இடம் : வடக்கு செய்யூர்
மாவட்டம் : செங்கல்பட்டு
மறைமாவட்டம்: செங்கல்பட்டு
மறைவட்டம்: செய்யூர்
நிலை : பங்குத்தளம்
சிற்றாலங்களுடன் கூடிய கிளைப்பங்குகள்:
1. தூய சகாய மாதா ஆலயம், மடையம்பாக்கம்,
2. குழந்தை இயேசு ஆலயம், பாக்கூர்,
3. தூய லூர்து மாதா ஆலயம், பூஞ்சேரி,
சிற்றாலயங்களற்ற
கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் வசிக்கும் பகுதிகள்
சால்ட்காலணி
சுன்டிவாக்கம்
சீக்கினாங்குப்பம்
(Marg)
பங்குத்தந்தை: அருட்பணி. M. ஆன்றனி ஸ்டார்லின், OMD
உதவி பங்குத்தந்தை: அருட்பணி. அபிஷேக் ரொசாரியோ, OMD
குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 6
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி: காலை 08.00 மணிக்கு
திங்கள், புதன், வியாழன், சனி திருப்பலி : காலை 06.30 மணி
செவ்வாய் மாலை 06.30 மணி நவநாள், திருப்பலி
வெள்ளி மாலை 06.30 மணி திருப்பலி நற்கருணை ஆசீர்
முதல் செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு குணமளிக்கும் சிறப்பு திருப்பலி
பங்கின் ஆண்டுத்திருவிழா:
ஜூன் 13 ம் தேதி, புனித அந்தோணியார் திருவிழா.
புனித தோமையார் திருநாள்:
ஜூலை 3ம் தேதி.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருட்பணி. M. பெஞ்சமின் நேசமணி (செங்கை மறைமாவட்டம்)
2. அருட்பணி. R. ஜெயராஜ்
(செங்கை மறைமாவட்டம்)
அமைவிடம்:
சென்னை to புதுவை இ. சி. ஆர் சாலை, எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் - செய்யூர்- வடக்கு செய்யூர்
NH45 சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் - சித்தாமூர்- செய்யூர்- வடக்கு செய்யூர்
Location map : St. Anthony church
Ammanur, Tamil Nadu 603302
https://maps.app.goo.gl/vHNPJQVPgLqeAVaq7
பங்கின் வரலாறு:
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் மிகவும் தொன்மையான பங்குகளில் செய்யூர் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய பங்கு தலமும் ஒன்றாகும்.
செய்யூர் பங்கின் முதன்மை கிளைப் பங்காக விளங்கியதும், செய்யூர் ஊராட்சியின் வடக்குப் பகுதியாக விளங்கிவருவதும் வடக்கு செய்யூர் ஆகும். 2018 ஜூன் 2 நாள் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் நீதிநாதன், D.D அவர்களால் வடக்கு செய்யூர் தனிப்பங்காக தரம் உயர்த்தப்பட்டு சிறப்புற செயல்பட்டு வருகிறது.
பங்கின் முதல் பங்குத்தந்தையாக இறையன்னை சபையை (OMD) சேர்ந்த அருட்பணி. ஆன்றனி ஸ்டார்லின், OMD அவர்கள் பொறுப்பேற்று பங்கை சீரிய முறையில் வழிநடத்தி வருகிறார்.
வடக்கு செய்யூரில் கி.பி.1842 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே கத்தோலிக்க திறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1842 ஆம் ஆண்டு மேதகு ஆயர் போணான் ஆண்டகை கிறிஸ்துவ மக்களுக்கு உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கியதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
வடக்கு செய்யூரில் தற்போதுள்ள ஆலயம் 1995 ஆம் ஆண்டு அருட்தந்தை கே.ஜே. பிரான்சிஸ் அடிகளால் கட்டிமுடிக்கப்பட்டு 05.12.1995 அன்று மேதகு பேராயர். டாக்டர் அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது. தற்போது இவ்வாலயம் வெள்ளிவிழா ஆண்டை
கொண்டாடி வருகிறது.
மேலும் இவ்வாலயம் இவ்வூரில் கட்டப்பட்ட நான்காவது ஆலயமாக அறியப்படுகிறது. 1842 ஆம் ஆண்டு மேதகு ஆயர் போணான் தங்கிய ஆலயம் முதல் ஆலயம் ஆகும். அதன்பிறகு
1970 க்கு முன் தற்போதுள்ள பள்ளிக்கு எதிரே ஓடு வேயப்பட்டு சிறு ஆலயமாக இருந்தது இரண்டாவது ஆலயமாகும். 1970 ஆம் ஆண்டுவாக்கில் அருட்பணி. திவ்வியநாதர் அடிகளால் பள்ளிக்கு வலதுபுறம் கட்டப்பட்டது மூன்றாவது ஆலயமாகும்.
புதுவை கடலூர் உயர் மறைமாவட்டம், பின்னர் சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம் என இரண்டு உயர்மறைமாவட்டங்களோடு இணைந்திருந்த இப்பகுதியில் இயேசு சபை குருக்கள், கப்புச்சின் சபை குருக்கள், MEP குருக்கள் என பலர் இறைப்பணி செய்துள்ளனர்.
தற்போது இப்பங்கானது செங்கல்பட்டு மறைமாவட்டத்தில் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களின் மேலான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
புனித அந்தோணியார் குருசடி (கெபி)
1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் குருசடியில் இன்றளவும் மக்கள் சாதி, மத வேறுபாடின்றி பக்தியுடன் செபித்து வருகின்றனர்.
தூய பாத்திமா அன்னை கெபி:
2010 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தில் குருக்கள் ஆண்டின் நினைவாக தூய பாத்திமா அன்னை கெபி கட்டப்பட்டு, அன்னையின் திரு சொரூபம் நிறுவப்பட்டது.
புனித தோமையார் பாத பதிவு தலம் :
ஆலய வளாகத்தில் மண்ணில் புதைந்திருந்த சிறு பாறையில் பாதப் பதிவு, கைவிரல் பதிவு, முழங்கால் தடம், சிறு சிலுவை அடையாளம் என சென்னை சின்னமலையில் காணப்படும் புனித தோமையாரின் பதிவுகளைப் போன்றே காணப்படுகிறது.
புனித தோமையார் சோழநாட்டு மன்னன் மகாதேவன் அழைப்பின் பேரில் சென்னை சாந்தோம், சின்னமலை, பகுதிகளில் மறைப்பரப்பு பணி செய்த போது, கிழக்கு கடற்கரையாகிய சோழமண்டல பகுதிகளில் மறைப்பரப்பு பணி செய்ததாக கூறப்படுகிறது. அக்கால கட்டத்தில் செய்யூரானது சோழர்களின் குறுநில தேசமாக விளங்கிய கிழக்கு கடற்கரை பகுதியாக விளங்கியது. மேலும் செய்யூர் சென்னைக்கு அருகிலேயே உள்ளது. எனவே புனித தோமையார் வடக்கு செய்யூருக்கும் வந்து நற்செய்திப் பணி செய்ததாக நம்பப்படுகிறது. புனித தோமையரின் பாதப் பதிவுகள் உள்ள பகுதியில் கெபி அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு நம்பிக்கையோடு செபிப்பவர்கள் பல்வேறு புதுமைகளையும் பெற்று வருகின்றனர்.
பங்கின் பாதுகாவலரான கோடி அற்புதர் புனித அந்தோணியார் மற்றும் இந்தியாவின் திருத்தூதர் கிறிஸ்துவின் சீடர் புனித தோமையார் என இரு வல்லமை மிக்க புனிதர்களின் பரிந்துரையால் இவ்வாலயத்தில் நம்பிக்கையோடு செபித்து மக்கள் வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர். இறையாசீர் பெற்று இறையனுபவத்தில் திளைத்திட நீங்களும் வாருங்கள் வடக்கு செய்யூர் மண்ணுக்கு....
பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:
ஆர். சி. தொடக்கப்பள்ளி, வடக்கு செய்யூர்
ஆர். சி. நடுநிலைப்பள்ளி, பூஞ்சேரி
தொடர்புக்கு:
Rev.Fr. M. Antony Starlin
பங்குத்தந்தை
புனித அந்தோணியார் ஆலயம் 5வடக்கு செய்யூர் செய்யூர் - 603302 செங்கல்பட்டு மாவட்டம்
Contact: 8608478834 northcheyyurstantony@gmail.com
YouTube TV: North Cheyyur St, Antonys TV
தகவல் மற்றும் புகைப்படங்கள்: அருட்பணி. ஆன்றனி ஸ்டார்லின், OMD