621 குழந்தை இயேசு ஆலயம், வெம்பூர்

  

குழந்தை இயேசு ஆலயம் 

இடம் : வெம்பூர், புதூர் வழி, தூத்துக்குடி, 628905

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : தூத்துக்குடி 

மறைவட்டம் : குறுக்குச்சாலை

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் : 

1. புனித அந்தோனியார் ஆலயம், மேலப்பட்டி 

2. புனித சூசையப்பர் ஆலயம், மாவில்பட்டி

பங்குத்தந்தை : அருட்பணி. மரியதாஸ் லிப்டன் 

குடும்பங்கள் : 56 (கிளைப்பங்குகள் சேர்த்து) 

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 07.00 மணிக்கு 

வியாழன் மாலை 07.00 மணிக்கு திருப்பலி. 

திருவிழா : கிறிஸ்துமஸ்  நாளில். 

வழித்தடம் : தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வெம்பூர் உள்ளது. 

Location map : https://g.co/kgs/iXwKCu

வரலாறு :

நாகலாபுரம் பங்கின் ஒரு பகுதியாக வெம்பூர் இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் வெம்பூரில் ஊருக்கு நடுவில் ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டு, நாகலாபுரத்தின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 

தொடர்ந்து நாகலாபுரத்தில் இருந்து பிரிந்து கோட்டூர் தனிப்பங்காக ஆனபோது, இதன் கிளைப் பங்காக வெம்பூர் மாற்றப்பட்டது. 

கோட்டூர் பங்குத்தந்தையாக அருட்பணி. மார்க் ஸ்டீபன், SJ பணிபுரிந்த போது, வெம்பூர் சாலைக்கு அருகே 15 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு, புதிய ஆலயம் கட்டப்பட்டு 20.05.2003 அன்று மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

இதே நாளில் (20.05.2003)

மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் 99 -வது பங்காக வெம்பூர் உயர்த்தப் பட்டது. 

பங்கில் உள்ள கெபி:

குழந்தை இயேசு கெபி

Sacred Heart Sisters (SHS) இல்லம் உள்ளது. அருட்சகோதரிகள் 

Vidiyal Dispensary, ஒன்றை நடத்தி வருகிறார்கள். 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Rev.Fr. Denzil Raja (2003)

2. Rev.Fr. Irudayasamy (2005-2009)

3. Rev.Fr. Joseph Ladislaus (2009-2014)

4. Rev.Fr. Amaladhas U. (2014-2019)

5. Rev.Fr. Mariadas Lipton (2019 முதல் தற்போது..) 

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. மரியதாஸ் லிப்டன்.