840 அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஒத்தையால்

        

அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம்: ஒத்தையால், பிரான்சேலியன் நகர், சாத்தூர் வழி, ஒ.மேட்டுப்பட்டி அஞ்சல், 626203

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விருதுநகர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், புல்லக்கவுண்டன்பட்டி

2. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், ஏழாயிரம்பண்ணை

3. புனித சூசையப்பர் ஆலயம், மடத்துப்பட்டி

4. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், சோலைப்பட்டி

5. கிறிஸ்து அரசர் ஆலயம், வல்லம்பட்டி

6. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், மார்க்கநாதபுரம்

7. புனித பதுவை அந்தோனியார் ஆலயம், அன்பின் நகரம்

8. திருஇருதய ஆண்டவர் ஆலயம், மேலப்புதூர்

9. திருஇருதய ஆண்டவர் ஆலயம், அச்சன்குளம்

10. புனித இஞ்ஞாசியார் ஆலயம், நடுச்சூரங்குடி

11. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், ஸ்ரீரெங்காபுரம்

பங்குத்தந்தை அருட்பணி. L. ஜெயராஜ், MSFS

தொடர்பு எண்: +91 73394 28733

குடும்பங்கள்: 15

அன்பியங்கள்: 2

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

வியாழன் மாலை 06:30 மணி அற்புத குழந்தை இயேசுவின் நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வியாழன் மாலை 06:30 மணிக்கு நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், அசனவிருந்து. (ஒவ்வொரு மாதமும் ஒரு கிளைப்பங்கு இறைமக்கள் திருப்பலியை சிறப்பிக்கின்றனர்.)

திருவிழா: ஜனவரி மாதம் 26,27,28,29 ஆகிய தேதிகளில் 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. A. ஜெகநாதன், MSFS

2. அருட்பணி. A. மெசியா, CMF

3. அருட்சகோதரி. சுகுணா, SAP

4. அருட்சகோதரி.‌ M. ஜோஸ்பின் வினிதா, SMMI

வரலாறு:

ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு ஆலயமானது கிழக்கில் சாத்தூர், மேற்கில் சிவகாசி, வடக்கில் ஆர்.ஆர் நகர், தெற்கில் கோவில்பட்டியையும் எல்லையாகக் கொண்டு விளங்குகிறது. 

மதுரை உயர் மறைமாவட்டத்தில் இருந்து இயேசு சபை குருக்கள், சாத்தூர் பங்கை மையமாகக் கொண்டு ஒத்தையால் பகுதியில் மறைபரப்பு பணி செய்ததன் காரணமாக, சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக் கொண்டனர். சாத்தூர் பங்கின் கீழ் செயல்பட்டு வந்த ஒத்தையால் கிராமத்தில் ஓடுவேய்ந்த பள்ளிக்கூடம் மற்றும் ஆலயம் இணைந்து கட்டப்பட்டு தமிழக முதல்வர் கர்மவீரர் K. காமராஜ் அவர்களால் 16.08.1959 அன்று திறந்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து வசதிகள் மற்றும் இப்பகுதியில் உள்ள மற்ற ஊர்களுக்கும் மையமாக ஒத்தையால் விளங்கியதால், 1999 ஆம் ஆண்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, 18 கிளைப்பங்குகளைக் கொண்டு (தற்போது 11 கிளைப்பங்குகள்), புனித பிரான்சிஸ்கு சலேசியார் வேத போதக சபை (MSFS) குருக்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. 

முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஜேம்ஸ் ஆனந்தராஜ், MSFS அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். பங்குத்தந்தை இல்லமானது கட்டப்பட்டு, 07.04.2001 அன்று மதுரை உயர் மறைமாவட்ட அப்போதைய இணை ஆயர் மேதகு Dr. அந்தோனி பாப்புசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. ஜேம்ஸ் ஆனந்தராஜ் பணிக்காலத்தில் ஒத்தையால் பிரதான வழித்தடத்தில், MSFS சபை மற்றும் மறைமாவட்ட ஒத்துழைப்புடன் நிலம் வாங்கப்பட்டு, அதில் தற்போது உள்ள புதிய ஆலயம் கட்டப்பட்டு, மதுரை உயர் மறைமாவட்ட அப்போதைய துணை ஆயர் மேதகு Dr. அந்தோனி பாப்புசாமி அவர்களால் 02.02.2002 அன்று அர்ச்சிக்கப்பட்டது. பழைய ஓடு வேய்ந்த ஆலயம் தற்போதும் உள்ளது.

ஆலய மணிக்கூண்டு புதுப்பிக்கப்பட்டு, 28.09.2013 அன்று மந்திரிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

தூய பாத்திமா மாதா கெபி கட்டப்பட்டு, 16.04.2017 அன்று அருட்பணி. K. இஞ்ஞாசிமுத்து, MSFS (Provincial Superior of South East India Province) அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

SMMI convent:

அருட்சகோதரிகள் இல்லம் கட்டப்பட்டு 17.04.2001 அன்று மதுரை உயர் மறைமாவட்ட அப்போதைய துணை ஆயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, அருட்சகோதரி மேரி வியான்னி (Provincial of Tamilnadu) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது இல்லமானது புதுப்பிக்கப்பட்டு, 27.01.2002 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. ஆர்.சி. தொடக்கப்பள்ளி, ஒத்தையால்

2. ஆர்.சி. தொடக்கப்பள்ளி, ஏழாயிரம்பண்ணை

3. ஆர்.சி. தொடக்கப்பள்ளி, அச்சன்குளம்

ஒத்தையால் பங்கின் பங்குத்தந்தையர்கள் பட்டியல் (MSFS):

1. அருட்பணி. ஜேம்ஸ் ஆனந்தராஜ் (1999-2002)

2. அருட்பணி. சகாயராஜ் (2002-2004)

3. அருட்பணி. நிக்கோலஸ் (2004-2007)

4. அருட்பணி. ஜோசப் சேவியர் (2007-2009)

5. அருட்பணி. சகாய செல்வன் (2009-2010)

6. அருட்பணி. ஸ்டீபன் சேவியர் (Asst.PP) (2009-2010)

7. அருட்பணி.‌ எபின் (2010-2013)

8. அருட்பணி.‌ பாஸ்கர் (Asst.P.P) (2011-2012)

9. அருட்பணி. ஆரோக்கியம் (Co-PP) (2012-2013)

10. அருட்பணி. தார்சியுஸ் (2013-2019)

11. அருட்பணி.‌ அந்தோனிராஜ் (Asst.PP) (2017-2018)

12. அருட்பணி. பிரான்சிஸ் தேவதாஸ் (2019-2020)

13. அருட்பணி. பிரிட்டோ (Asst.P.P) (2019-2020)

14. அருட்பணி. ஜெயராஜ் (2020---)

வழித்தடம்: சாத்தூர் -ஏழாயிரம்பண்ணை வழித்தடத்தில், ஒத்தையால் பிரான்சேலியன் நகர் அமைந்துள்ளது.

Location map: Infant Jesus Church

https://maps.app.goo.gl/oMeCGapFZGH5kiU1A

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜெயராஜ், MSFS அவர்கள்

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: சசி என்கிற சாலமோன் ராஜா (புல்லக்கவுண்டன்பட்டி ஆலய உபதேசியார்)