529 தூய சூசையப்பர் ஆலயம், குருந்தன்கோடு

    

தூய சூசையப்பர் ஆலயம்

இடம் : குருந்தன்கோடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : குழித்துறை
மறைவட்டம் : காரங்காடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை

பங்குத்தந்தை : அருட்பணி. பிரைட் சிம்ச ராஜ்.

குடும்பங்கள் : 78
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 05.45 மணிக்கு

செவ்வாய் மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள்.

வழித்தடம் : திங்கள்நகர் -பேயோடு வழித்தடத்தில், குருந்தன்கோடு சந்திப்பிற்கு அருகே இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map : St.Joseph's Church
Nettankodu Rd, Kurunthancode, Tamil Nadu 629809

வரலாறு :

முக்கடலும், முத்தமிழும் கொஞ்சி குலாவும் குமரி மாவட்டத்தில், தென்னையும், மா, பலா, வாழை, செந்நெல்லும் நிறைந்து தென்றல் காற்றில் ஆட, சிற்றோடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் தன்னகத்தே கொண்ட குருந்தன்கோடு எனும் சிற்றூரில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் இல்லையே என்ற கத்தோலிக்க மக்களின் நெடுநாள் ஏக்கமாக இருந்தது.

காரங்காடு பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. ஜோசப் அடிகளாரின் ஆலோசனையின் பெயரில், இந்த ஊர் ஆசிரியை செல்வி. ரெஜினம்மாள் மற்றும் ஊர் பெரியவர்களின் கூட்டு முயற்சியாலும், பங்குத்தந்தையின் முழு முயற்சியுடன் இரவோடு இரவாக 23.06.1968 அன்று தென்னை ஓலையால் ஆலயம் கட்டப்பட்டு, 24.06.1968 அன்று முதல் திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

அதன் பிறகு இந்த ஓலை ஆலயம் குருந்தன்கோடு பெரியவர்கள், சிறியவர்கள், ஆசிரியை செல்வி. ரெஜினம்மாள் ஆகியோரின் முயற்சியால் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டு, பனைமரம், ஓடுகள் வேய்ந்த சிற்றாலயமாக உருவாக்கப் பட்டது.

தொடர்ந்து ஆலன்விளை பங்கின் கிளைப் பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து பங்குத்தந்தையர்கள் அருட்பணி. வென்சஸ்லாஸ், அருட்பணி. அல்போன்ஸ், அருட்பணி. K. மரியதாஸ் ஆகியோரின் முயற்சியால் 2001 ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.

பணிகள் நிறைவு பெற்று 2002 ஆம் ஆண்டில் புதிய ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்கு அருட்பணிப் பேரவை
2. பாலர் சபை
3. சிறுவழி இயக்கம்
4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
5. வானவில் இளைஞர் இயக்கம் (பெண்கள்)
6. இளைஞர் இயக்கம் (ஆண்கள்)
7. மறைக்கல்வி மன்றம்
8. மரியாயின் சேனை
9. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
10. பங்கு வளர்ச்சிக் குழு
11. பாடகற்குழு.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரைட் சிம்ச ராஜ் அவர்கள்.

வரலாறு : பங்கு ஆலய வெள்ளிவிழா மலர்.

புகைப்படங்கள் : அருட்பணி. வ. பெனிட்டோ