407 தூய தமத்திரித்துவ ஆலயம், SPB காலனி


தூய தமத்திரித்துவ ஆலயம்

இடம் : SPB காலனி, பள்ளிப்பாளையம் அஞ்சல்.

மாவட்டம் : நாமக்கல்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : திருச்செங்கோடு

பங்குத்தந்தை : அருட்பணி த. ஜான் கென்னடி

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித மரிய மதலேனாள் ஆலயம், ஓடப்பள்ளி
2. புனித விண்ணரசி மாதா ஆலயம், கொக்கராயன்பேட்டை
3. புனித சூசையப்பர் ஆலயம், தோக்கவாடி
4. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், KPL நகர்.

குடும்பங்கள் : 250+
அன்பியங்கள் : 13

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு (தமிழ்) மற்றும் காலை 11.00 (ஆங்கிலம்)

மாதத்தின் முதல் ஞாயிறு தமிழ் திருப்பலி முடிந்தவுடன் நற்கருணை ஆசீர்.

திங்கள் முதல் வியாழன் வரை திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வெள்ளி மாலை 06.30 மணிக்கு இறை இரக்கத்தின் நவநாள், திருப்பலி, நற்கருணை ஆராதனை

சனி மாலை 06.00 மணிக்கு : அற்புத மாதா நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் சனி காலை 10.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை-மூவொரு இறைவன் செபவழிபாடு.

திருவிழா : ஜூலை மாதம் முதல் ஞாயிறு கொடியேற்றம். இரண்டாம் ஞாயிறு திருவிழா.

ழித்தடம் : சேலம் -திருச்செங்கோடு- ஈரோடு சாலையில் SPB காலனி -யில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location Map :
SH 79, SPB Colony, Pallipalayam, Tamil Nadu 638010

https://g.co/kgs/1eeevU

வரலாறு :

கி.பி 1963 ஆம் ஆண்டு பள்ளிபாளையத்தில் சேசஷாயி காகித ஆலை தோன்றவே, அதன் குடியிருப்பு பகுதிகளில் பல கிறிஸ்தவர்கள் குடியேறினர். இவ்வாறு குடியேறிய சுமார் 50 கிறிஸ்தவ குடும்பங்களின் ஆன்மீகத் தேவையை நிறைவு செய்ய SPB காலனி ஆலய நிர்வாகமானது, 08.08.1977 அன்று அரை ஏக்கர் நிலத்தை ஆலயம் கட்ட வழங்கியதோடு, ஆலயம் கட்ட பல வகைகளில் உதவியும் செய்தது.

01.05.1978 அன்று தூய தமத்திரித்துவ ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 16.07.1980 அன்று சேலம் மறை மாவட்ட ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, சேலம் மறை மாவட்டத்தின் 50 வது பங்காக, பொன்விழா ஆண்டில் SPB காலனி பங்கு உருவானது.

முதல் பங்குத்தந்தையாக அருட்பணி பிலவேந்திரன் (1980-1984) அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

01.09.1993 ல் அருட்பணி தேவசகாயம் அவர்களின் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

1991 ஆம் ஆண்டு புனித அன்னாள் கன்னியர் இல்லமானது, SPB காலனி பங்கின் கிளைப்பங்கான ஓடப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது.

1941 ஆம் ஆண்டு அருட்தந்தை. வெங்கத்தனம் அடிகளார் அவர்களால் புனித ஆண்ட்ரூஸ் R. C துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு இப்பள்ளிக் கூடத்திற்கு புதிய கட்டிடம் கட்டப் பட்டது.

19.03.1999 அன்று ஓடப்பள்ளி புனித மரிய மதலேனாள் ஆலயம் கட்டப்பட்டு அருட்தந்தை. மார்ட்டின் அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது. ஜூபிலி 2000 ஆம் ஆண்டு நினைவாக ஆலய மணிக்கோபுரம் கட்டப்பட்டு மேதகு ஆயர் சிங்கராயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 02.11.2003 அன்று கல்லறை தோட்டத்திற்கு நிலம் வாங்கப் பட்டது.

30.05.2004 அன்று பள்ளிபாளையம் புனித அந்தோணியார் ஆலயம் புதுப்பிக்கப் பட்டது.

10.07.2005 அன்று SPB காலனி பங்கின் வெள்ளிவிழா மற்றும் சேலம் மறை மாவட்டத்தின் பவளவிழா சிறப்பு நிகழ்வு நடை பெற்றது. மேலும் பவளவிழா நினைவாக (சேலம் மறை மாவட்டம் 1930 ல் உருவானது) அருட்தந்தை. லூர்துசாமி அவர்களின் முயற்சியால் ஆலய வளாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதுடன் ஆலயம் புதுப்பிக்க பட்டது.

30.08.2008 அன்று SPB காலனி பங்கிலிருந்து பள்ளிபாளையம், ஈகாட்டூர் பகுதிகள் இணைந்து, புதிதாக பள்ளிபாளையம் பங்கு உதயமானது.

கிளைப்பங்கான தோக்கவாடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 29.05.2010 அன்று மேதகு ஆயர் சிங்கராயர் அர்ச்சிக்கப் பட்டது.

மாதா கெபி கட்டப்பட்டு 01.01.2011 அன்று மேதகு ஆயர் சிங்கராயர் அவர்களால் புனிதப் படுத்தப் பட்டது.

கிளைப் பங்கான கொக்கராயன்பேட்டை புனித விண்ணரசி மாதா ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 13.05.2012 அன்று மேதகு ஆயர் சிங்கராயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

2014 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தில் புனித சூசையப்பர் கலையரங்கம் அமைக்கப் பட்டது.

03.05.2015 அன்று கிளைப்பங்கான ஓடப்பள்ளி புனித மரிய மதலேனாள் ஆலயம் அருட்தந்தை. இக்னேஷியஸ் அவர்களால் புதுப்பிக்கப்பட்டு, அருட்தந்தை எட்வர்ட் ராஜன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

15.01.2015 அன்று ஆலய வளாகத்தை சுற்றி கல்தளம் அமைக்கப் பட்டது.

12.07.2015 அன்று புனித மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டு மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

18.01.2018 அன்று கிளைப் பங்கான KPL நகரில் ஆலயம் அமைக்க மேதகு ஆயரின் உதவியாலும், பங்குத்தந்தை அருட்பணி. இக்னேஷியஸ் பிதேலியஸ் அவர்களின் முயற்சியாலும், மக்களுடைய நன்கொடைகளாலும் நிலம் வாங்கப்பட்டு ஆயரின் பெயரின் பதிவு செய்யப் பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி ஜான் கென்னடி அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

இப்பங்கின் பங்குத்தந்தையர்கள் :

1.அருட்பணி . அ. பிலவேந்திரன் (1980-1984)
2. அருட்பணி. ஏ. அமல்ராஜ் (1984-1986)
3. அருட்பணி. சி. மைக்கேல் (1986-1987)
4. அருட்பணி. தேவசகாயம் (1987-1993)
5. அருட்பணி. ஏ. எட்வர்ட் ராஜன் (1993-2000)
6. அருட்பணி. லூர்துசாமி (2000-2006)
7. அருட்பணி. சார்லஸ் (2006-2007)
8. அருட்பணி. சகாயராஜ் (2007-2008)
9. அருட்பணி. ரா. ஜெயசீலன் (2008-2013)
10. அருட்பணி. இக்னேஷியஸ் பிதேலிஸ் (2013-2018)
11. அருட்பணி. ஜான் கென்னடி (2018 முதல் தற்போது வரை...)

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன், ஆலய பீடச் சிறுவன்.

அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார். -லூக்கா நற்செய்தி 10 :21