382 அற்புத அன்னை ஆலயம், அன்னைநகர்


அற்புத அன்னை ஆலயம்.

இடம் : அன்னைநகர், பள்ளம் (PO)

🍊மாவட்டம் : கன்னியாகுமரி
🍊மறை மாவட்டம் : கோட்டார்
🍊மறை வட்டம் : முட்டம்

🍇நிலை : பங்குத்தளம்
🍇கிளைகள் : இல்லை

💐பங்குத்தந்தை : அருட்பணி A. S ஆனந்த்

🌸குடும்பங்கள் : 401
🌸அன்பியங்கள் : 13

🏵ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

🏵திங்கள் முதல் வெள்ளி வரை திருப்பலி : காலை 06.00 மணிக்கு

🏵சனி மாலை 05.30 மணிக்கு செபமாலை, அற்புத அன்னை நவநாள், திருப்பலி.

🏵மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு குணமளிக்கும் வழிபாடு, திருப்பலி.

🎉திருவிழா : ஆகஸ்ட் 30 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 08 -ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

🕯மண்ணின் மைந்தர்கள் :
🙏அருட்பணியாளர்கள் :
💐1. Fr. தொபியாஸ்
💐2. Fr. பிரான்சிஸ் போர்ஜியோ (மீரட் மறை மாவட்டம்)
💐3. Fr. V ரிச்சர்ட்
💐4. Fr. A. S பிரான்சிஸ் சேவியர்
💐5. Fr. C மைக்கேல் ஜான்
💐6. Fr. ராபின்சன்
💐7. Fr. A விமல்ராஜ்
💐8. Fr. P ஜோசப் ரவீந்திரன்
💐9. Fr. கிங்ஸ்லி ஜோண்ஸ்
💐10. Fr. S செபாஸ்டின் குமார்
💐11. Fr. லியோ டால்ஸ்டாய்
💐12. Fr. R ஆரோக்கியதாஸ்
💐13. Fr. ஜான் மில்டன்
💐14. Fr. S சகாய ஜெலஸ்டின்
💐15. Fr. A ஜோமி பனித்தாஸ்
💐16. Fr. C பிரின்ஸ் பிராங்ளின்.
💐17. Fr. தெலஸ்பர்
💐18. Fr. லின்சன்
💐19. Fr. அலாய்சியுஸ்
💐20. Fr. ஷாலின்
💐21. Fr. கரோல்
💐22. Fr. வசந்த்
💐23. Fr. ரெதீஸ்
💐24. Fr. சுமில்டன்
💐25. Fr. அமல்ராஜ்

🙏அருட்சகோதரிகள் :
🌸1. Sr மரிய ரூபினா
🌸2. Sr M. ஜோன் ஆஃப் ஆர்க்
🌸3. Sr F. குளோரி
🌸4. Sr J. செலின்
🌸5. Sr R. ஸ்டெல்லா ஆன்றோ
🌸6. Sr பெர்னதத் சேவியர்
🌸7. Sr E. டென்னீசாள் FMM
🌸8. Sr J. மேரி அனுசா
🌸9. Sr R. ரோஸ்லின் சகிதா
🌸10. Sr மேரி
🌸11. Sr G. ரெக்சலின் கேன்டிடா
🌸12. Sr C. மேரி ரீனா.

👉Location map : https://maps.google.com/?cid=10578387407215942922

வரலாறு :
**********
🏖கன்னியாகுமரி கடற்பரப்பில் பள்ளம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அழகான ஊர் அன்னைநகர். இவ்வூரின் பாதுகாவலியாக இருந்து அருள்வரங்களையும் அற்புதங்களையும் அள்ளி வழங்கும் அற்புத அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்..

🏵குருக்கள் போதிய அளவு இல்லாத முற்காலத்தில் ஊரில் குருசடிகள் அமைத்து மக்கள் ஜெபித்து வந்தார்கள். பள்ளம் ஊரிலும் ஊரின் மேற்குப் பகுதியில் புனித மத்தேயுவிற்கும், நடுப்பகுதியில் புனித இராயப்பருக்கும், ஊரின் கிழக்குப் பகுதியில் அற்புத அன்னைக்கும் குருசடிகள் இருந்தன. இக்குருசடிகளில் மக்கள் மாலை, இரவு நேரங்களில் கூடியிருந்து ஜெபித்து வந்தார்கள்.

🍇1921 ல் பள்ளம் புனித மத்தேயு சிற்றாலயம் கட்டப்பட்டது. அக்காலத்தில் பள்ளம் ஆலயமானது புத்தன்துறை பங்கின் கிளைப்பங்காக இருந்தது. தற்போதைய கோட்டார் மறை மாவட்டம் 1930 ஆண்டு வரை கொல்லம் மறை மாவட்டதின் கீழ் இருந்தது. அப்போதைய கொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு அலாய்சியுஸ் மரிய பென்சிகர் அவர்கள், இப்பகுதிக்கு வரும் போது பள்ளம், மணக்குடி, புத்தன்துறை மற்றும் ஊர்களுக்கு கால்நடையாகவே வருவதாக கூறப்படுகிறது.

🍇மேதகு ஆயரின் பணிக்காலத்தில் ஊர்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டதாகவும், பள்ளம் ஊரிலும் ஒன்று முதல் மூன்று வகுப்புகள் வரை நடைபெற்றதாகவும் அறிய முடிகிறது.

🌹வருடங்கள் செல்லச் செல்ல மக்கள் எண்ணிக்கை அதிகரித்து. ஆகவே ஊரானது கிழக்குப் பகுதி மேற்குப் பகுதி என்று விரிவடைந்து.

🌹1997 ம் ஆண்டு அருட்பணி ஜோசப் பெனடிக்ட் அவர்கள் பள்ளம் பங்குத்தந்தையாக போறுப்பேற்ற போது, கிழக்கு பகுதி (அன்னைநகர்) பள்ளம் பங்கின் கிளையாக இருந்தது. மறைக்கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டது. மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட திருவிழா பத்து நாட்கள் ஆனது.

🍀26-01-2000 : பள்ளம் பங்கிலிருந்து அன்னைநகர், கோட்டார் பங்கின் கிளைப் பங்காக ஆனது.

🌷23-07-2000 : முதல் பங்குப்பேரவை உருவாக்கம்.

🍀24-05-2001 : அசிசி பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

💐கடற்கரையோரமிருந்த அன்னையின் குருசடியில் அலையோசையின் ஆரவாரமும், கடற்காற்றின் இதமான அனுபவமுமாக இருந்த போதும், மழைக்காலங்களில் திருப்பலி நிறைவேற்ற இயலவில்லை. ஆகவே மக்கள் ஆலயம் கட்ட எண்ணம் கொண்டனர்.

⛪07-12-2001 அன்று மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

💐28-05-2002 : தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி T. ஆன்ட்ரூஸ் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

🌷16-11-2003 : பங்குத்தந்தை இல்லம் அடிக்கல் போடப்பட்டது.

🌷01-02-2004 : பங்குத்தந்தை இல்லம் அர்ச்சிக்கப் பட்டது.

🍇24-04-2005 : அற்புத அன்னை பள்ளி கட்டிடம் திறப்பு.

🌹22-05-2008 : இரண்டாவது பங்குத்தந்தை அருட்பணி D. அருள் ஜோசப் பொறுப்பேற்பு.

🌺29-05-2009 : மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்பணி A. செல்வராஜ் பொறுப்பேற்பு.

🍬03-06-2009 : அற்புத அன்னை மழலையர் தொடக்கப்பள்ளி ஆரம்பம்.

🦋06-07-2009 : அற்புத அன்னை ஆலயம் அர்ச்சிப்பு.

🙏28-05-2010 : பெத்தனி (Bethany) அருட்சகோதரிகள் வருகை.

🏵29-01-2011 : நான்காவது பங்குத்தந்தையாக அருட்பணி E. நித்திய சகாயம் பொறுப்பேற்பு.

✒️12-04-2012 : பெத்தனி ஆங்கிலப் பள்ளி ஆரம்பம்.

🌺14-05-2013 : 5வது பங்குத்தந்தை அருட்பணி A. விஜயன் ராஜன் பாபு பொறுப்பேற்பு.

👉30-08-2013 : அன்னை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் செயல்படல்.

🍎08-09-2013 : அற்புத அன்னை மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

💐தற்போது ஆறாவது பங்குத்தந்தையாக அருட்பணி A. S ஆனந்த் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

🏵அற்புதங்கள் :

🦋திருமணமாகி 18 வருடங்களாக குழந்தை பேறின்றி இருந்த தம்பதிகளுக்கு, அற்புத அன்னையின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்தது.

🦋இதய அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு அன்னையின் ஆசீரால், நோய் நீங்கி பூரண நலம் பெற்றுக் கொண்டார்.

🦋மேலும் பல்வேறு அற்புதங்கள் அன்னையின் வழியாக நடந்து வருவதால் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்று செல்கின்றனர்.