809 தூய பரலோக மாதா ஆலயம், இராஜபாண்டிநகர்


தூய பரலோக மாதா ஆலயம்

முகவரி:  இராஜபாண்டிநகர், தூத்துக்குடி - 682 008

தூத்துக்குடி மாவட்டம்

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: தூத்துக்குடி

நிலை: கிளைப்பங்கு

பங்கு:  திருக்குடும்ப ஆலயம் -அற்புத குழந்தை இயேசு திருத்தலம், 

கால்டுவெல் காலனி, தூத்துக்குடி - 682 008

குடும்பங்கள்: 5

பங்குத்தந்தை: அருட்பணி. ரா.பி. பிரதீப்

திருப்பலி: மாதத்தின் முதல் ஞாயிறு மற்றும் மூன்றாவது ஞாயிறு மாலை 05:00 மணி 

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி

வழித்தடம்:

தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில், துறைமுக ரவுண்டானாவைத் தொடர்ந்த ரயில்வே பாலத்தின் முடிவில், வலதுபுற சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

Location map:

https://www.google.com/.../data=!4m5!3m4...

கிளைப் பங்கு வரலாறு:

1999ஆம் ஆண்டு அருட்பணி. ஜேம்ஸ் பீட்டர் அவர்கள் கால்டுவெல் பங்குத்தந்தையாக பணிப்பொறுப்பேற்ற போது, பங்கின் கிளைப் பங்ககான இராஜபாண்டி நகருக்கு இல்லம் சந்திப்பிற்குச் சென்றார். அந்தப் பகுதியின் பொறுப்பாளராக இருந்த திரு. மாது சவரிமுத்து அவர்கள், கத்தோலிக்க வீடுகளுக்கு பங்குத்தந்தையை அழைத்துச் சென்றார். 

இராஜபாண்டி நகரில் பெந்தகோஸ்து சபையினருக்கு சொந்தமான சிறிய புனித பவுல் ஆலயம் இருந்தது. கத்தோலிக்க மக்களுக்கென்று ஆலயம் இல்லாததாலும், தூரத்தில் உள்ள கால்டுவெல் காலனி பங்கு ஆலயத்திற்கு வர சிரமப்படுவதாலும், கத்தோலிக்க மக்கள் இந்த பெந்தகோஸ்து ஆலய வழிபாட்டிற்கு சென்று வந்தனர். 

இதனைத் தெரிந்து கொண்ட அருட்பணி. ஜேம்ஸ் பீட்டர் அவர்கள், தூய ஆவியாரால் தூண்டப்பட்டு, "இன்னும் சில மாதங்களில் இந்த ஆலயம் நமக்குச் (கத்தோலிக்கர்களுக்கு) சொந்தமாகும், இங்கு நாம் திருப்பலி நிறைவேற்றப் போகிறோம்" என்றார். இதனைக் கேட்டு கூடவேவந்த திரு. மாது சவரிமுத்து அவர்கள் மிகுந்த அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன்..!!!! "அது எப்படி சாத்தியமாகும்..?" என்று கேட்க! தூய ஆவியார் இப்படித்தான் உணர்த்துகிறார் என்றார் பங்குத்தந்தை. 

இல்ல சந்திப்பு முடிந்து, இல்லம் வந்த அருட்பணி. ஜேம்ஸ் பீட்டர் அவர்கள் "புனித பவுல் ஆலயத்தை எமக்குத் தந்துவிட்டபடியால் உமக்கு நன்றி ஆண்டவரே" என்று இடைவிடாமல் நன்றி சொல்லத் தொடங்கினார்.

மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ அவர்களிடம் தகவலை தெரிவித்துவிட்டு, பங்குத்தந்தையும், திரு. மாது சவரிமுத்து அவர்களும் இராஜபாண்டி நகர் புனித பவுல் ஆலய பாஸ்டரிடம் "இந்த ஆலயத்தை எமக்கு விலைக்குத் தர முடியுமா?" என்று கேட்டனர். நிச்சயமாகத் தர முடியாது. வேண்டுமானால் ‘எங்கள் வழிபாடு முடிந்தபின் உங்கள் திருப்பலி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதற்குரிய வாடகை தந்து விடுங்கள்’ என்றார் பாஸ்டர். இந்த ஏற்பாட்டை பங்குத்தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் விடாமல் தமது நன்றி மன்றாட்டை தொடர்ந்தார்.

ஒருநாள் அந்த ஆலய பாஸ்டரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தமக்கு மற்றொரு ஆலயம் உள்ளது. அதனை விரிவாக்க விரும்புகிறேன். ஆகவே இராஜபாண்டிநகர் ஆலயத்தை தங்களுக்கு விற்றுவிடத் தீர்மானித்துள்ளேன். 1,10,000 ரூபாய் தந்து இந்த ஆலயத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றார். அல்லேலூயா...! இயேசுவுக்கே புகழ்..! அடுத்த ஞாயிற்றுக்கிழமை பங்கு ஆலயத்தில் அறிவிப்பு வேளையில் இந்தத் தகவலை தெரிவிக்க, கால்டுவெல் காலனி பங்கு மக்கள் தாராளமாக காணிக்கையாக கொடுத்தனர். 

1999ஆம் ஆண்டில் இராஜபாண்டி நகர் ஆலயத்தை வாங்கி செப்பனிட்டு, ஆலயத்தை அடுத்துள்ள நிலப்பகுதியையும் வாங்கி சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது. விசுவாசத்துடன் கிடைத்த ஆலயம் என்பதால் "விசுவாச தேவாலயம்" என்று பெயரிட்டு மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிப்பு செய்யப்பட்டது. பின்னர் தூய பரலோக மாதா ஆலயம் என்ற பெயரில், கால்டுவெல் காலனி பங்கின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு இவ்வாலய வெள்ளிவிழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி ரா.பி. பிரதீப் அவர்கள்