474 திரு இருதய ஆண்டவர் ஆலயம், இரயில்வே காலனி, ஈரோடு


திரு இருதய ஆண்டவர் ஆலயம்

இடம் : இரயில்வே காலனி, ஈரோடு, 638002.

மாவட்டம் : ஈரோடு
மறைமாவட்டம் : கோவை
மறைவட்டம் : ஈரோடு

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு :
அற்புத குழந்தை இயேசு ஆலயம், லக்காபுரம்.

பங்குத்தந்தை : அருட்பணி. ஆரோக்கிய யூதா ததேயுஸ்.

குடும்பங்கள் : 700
அன்பியங்கள் : 37

திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 06.30 மணிக்கு திருப்பலி (ஆங்கிலம்), காலை 08.00 மணிக்கு திருப்பலி (தமிழ்)

திங்கள், புதன் : காலை 06.30 மணிக்கு திருப்பலி (தமிழ்)

செவ்வாய் : மாலை 06.15 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி.

வெள்ளி : மாலை 06.15 மணிக்கு இறை இரக்க நவநாள் திருப்பலி.

சனி : மாலை 06.15 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை நவநாள் திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி : காலை 06.30 மணிக்கு திருப்பலி (ஆங்கிலம்)

திருவிழா : பங்குப் பெருவிழா ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறு.

புனித வேளாங்கண்ணி மாதா பிறப்புப் பெருவிழா செப்டம்பர் 8-ம் தேதியை அடுத்த ஞாயிறு.

வழித்தடம் : ஈரோடு- (கரூர் செல்லும் சாலை)- இரயில்வே காலனி (ஈரோட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில்)

வரலாறு

கி.பி.1932ம் ஆண்டில், ஈரோடு- திருச்சி இடையேயான இரயில்பாதை, அகல இரயில்பாதையாக மாறிய பிறகு, ஈரோடு ஒரு முக்கியமான இரயில்வே நிலையமாக மாறியது. அதன்பிறகு, அங்கு ஒரு பெரிய இரயில்வே காலனி அமைக்கப்பட்டதன் காரணமாக, அதிகமான கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் இங்கு குடியேறினார்கள். ஆகையால், இவர்களின் ஆன்மீகத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, இரயில்வே துறையால் கொடுக்கப்பட்ட இடத்தில் ஒரு மண்டபத்துடன் கூடிய ஆலயம் 1933ல் கட்டப்பட்டது.

1941ம் ஆண்டில், புதிய ஆலயம் கட்டுவதற்காக ஆயர் உபகாரசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அருட்பணி. T. C. அடைக்கலம் அவர்களின் முயற்சியால் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 11.02.1943 அன்று, அன்றைய கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு. உபகாரசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலயத்தின் முன்புறம் இயேசு கிறிஸ்துவின் அழகான கல்வாரி காட்சி அமைப்பு கொண்ட கெபி ஒன்று, திரு. T. W. பார்க்கர் அவர்களின் உதவியுடன் கட்டப்பட்டது.

1938ம் ஆண்டில் ஆலயமணி ஒன்று அமைக்கப் பட்டது. 1943ம் ஆண்டு ஈரோடு பங்கிலிருந்து இரயில்வே காலனி தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. இவ்வாலயத்தின் முதல் பங்குதந்தை அருட்பணி. T. C. அடைக்கலம் அவர்களே பொறுப்பேற்று பங்கை சிறப்பாக வழிநடத்தினார்.

அதிகமான ஆங்கிலோ-இந்தியர்களை பங்கு மக்களாகக் கொண்ட சில பங்குகளில் இப்பங்கும் ஒன்றாகும்.ஆங்கிலோ-இந்தியர்கள் ஆலயத்தில் திருப்பலி காண, கூடி செபிக்க வசதியான சாய்ந்து அமரக்கூடிய இருக்கைகள், அன்றைய பங்குதந்தை அருட்பணி. J. P. ரோச் (1945-1952) அவர்களின் காலத்தில் செய்யப்பட்டது.

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. F. ஜோசப் (1952-1960) அவர்களின் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும், பங்கு மக்களின் கிறிஸ்தவ வாழ்க்கை தரத்தை உயர்த்தினார்.

அருட்பணி. M. ரெஜிஸ் அவர்கள், நன்கொடையாளர்களின் உதவியுடன் ஆலய பீடம், ஆலயத்தின் பாதி பகுதி வரை மொசைக்கல்லாலான தரையை அமைத்தார். அதன்பிறகு, அருட்பணி. K. P. வின்சென்ட் (1962-1964) அவர்கள் மீதமுள்ள பணியை முடித்தார்.

ஆலய வெள்ளிவிழா நினைவாக அருட்பணி. மரிய அலோய்சியஸ் (1964-1970) அவர்களின் பணிக்காலத்தில், பங்குமக்களுக்கு ஊக்கமும், உற்சாகத்தையும் கொடுத்து, கோபுரத்துடன் கூடிய ஆலயம் ஒன்றைக் கட்டி முடித்தார்.

ஆலய பொன்விழா (50-வது ஆண்டு) நினைவாக அருட்பணி. குழந்தைராஜ் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 1993 இல் கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு. அம்புறோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கிய யூதா ததேயுஸ் அவர்களின் வழிகாட்டுதலில், ஆன்மீகப் பாதையில் சிறப்பாக பயணித்து வருகிறது திருஇருதய ஆண்டவர் ஆலய இறைசமூகம்

பங்கில் உள்ள பக்தசபைகள் :

1.வின்சென்ட் தே பால் சபை
2.மரியாயின் சேனை
3.கோல்பிங் இயக்கம்
4.நல்லடக்க நற்பணி குழு
5.இளையோர் இயக்கம்
6.பாடகற்குழு
7.பீடச்சிறுவர்கள் & பீடச்சிறுமியர்கள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கிய யூதா ததேயுஸ் அவர்கள்.