519 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கருமந்துறை

    

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம்
இடம் : கருமந்துறை, கருமந்துறை அஞ்சல், பெத்தநாயக்கன் பாளையம்  தாலுகா, 636138.

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : ஆத்தூர்

நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்பணி. அமல் மகிமை ராஜ்

குடும்பங்கள் : 70
அன்பியங்கள் : 3

திருப்பலி நேரங்கள் : 

ஞாயிறு : காலை 09.00 மணிக்கு திருப்பலி
வாரநாட்கள் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.00 மணிக்கு செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை.
மாதத்தின் முதல் சனி : மாலை 06.30 மணிக்கு தூய லூர்து அன்னை கெபியில் திருப்பலி.
வருடந்தோறும் தூய ஆவியார் பெருவிழா அன்றும், அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா அன்றும் இரவு 10.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிவரை முழு இரவு செபவழிபாடு நடைபெறும்.

திருவிழா : அக்டோபர் மாதம் 4ம் தேதி புனித பிரான்சிஸ் அசிசியார் திருவிழா நடைபெறும்.

மண்ணின் மைந்தர் : அருட்சகோதரர். ஜான்போஸ்கோ, புனித பேதுரு பாப்பிறை குருத்துவக் கல்லூரி, பெங்களூரு.

வழித்தடம் :

ஆத்தூரிலிருந்து 51கி.மீ தொலைவில் கருமந்துறை புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம் உள்ளது. 

வழி : ஆத்தூர்- புத்திரகவுண்டம்பாளையம்- பேளூர்- தும்பல்- கருமந்துறை.

வரலாறு :

எழில்மிகு தோற்றமும், மரங்கள் நிறைந்த அழகிய காடும், என சிறப்புமிக்க கல்வராயன் மலையில் கருமந்துறை என்னும் அழகிய ஊரில் ஆலயம் கொண்டுள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய வரலாற்றைக் காண்போம்.

சேலம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களின் பெரும் முயற்சியால் கல்வராயன் மலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மறைபரப்புப் பணி செய்யவும், அவர்களின் அறியாமையை போக்கி நன்னெறியில் அவர்களின் வாழ்க்கை சீரடையவும், அவர்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு 15.09.1980 அன்று அருட்தந்தை. ஜெரண்டு மோவியேல் என்ற பிரான்ஸ் மேல்நாட்டு போதகசபை குருவை தலைவராகக் கொண்டு "Assisi institute of development" என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.

பின்பு, 1980 ஆம் ஆண்டு மலைவாழ் மக்களின் மருத்துவ வசதிக்காக "அசிசி மருந்தகம்" தொடங்கப்பட்டது.

சிறுவர், சிறுமியர்களின் நலன் கருதி அவர்கள் கல்வி கற்று பயன்பெற வேண்டும் என்று 1993 ஆம் ஆண்டு "அசிசி துவக்கப்பள்ளி" தொடங்கப்பட்டது. பிறகு, 2000ம் ஆண்டு இப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது.

19.01.1998 அன்று கருமந்துறையில் இருந்து 20கி.மீ தொலைவில் உள்ள கலக்கம்பாடி கிராமத்தில் உள்ள மலைவாழ் குழந்தைகளின் கல்வி நலன்கருதி, புனித அன்னை தெரசாள் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

04.03.2000 அன்று இங்குள்ள கிறிஸ்தவ மக்களின் தேவைக்காக புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம் கட்டப்பட்டு மறைமாவட்டத்தின் நிர்வாகத் தந்தை அருட்பணி. விக்டர் சுந்தர்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அன்றுமுதல் தும்பல் தூய லூர்து அன்னை ஆலயப் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

08.06.2008 அன்று தும்பல் பங்கிலிருந்து கருமந்துறை தனிப்பங்காக பிரிக்கப்பட்டது. இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அலெக்ஸ் பிரபு அவர்கள் நியமிக்கப்பட்டார்.

22.06.2008 அன்று புதிதாக பங்குக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தலைவர், செயலாளர், பொருளாளர் என நிர்வாகிகள் பங்கில் நியமிக்கப் பட்டார்கள்.

13.07.2008 முதல் புனித பிரான்சிஸ் அசிசியார் அன்பியம், புனித அன்னை தெரசா அன்பியம், புனித ஜான்போஸ்கோ அன்பியம் ஆகிய மூன்று அன்பியங்களை உருவாக்கப்பட்டு இன்று வரையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இப்பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. அலெக்ஸ் பிரபு (2008-2011) அவர்களின் பணிக்காலத்தில் தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு, 19.09.2010 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. துரைராஜ் (2012-2017) அவர்களின் பணிக்காலத்தில் பள்ளிக்கு பாதுகாப்பாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. அமல் மகிமை ராஜ் அவர்களின் முயற்சியாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும் ஆலயத்திற்கு அருகிலேயே மணிக்கோபுரம் கட்டப்பட்டு 06.05.2018 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்கில் உள்ள பக்தசபைகள்:

*பங்கு நிர்வாக பணிக்குழு
*இளைஞர் பணிக்குழு
*பாடகற் பணிக்குழு
*பீடச்சிறுவர்கள் பணிக்குழு
*மறைக்கல்வி பணிக்குழு
*அன்பிய பணிக்குழு.

பங்கில் உள்ள இல்லங்கள் மற்றும் மருந்தகம்: 
*பங்குத்தந்தை இல்லம்
*புனித காணிக்கை அன்னை சபை அருட்சகோதரிகள் இல்லம்
*DMI சபை அருட்சகோதரிகள் இல்லம்
*புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் இல்லம்.
*புனித அசிசி மருந்தகம் (மறைமாவட்ட நிர்வாகம்)

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள் :

*புனித அசிசி நடுநிலைப்பள்ளி, கருமந்துறை (மறைமாவட்ட நிர்வாகம்)

*புனித அன்னை தெரசாள் தொடக்கப்பள்ளி, கலக்கம்பாடி (மறைமாவட்ட நிர்வாகம்)

*St. Joseph International CBSC School (DMI அருட்சகோதரிகள் நிர்வாகம்)

Assisi Institute of development ல் இயக்குநராக பணியாற்றிய குருக்கள்:

1. அருட்பணி. ஜெரன்டு மோவியேல் (1980-2006)
2. அருட்பணி. மார்டின் (2006-2008)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. அலெக்ஸ் பிரபு (2008-2011)
2. அருட்பணி. டேவிட் (2011-2012)
3. அருட்பணி. துரைராஜ் (2012-2017)
4. அருட்பணி. அமல் மகிமை ராஜ் (2017 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. அமல் மகிமை ராஜ் அவர்கள்.