534 புனித ரீட்டா ஆலயம், சிக்காரிபாரா

  

புனித ரீட்டா ஆலயம்

இடம் : சிக்காரிபாரா, 816118

மாநிலம் : ஜார்க்கண்ட்
மாவட்டம் : டும்கா
மறை மாவட்டம் : டும்கா (Dumka catholic diocese)
மறை வட்டம் : சிக்காரிபாரா

நிலை : பங்கு ஆலயம்
கிளைப்பங்குகள் : 22 (ஆறு இடங்களில் சிற்றாலயங்கள் உள்ளன.)

பங்குத்தந்தை : அருட்பணி. M. அல்போன்ஸ் ராஜ்

குடும்பங்கள் : 132 கிராமங்களில் 8000 மக்கள்.

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணி மற்றும் காலை 09.00 மணி.

வாரநாட்களில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு

திருவிழா : மே மாதத்தில்.

Location map : St.Rita Church Shikaripara
Shikaripara, Jharkhand 816118
https://maps.app.goo.gl/Ggpxetpkbc65vL6R6

வரலாறு :

ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டாவது தலைநகர் என்று அழைக்கப்படும் டும்கா மாவட்டத்தில் உள்ள அழகிய இடம் சிக்காரிப்பாரா. இங்கு வாழும் மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

சிக்காரிபாராவில் மறைப்பரப்பு பணியாளர்களின் நற்செய்தி அறிவிப்பின் பயனாக மக்கள் கத்தோலிக்கம் தழுவினர். 1987 ஆம் ஆண்டில் இப்பங்கு உருவாகி, திருப்பலி நடத்தப்பட்டு வந்தது.

கோலோங்னி உயர்மறைமாவட்டத்தின் (Archdiocese of Cologne) நன்கொடையில் 28.10.2002 அன்று ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று

25.06.2004 அன்று டும்கா மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூலியஸ் மராண்டி DD அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.

பின்னர் கெபி ஒன்று கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

22 கிளைப்பங்குகளில் 22 OCR (உபதேசியார்கள்) நியமிக்கப்பட்டு, இவர்களுக்கு சில பயிற்சிகள் கொடுக்கப்பட்டு மக்களுக்கு, ஜெபங்கள் சொல்லி கொடுப்பதுடன், நோயாளிகள் இல்லங்கள் சென்று ஜெபிப்பதுடன், தேவைகளுக்கு ஏற்ப குருக்களை அழைத்து நோயாளிகளை சந்திக்க வைப்பது, திருப்பலிக்கு உதவி செய்வதும் இவர்களது பணிகளாகும்.

பங்குத்தந்தை சுற்றியுள்ள கிராமங்களில் (சில பகுதிகளில் சாலை வசதிகள் கூட இருப்பதில்லை) சென்று மக்களின் ஆன்மீகத் தேவைகளை கவனிக்கின்றனர்.

சிக்காரிப்பாரா, டும்கா மறைமாவட்டத்தின் மறைவட்டமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

St. Rita's high school - என்கிற பள்ளிக்கூடமும்,

Sister of Charity (SCCG) - என்கிற சபை அருட்சகோதரிகள் இல்லமும் உள்ளது.

அருட்பணி. M. அல்போன்ஸ் ராஜ் அவர்கள் 2014 ஜூலை மாதத்தில் இப் பங்கின் பொறுப்பேற்று, கிராம மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ஓய்வின்றி, கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றி வருவதுடன், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார்கள்.

அருட்பணி. M. அல்போன்ஸ் ராஜ் அவர்கள் குமரி மாவட்டம், மறவன்குடியிருப்பு பங்கின் மண்ணின் மைந்தர் என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. M. அல்போன்ஸ் ராஜ் அவர்கள்.