511 கிறிஸ்து அரசர் ஆலயம், கெங்கவல்லி


கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம் : கெங்கவல்லி

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : ஆத்தூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :

1.) புனித லூர்து மாதா ஆலயம், வீரகனூர்

2.) புனித அந்தோணியார் ஆலயம், பனங்காடு

3.) புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கோபாலபுரம்

சிற்றாலயங்கள் இல்லாத கிளைப் பங்குகள்:

4.) ஒதியத்தூர்
5.) தெடாவூர்
6.) நடுவலூர்

பங்குத்தந்தை : அருட்பணி. தியோடர் செல்வராஜ்

குடும்பங்கள் : 250
அன்பியங்கள் : 18

திருவழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு : காலை 09.00 மணிக்கு திருப்பலி

திங்கள், செவ்வாய், புதன் : காலை 6.30 மணிக்கு திருப்பலி

வியாழன், வெள்ளி, சனி: மாலை 6.30 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணிக்கு திருப்பலி நற்கருணை ஆராதனை.

பங்கு திருவிழாவானது திருஅவையின் பொதுகாலத்தின் கடைசி ஞாயிறுகளில் கொண்டாடப்படும் ...

மண்ணில் மலர்ந்த குருக்கள் :*

1.) அருட்தந்தை. தாமஸ் மாணிக்கம் (சேலம் மறைமாவட்டம்)
2.) அருட்தந்தை. இளங்கோவன், (இருதய ஆண்டவர் சபை)
3.) அருட்தந்தை. அருள் சூசை, OCD
4.) அருட்சகோதரர் . ஜோசப் ராஜசேகர். பா (குருமட மாணவர்)

மண்ணில் மலர்ந்த அருட்சகோதரிகள் :*

1.) அருட்சகோதரி. பெ. சாந்தினி பிரான்சிஸ், SMMI
2.) அருட்சகோதரி. S. மார்கரேட் பெட்சி, FSAG
3.) அருட்சகோதரி. S. பாஸ்காமேரி, FSAG
4.) அருட்சகோதரி. V. லிஸியாமேரி, SDS

வழித்தடம் : ஆத்தூர் ---->கெங்கவல்லி -----> வீரகனூர் (அல்லது) தம்மம்பட்டி

Location map : https://maps.app.goo.gl/36CUf5HKoPkroj4P9

வரலாறு :

அருட்பணி. பிரிசார் அவர்கள் ஆத்தூரில் தங்கி அங்குள்ள மக்களின் ஆன்மீகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

1820ம் ஆண்டு அவர் ஆத்தூரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். அவர் ஆத்தூரை விட்டு வெளியேறும் முன் கெங்கவல்லியிலிருந்த மக்களில் ஒரு பகுதியினர் தங்களைக் கிறிஸ்துவ மறையில் ஏற்றுக்கொள்ளும்படி அவரிடம் வேண்டினர். எனவே, அம்மக்கள் கிறிஸ்துவ மறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1854-1857க்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு வியாகுல அன்னைக்கு சிறிய ஆலயம் கட்டப்பட்டது .

அருட்பணி. பிரிசார் அவர்களுக்கு உதவியாக இருந்த அருட்பணி. காந்தி அவர்கள் மேதகு. லவூவென்னான் ஆயரின் அனுமதியுடன் கெங்கவல்லி மற்றும் தம்மம்பட்டி பகுதியிலிருந்த கிறிஸ்தவர்களைத் தன்னுடைய கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தார்.

பின்பு 1873ம் ஆண்டின் இறுதியில் கோனேரிப்பட்டியில் அதிகப் பணி இருந்ததனால் குருக்களின் இருப்பிடம் கெங்கவல்லியிலிருந்து கோனேரிப்பட்டிக்கு மாற்றப்பட்டது.

1950ம் ஆண்டு கோனேரிப்பட்டியின் பகுதிகளையும் ஆத்தூர் பங்கின் ஒரு பகுதியையும் கொண்டு கெங்கவல்லி பங்கு நிறுவப்பட்டது.

நாட்கள் செல்லச் செல்லத் தேவைகள் அதிகரித்தன. மக்களின் இருப்பிடங்களும் அரசு அலுவலகங்களும் ஆலயத்தை விட்டு தொலைவில் இருந்ததாலும், மேலும் அப்போது ஆலயம் அமைந்திருந்த இடம் சுகாதாரமின்றி இருந்ததாலும்,

1984ம் ஆண்டு அருட்பணி. பொனால், MEP அவர்களால் தற்போதுள்ள கிறிஸ்து அரசர் ஆலயம் கட்டப்பட்டது.

பல வருடங்களாக பங்கு ஆலயம் மற்றும் பங்குத்தந்தையின் இல்லத்திலிருந்து மிகத் தொலைவிலிருந்த பள்ளியானது 1999 -ம் ஆண்டு அருட்பணி. மைக்கேல்ராஜ் செல்வம் அவர்களின் முயற்சியால் பங்கு ஆலயத்தின் அருகிலேயே கொண்டு வரப்பட்டு இயங்கி வருகிறது.

1999ல் பெல்ஜியம் மாணவர்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட 10 வீடுகள் ஏழைகளின் வாழ்வின் ஆதாரமாக உள்ளன.

கெங்கவல்லி பங்கின் கிளைப்பங்கான புங்கவாடி 2004ல் புதிய பங்காக உயர்த்தப்பட்டு வின்சென்ஷியன் தந்தையர்கள் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

கெங்கவல்லி பங்கிலிருந்து பெரியேரி, ஆரகலூர், கமக்கம்பாளையம், நாவலூர், சித்தேரி, கோபிநத்தம்பாளையம், சாத்தப்பாடி, புனல்வாசல், வேப்பம்பூண்டி, புலியங்குறிச்சி, இலுப்பநத்தம் ஆகிய ஊர்கள் சேர்க்கப்பட்டு தலைவாசல் என்ற புதிய பங்கு 03.06.2004 அன்று உருவாக்கப்பட்டது.

பங்கின் வளர்சிப் பணிகள்:

இவ்வாலயத்தின் சிறப்பு என்னவென்றால்... இவ்வாலயம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது ... மேலும்.. திவ்யநற்கருணை பேழை ஆனது ஆலய வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கும்..

புனித மரியாள் தொடக்கப்பள்ளியின் புதிய கட்டடம் அருட்பணி. மைக்கேல்ராஜ் செல்வம் அவர்களால் 1999ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு 2002ல் அருட்பணி. D. A. பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்டது.

அருட்தந்தை. D. மைக்கல் ராஜ் செல்வம் பணிக்காலத்தில், அவரது பெருமுயற்சியாலும் வழிகாட்டுதலாலும்.. அருட்தந்தையின் தலைமையில் Christ King Youth commision (CKYC) என்ற கெங்கவல்லி பங்கின் இளைஞர் குழுவோடு இணைந்து "உலக மீட்பர்" என்ற தலைப்பில் ஒலி-ஒளி பாஸ்கா நாடகம் 1997-ஆம் ஆண்டு புதிய ஆலயத்தில் முதன்முதலாக வெகுசிறப்பாக பல்வேறு மக்களின் மத்தியில் நடைபெற்றது..

ஆலயத்திற்கு மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்து அரசர் சுரூபம் ஆனது அருட்பணி. லியோ வில்லியம், பணிக்காலத்தில் வைக்கப்பட்டு அர்ச்சிக்கபட்டது ...

தற்போது உள்ள புதிய ஆலயம் கட்டப்பட்டு, 25- ம் ஆண்டு நிறைவுப் பெற்றதன் நினைவாக... "புனித லூர்து அன்னை கெபி" ஆனது அருட்பணி. பிரசன்னா அவர்கள் பணிக்காலத்தில் முன்னாள் ஆயர். மேதகு.செ. சிங்கராயன், அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்தந்தையின் முயற்சியாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்பும் பல்வேறு மக்களின் உதவியாலும் அழகுற கட்டியெழுப்பப்பட்டு கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று முப்பெரும் விழாவாக (ஆலயத்தின் 25-ஆண்டு நிறைவு விழா, கிறிஸ்து அரசர் பெருவிழா, கெபி திறப்பு விழா) என அர்ச்சிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது

அருட்பணி. ஜெயசீலன் பணிக்காலத்தில், அவரது முயற்ச்சியாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியாலும் பங்கு ஆலயத்தில் வண்ணம் தீட்டப்பட்டு , ஆலயத்தின் பீடத்தில் அழகிய‌ ஓவியம் வரையப்பட்டது. ஆலயத்திற்கு அழகிய நுழைவுவாயில் அமைக்கப் பட்டது. தற்போது பங்குத்தந்தை இல்லத்தின் முன்பு அமைந்திருக்கும் புனித சூசையப்பர் கெபியானது வைக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும் ஆலயத்தின் ஒரு புறத்தில் "கிறிஸ்து அரசர் அரங்கம்" அமைக்கப்பட்டது

தற்போதைய பங்குத்தந்தை. அருட்பணி. தியோடர் செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் ஆலயத்தின் உள்ளே தரைதளம் புதிதாக அமைக்கப்பட்டு ..., ஆலயத்திற்கு வெளியே(முன்புறம் முழுவதும்) கல் பதிக்கப்பட்டது.

பங்கில் உள்ள பக்தசபைகள் :

1.) பங்குப்பேரவை
2.) வின்சென்ட் தே பால் சபை
3.) மரியாயின் சேனை
4.) கிறிஸ்து அரசர் இளையோர் இயக்கம்(CKYC)
5.) பீடச்சிறார்கள் இயக்கம்
6.) மறைக்கல்வி மாணவ-மாணவியர்கள்
7.) பாடகற்குழு

பங்கில் உள்ள இல்லங்கள்:

1.) மறைமாவட்ட பங்கு குரு இல்லம் (PRESBYTERY)
2.) குளூனி கன்னியர்கள் இல்லம்

பங்கில் உள்ள பணிகள்:

1.) கல்விப்பணி:
புனித மரியாள் RC தொடக்கப்பள்ளி (மறைமாவட்டத்தின் நிர்வாகம்)

2.) மருத்துவப்பணி :*
ஆரோக்கிய மாதா மருத்துவமனை (குளூனி கன்னியர்கள் நிர்வாகம்)

3.) சமூகப்பணி :*
ஆரோக்கிய மாதா சமூக சேவை மையம் (குளூனி கன்னியர்கள் நிர்வாகம்)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. பொனால் (1969-1984)
2. அருட்பணி. ஹென்றி ஜார்ஜ் (1984-1985)
3. அருட்பணி. P. சேவியர் (1985-1990)
4. அருட்பணி. ஆரோக்கியராயர் (1990-1992)
5. அருட்பணி. C. மைக்கேல் (1992-1994)
6. அருட்பணி. A. ஜோசப் (1994-1996)
7. அருட்பணி. டி. மைக்கேல்ராஜ் செல்வம் (1996-1999)
8. அருட்பணி. D. A. பிரான்சிஸ் (1999-2004)
9. அருட்பணி. L. டேவிட் (2004-2007)
10. அருட்பணி. லியோ வில்லியம் (2007-2009)
11. அருட்பணி. புஷ்பநாதன் (2009-2011)
12. அருட்பணி. பிரசன்னா (2011-2013)
13. அருட்பணி. அந்தோணி மரிய ஜோசப் (2013- ஆறு மாதங்கள்)
14. அருட்பணி. ஜெயசீலன் (2013-2016)
15. அருட்பணி. தியோடர் செல்வராஜ் (2016 முதல் தற்போது வரை..)

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. தியோடர் செல்வராஜ் அவர்கள்.

புகைப்படங்கள் : சகோதரர் ஆகாஷ். ஏ.