிய ஏசுவடியான் மற்றும் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகி, இப்பகுதியில் ஒரு ஆலயம் அமைத்து இயேசுவை வழிபட தீர்மானித்துள்ளனர். ஆகவே இப்பகுதி குலதலைவரான நட்டாத்தி ஜமீன்தார் அவர்களிடம் ஒரு ஆலயம் கட்ட, இடம் கேட்டு விண்ணப்பித்தனர். ஜமீன்தார் அவர்களும் முழுமனத்துடன் நட்டாத்தி கிராமத்தில் இப்போது ஆலயம் இருக்கும் இடத்தை அன்பளிப்பாக கொடுத்தார். அதில் முதன் முதலாக ஒரு ஓலைக் குடிசை ஆலயம் அமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஞானப்பிரகாசியார் பட்டணம் பழையகாயல் பங்கின் கிளைப் பங்காக இருந்தது.‌ 1936 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி. சேவியர் மெல் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.‌

1946 ஆம் ஆண்டு வரை பட்டாண்டிவிளையில் குருசு (சிலுவை) கோவில் ஒன்று இருந்தது. 

புனித ஞானப்பிரகாசியார் பெயரில் எழுப்பப்பட்ட இந்த ஆலயமானது, அமெரிக்க நாட்டின் பிலோனிஜன் சகோதரிகளின் (Blonigen Sisters) நன்கொடையால் கட்டப்பட்டது ஆகும். சுண்ணாம்பு கற்களால் உருவான இந்த ஆலயம் 27.04.1958 அன்று அருட்பணி.‌ அந்தோனி S. பர்னாந்து பணிக்காலத்தில் பணிகள் நிறைவு பெற்று அர்ச்சிக்கப்பட்டது.‌ 

1976 ஆம் ஆண்டு ஆலய தூயகம் (பீடம்) மாற்றியமைக்கப்பட்டது. 

1981 ஆம் ஆண்டு மரத்தால் ஆன கொடிமரம் வைக்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டு மரத்தாலான கொடிமரம் மாற்றப்பட்டு, இரும்பு குழாய் கொடிமரம் நிறுவப்பட்டது. 

2005 ஆம் ஆண்டு ஆலய கான்கிரீட் மேற்கூரை, பீடம் புதுப்பித்தல் நடைபெற்றது. ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயம் பழுதடைந்த நிலையில் புதிய ஆலயம் கட்டலாம் என்று தீர்மானிக்கப்பட்டு, அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் நிதி பங்களிப்புடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 29-12-2019 அன்று தற்போதுள்ள புதிய ஆலயம் அர்ச்சிப்பு நடைபெற்றது. புதிய வெண்கல கொடிமரமும் நாட்டப்பட்டது. இந்த ஊரில் இந்து சமய மக்கள், தென்னிந்திய திருச்சபை மக்கள் என அனைவரும் ஒரே குடும்பமாக தங்கள் ஆலய திருவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.

தொடர்ந்து பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது ஞானப்பிரகாசியார் பட்டணம் இறைசமூகம்.

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள் :

1. R.C. Middle School, Gnanaprasiarpatnam 

2. R.C. Middle School, Naduvaikuruchi 

3. R.C. Middle School, Sebathaiapuram

பங்கில் உள்ள துறவற சபை மற்றும் இல்லம்:

Franciscan Sisters of Our Lady of Bon Secours (FBS)

Bon Secours Convent, St. Aloysius Church, G. patanam 

Bon Secours Convent, Naduvaikuruchi, Sawyerpuram P.O 

Institutions under the Religious:

1. St. Dominic Home for Children, (Cottage) Gnanapragasiarpatnam (FBS)

2. St. Dominic Orphanage, Naduvaikurichi, Sawyerpuram (FBS).

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பாலர் சபை

2. பங்குப் பேரவை

3. நிதிக் குழு

4. மரியாயின் சேனை

5. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

6. இளைஞர் இயக்கம்

7. கோல்பிங் இயக்கம்

8. கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை இயக்கம்

9. மாதா சபை

10. மறைக்கல்வி

11. அன்பியங்கள்

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர் பட்டியல்:

1. Rev.Fr. Xavier Mel : 1936 - 1937

2. Rev.Fr. Venantius Fdo : 1937 - 1938

3. Rev.Fr. Aloysius Fdo : 1938 - 1952

4. Rev.Fr. Gnanapragasam: 1952 - 1954

5. Rev.Fr. Rosaria Corera : 1954 - 1955

6. Rev.Fr. Antony S. Fdo : 1955 – 1958

7. Rev.Fr. Charles Fdo : 1958

8. Rev.Fr. John Xavier : 1958 – 1959

9. Rev.Fr. Devasahayam : 1959 – 1960

10.Rev.Fr. Aloy Navamani : 1960 – 1965

11.Rev.Fr. Arthur James : 1965 – 1969

12.Rev.Fr. J.S. Lobo : 1969 – 1970

13.Rev.Fr. Methodius : 1970 –

14.Rev.Fr. Cruz Marian : 1970 – 1972

15.Rev.Fr. Ligouri Fdo : 1972 – 1976

16.Rev.Fr. S. Soosai Marian : 1976 – 1981

17.Rev.Fr. Karunakaran Gomez : 1981 – 1983

18.Rev.Fr. S. Jesu Arulappan : 1983 – 1986

19.Rev.Fr. U. William : 1986 – 1991

20.Rev.Fr. A.J. Christian : 1991 – 1993

21.Rev.Fr. G. Sekaran : 1993 – 1998

22.Rev.Fr. M. Irudayaraj : 1998 – 2003

23.Rev.Fr. Antony Pitchai : 2003 – 2005

24.Rev.Fr. Jeyakumar : 2005 – 2010

25.Rev.Fr. Heniston : 2010 – 2011

26.Rev.Fr. Mahizhan : 2011 – 2014

27.Rev.Fr. Bright Machado : 2014 – 2016

28. Rev.Fr. Amaladas S.M. : 2016 – 2021

29.Rev.Fr. Sahaya Justin : 2021 –

வழித்தடம்: 

தூத்துக்குடி -புதுக்கோட்டை -சாயர்புரம் -சுப்ரமணியபுரம்.

ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் செல்லும் பேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன. 

Location map: https://g.co/kgs/zjTdCg

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சகாய ஜஸ்டின் அவர்கள்.