563 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கொடைக்கானல்

        

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 

இடம் : பாக்கியபுரம், கொடைக்கானல் 

மாவட்டம் : திண்டுக்கல் 

மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம் 

மறைவட்டம் : கொடைக்கானல்

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருள்பணி. சேவியர் அருள் ராயன் 

குடும்பங்கள் : 506

அன்பியங்கள் : 22

வழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணி மற்றும் காலை 08.15 மணி. 

வெள்ளி மற்றும் சனி திருப்பலி : மாலை 06.30 மணிக்கு.

தினமும் மாலை 06.30 மணிக்கு சிற்றாலயங்களில் திருப்பலி. 

மாதத்தின் முதல் நாள் சிறப்பு திருப்பலி காலை 06.30 மணிக்கு. 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு நற்கருணை ஆராதனை. 

மாதத்தின் முதல் சனி ஆலயத்தைச் சுற்றி திருச்செபமாலையுடன் அன்னையின் திருத்தேர்ப்பவனி & மாதா கிணற்றடியில் திருப்பலி. 

திருவிழா : செப்டம்பர் 08 ஆம் தேதியை தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு. 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. விஜய் அமிர்தராஜ், OFM 

2. அருள்பணி. வினோத் ராபின், OFM 

3. அருள்சகோதரி. தெரசாள், SAL

4. அருள்சகோதரி. கிறிஸ்டி சேவியர்,  PBVM

5. அருள்சகோதரி. புஷ்பா தாமஸ், FSJ

6. அருள்சகோதரி. சபினா, FSJ.

Location map :

https://maps.app.goo.gl/aEYxjoThZqAH32wL9

வரலாறு :

மலைகளின் இளவரசி என்ற சிறப்பு பெற்றதும், சிறந்த கோடைவாசஸ்தலமுமான கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள பாக்கியபுரம், நாயுடுபுரம், லூர்துபுரம், அட்டுவம்பட்டி, பள்ளங்கி  மற்றும் இவற்றை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக பாக்கியபுரம் பங்கு இருந்தது. 

பாக்கியபுரத்தின் மேற்பகுதியில், 1948 ஆம் ஆண்டு முதல் தனிநபர் இருவரின் இடத்தில் சிறிய குருசடி ஒன்றை அமைத்து வழிபாடுகள் நடத்தி வந்துள்ளனர். 1952 ஆம் ஆண்டு முதல் சற்று பெரிதாக கூரையமைத்து அங்கு அனைவரும் ஒன்றுகூடி ஜெபித்தனர். சிறப்பு நாட்களில் திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து அருள்தந்தையர் வந்து திருப்பலி நிறைவேற்றி வந்துள்ளனர். ஆண்டிற்கு ஒருமுறை அன்னைக்கு சப்பரம் எடுத்து திருவிழா கொண்டாடுவது, அப்போதிருந்தே வழக்கத்திலிருந்தது. 

மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், திருப்பலி நிறைவேற்ற போதுமான இடம் இல்லாததாலும், நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசன்டேசன் கான்வென்ட்ல் (Presentation Convent) அமைந்துள்ள தூய சவேரியார் பள்ளியில்  ஒவ்வொரு வாரமும் திருப்பலிகள் நடைபெற்றன. 

1972 ஆம் ஆண்டு இப்பகுதி சங்கத்தினர், இறைமக்களின் பெருமுயற்சியால் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி, 1985 ஆம் ஆண்டு வரை ஆலயப் பணிகள் நடந்து வந்தன. இக்காலத்தில் அனைத்து ஆன்மீகத் தேவைகளுக்காகவும், திருப்பலிக்காகவும் திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்தே அருள்பணியாளர்கள் வந்து சென்றனர். 

கிளைப் பங்காக இருந்த பாக்கியபுரம் 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொடைக்கானல் வட்டத்தின் மூன்றாவது பங்குத்தளமாக செயல்படத் தொடங்கியது. திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் துணைப் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. வின்சென்ட் ராஜா அவர்கள் பாக்கியபுரம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். 

1986 ஆம் ஆண்டு மார்ச் 5 ம் நாள் தனிப்பெரும் பங்காக பாக்கியபுரம், லூர்துபுரம், அட்டுவம்பட்டி, பள்ளங்கி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகவும், மொத்தம் 415 குடும்பங்களை உறுப்பினர்களாகவும் கொண்டுருந்தது. புதிய பங்காக தொடங்கிய காலம் முதல் பாக்கியபுரம் பங்கு அனைத்து நிலைகளிலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. 

1993 ஆம் ஆண்டு பேராயர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இப்பகுதியில் செயல்பட்டு வந்த சங்கங்கள் கலைக்கப்பட்டு, அருள்பணி. அந்தோனிராஜ் அவர்களால் புதிதாக பங்குப்பேரவை ஆரம்பிக்கப் பட்டது. இதனால் பங்கின் அனைத்துப் பகுதிகளில் இருந்து, உறுப்பினர்கள் பங்குப் பேரவையில் இடம் பெற்று, செயல்பாடுகளில் ஈடுபட ஏதுவாக மாறியது. 

2002 ஆம் ஆண்டில் அருள்பணி. மரிய லூயிஸ் அவர்கள் பொறுப்பேற்ற பின் ஆலயம் இருந்த இடத்தின் பின்புறம் 30" 80" அடி என்கிற அளவில் கான்கிரீட் மேற்கூரை அமைத்து ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

அருள்பணி. பால் இக்னேஷியஸ் பணிக்காலத்தில் 

லூர்துபுரம், அட்டுவம்பட்டி, பள்ளங்கி பகுதிகள் 2007 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு, லூர்துபுரம் தனிப்பங்காக செயல்படத் தொடங்கியது. 

அருள்பணி. மரிய அருள் செல்வம் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, பங்கு மக்களின் அவசரத் தேவைகளுக்காக "ஜீவன் டிரஸ்ட்" ஆரம்பிக்கப்பட்டு, மக்களுக்கு சேவைபுரிய ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது. 

அருள்பணி. அடைக்கலராஜா பணிக்காலத்தில் பங்கு அதிவேக வளர்ச்சி கண்டது. ஆலய கான்கிரீட் மேற்கூரை, புனித வளனார் அரங்கம், ஆலயமணி கோபுரம், ஜெபமாலை கொடிமரம், குழந்தை இயேசு சிற்றாலயம், குருசடிமெத்து வனத்து அந்தோனியார் ஆலய வளாகத்தில் கெஸ்லர் அரங்கம், திருஇருதய ஆண்டவர் சிற்றாலயம், சகாய மாதா சிற்றாலயம், வழித்துணை மாதா கெபி, புனித தோமையார் சிற்றாலயம், புனித சலேத் அன்னை கெபி, சிலுவைப்பாதை வளாகம் (பெரும்பள்ளம்), புனித சகாய மாதா கெபி போன்ற வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு பங்கின் ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். 

01.01.2019 முதல் அருள்பணி. சேவியர் அருள் ராயன் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, பணியாற்றி வருகிறார். உலக மீட்பர் கெபியும், புனித ரோசா மிஸ்டிக்கா கெபியும் உருவாக்கப் பட்டுள்ளன. 

பாக்கியபுரம் பங்கில் தற்போது 3 மண்டலங்களும், 22 அன்பியங்களும், பங்குப் பேரவை மற்றும் பல்வேறு பங்கேற்பு அமைப்புகளும் சிறப்புற செயல்பட்டு வருகின்றன. 

பங்கின் சிற்றாலயங்கள்:

1. புனித வனத்து அந்தோனியார் சிற்றாலயம், குருசடிமெத்து

2. புனித பதுவை அந்தோனியார் சிற்றாலயம், அண்ணா ராமசாமி நகர் 

3. அற்புத குழந்தை இயேசு சிற்றாலயம், ரைபிள் ரேஞ்ச் ரோடு 

4. திருஇருதய ஆண்டவர் சிற்றாலயம், பாக்கியபுரம்

5. புனித சகாய மாதா சிற்றாலயம், குருசாமி பள்ளம் 

6. புனித தோமையார் சிற்றாலயம், கல்லுக்குழி.

பங்கின் கெபிகள் :

1. புனித வழித்துணை மாதா கெபி, கான்வென்ட் ரோடு 

2. புனித சலேத் மாதா கெபி, பாக்கியபுரம்

3. புனித பரலோக மாதா கெபி, சேரன் நகர் 

4. புனித ஜெபமாலை மாதா கெபி, சேரன் நகர் 

5. புனித ஆரோக்கிய மாதா கெபி, பியர்சோலா 

6. சிலுவைப்பாதை வளாகம், பெரும்பள்ளம். 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. மரியாயின் சேனை 

2. நற்செய்தி பணிக்குழு 

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

4. தலித் பணிக்குழு

5. பாடகற்குழு 

6. கோல்பிங் இயக்கம் 

7. மறைக்கல்வி அமைப்பு 

8. கத்தோலிக்க இளையோர் இயக்கம் 

9. அன்னை இளையோர் இயக்கம் 

10. புனித வனத்து அந்தோனியார் இளைஞர் இயக்கம் 

11. ஜீவன் டிரஸ்ட் 

12. பாக்கிய மலர்க்குழு. 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. வின்சென்ட் ராஜா (1986-1988)

2. அருள்பணி. சூசை (1988-1989)

3. அருள்பணி. சந்தியாகு (1989-1993)

4. அருள்பணி. அந்தோனிராஜ் (1993-1995)

5. அருள்பணி. எட்வின் சகாய ராஜ் (1995-1996)

6. அருள்பணி. அருள்சாமி (1996-2001)

7. அருள்பணி. மரிய லூயிஸ் (2002-2006)

8. அருள்பணி. வளன்டின் ஜோசப் (2006-2007)

9. அருள்பணி. பால் இக்னேஷியஸ் (2007-2010)

11. அருள்பணி. ஜெகநாதன் (2010-2011)

10. அருள்பணி. ஜெரோம் பேட்ரிக் (2011-2013)

11. அருள்பணி. மரிய அருள் செல்வம் (2013-2015)

12. அருள்பணி. அடைக்கலராஜா (2015-2019)

13. அருள்பணி. சேவியர் அருள் ராயன் (2019 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. சேவியர் அருள் ராயன் அவர்கள்.