246 புனித சூசையப்பர் ஆலயம், சமயநல்லூர்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : சமயநல்லூர்

மாவட்டம் : மதுரை
மறை மாவட்டம் : மதுரை உயர் மறை மாவட்டம்

பங்குத்தந்தை : அருட்பணி எட்வர்ட் பிரான்சிசு சேவியர்

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1. சோழவந்தான்,
2.கீழமாத்தூர்,
3.தோடனேரி,
4.எம் ஜி ஆர் நகர்,
5.ஊர்மெச்சிக்குளம்,
6.மன்னாடிமங்களம்

குடும்பங்கள் : 350
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 08:00 மணிக்கு

புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள், திருப்பலி

திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள்.

வழித்தடம் : மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 29 A, B , 71 வாடிப்பட்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் சமயநல்லூரில் நின்று செல்லும்.

சிறப்புகள் :

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து சமயநல்லூர் தோற்றம் துவங்கியது, புதுக்கோட்டை பகுதியிலிருந்து சில கத்தோலிக்க விவசாயிகள் வந்தபோது இங்கு வெற்றிலை கொடிகள் வளர்க்கப்பட்டு பயிரிடப்பட்டன.

பின்னர், மதுரை சாலையில் இரு தியாகராஜர் பருத்தி நூற்பு மில்கள் தொடங்கப்பட்டபோது மக்கள் தொகை மற்றும் முக்கியத்துவம் பெற்றது. சிவகங்கை பகுதியிலிருந்து பலர் இங்கு வந்து குடியேறினர்.

கி.பி 1923 -ம் ஆண்டு உருவானது இவ்வாலயம். தற்போது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன.

பாத்திமா மாதா கெபி ஒன்றும் அழகுற கட்டப்பட்டுள்ளது.