186 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆவிச்சிப்பட்டி


புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம் : ஆவிச்சிப்பட்டி

மாவட்டம் : திண்டுக்கல்

மறை மாவட்டம் : திண்டுக்கல்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித பேதுரு ஆலயம் , நத்தம்

குடும்பங்கள் : 100

இயக்கங்கள் : அன்பியங்கள், ஸ்டார் பாய்ஸ்

ஞாயிறு திருப்பலி : மாதத்தின் முதல் ஞாயிறு

திருவிழா : டிசம்பர் மாதம் 03 ம் தேதி புனித பிரான்சிஸ் சவேரியார் மற்றும் செப்டம்பர் மாதம் அன்னை வேளாங்கண்ணி

ஆவிச்சிபட்டிக்கு எப்படி போவது :

அருகில் ரயில் மற்றும் பேருந்து நிலையம்:
திண்டுக்கல் ரயில்வே நிலையம்:: 34.6km.
மதுரை ரயில்வே நிலையம்:: 37km.

அருகில் உள்ள நகரங்கள் :
மதுரை-38km , சிவகங்கை- 47km, புதுக்கோட்டை – 62km, திருச்சிராப்பள்ளி – 70km,

வரலாறு :

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 39 கிலோமீட்டரில் உள்ள ஒரு நகராட்சி நத்தம், மற்றும் நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய அழகிய கிராமம் ஆவிச்சிப்பட்டி, இங்குதான் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் சுமார் 145 ஆண்டுகள் பழமையானது. ஆனால் கஜா புயலின்போதும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கம்பீரத்துடன் காணப்பட்டது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, விவசாயமே இங்கு முதன்மை தொழிலாக இருந்தது. தற்போது மக்கள் பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

பெரும்பாலான ஆண்கள் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலைப் பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கட்டிடப் பணிகளி்ல் ஈடுபட்டுள்ளனர். அரசு பணி செய்வோரில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு சுமார் 70 விழுக்காட்டினர் கான்கிரிட் வீடுகளிலும் 25 விழுக்காட்டினர் ஓட்டு வீடுகளிலும் மற்றவர்கள் ஓலை குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆவிச்சிப்பட்டி ஊர் 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற்றுள்ளது.

பெரும்பாலான மக்கள் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்கள். ஊரின் நடுவே ஆலய வளாகத்தில் 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆ.சி ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகின்றது.

இந்த ஆலயம் 2012 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது, மற்றும் ஆலய உட்புறமானது மிகவும் அழகாக காணப்படுகிறது.

ஆலயத்தில் தினமும் மாலை வேளையில் ஜெபமாலை நடைபெறுகின்றது. இதில் பல்வேறு மக்களும் கலந்து கொண்டு ஜெபமாலை சொல்லி ஜெபித்து இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

இவ்வூர் மக்கள் தொழில் தேடி சென்னை, மதுரை மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே வாழ்வதால், தற்போது இப்பங்கில் குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகின்றது, மற்றும் இம்மக்கள் பல ஊர்களில் இருந்தாலும் திருவிழாவின் போது வந்து சிறப்புறச் செய்வார்கள்.

புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..!