667 புனித சூசையப்பர் ஆலயம், இளமங்கலம்

     

புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : இளமங்கலம், தீவனூர் வழி, விழுக்கம் (PO), திண்டிவனம் தாலுகா

மாவட்டம்: விழுப்புரம்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: திண்டிவனம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய லூர்து அன்னை ஆலயம், மேல்சித்தாமூர்

பங்குத்தந்தை : அருள்திரு. அ. ஆரோக்கியதாஸ்

குடும்பங்கள்: 120

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

மாதத்தின் முதல் புதன்கிழமை மாலை 06:30 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள், திருப்பலி

திருவிழா : மார்ச் 19-ம் தேதி நிறைவுபெறும் வகையில் மூன்று நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்திரு. R. வனத்துராஜ், HGN

2. அருள்சகோதரி. லூர்துமேரி, FSAG

3. அருள்சகோதரி. புனிதா மேரி, FSAG

வழித்தடம் : திண்டிவனம் செஞ்சி வழித்தடத்தில், தீவனூர் என்னும் ஊரிலிருந்து 4கி.மீ தொலைவில் இளமங்கலம் உள்ளது.

Location map:

St. Joseph's Church

Ilamangalam, Tamil Nadu 604207

https://maps.app.goo.gl/yR1YZiwGH5FKShm16

வரலாறு:

மேல்சித்தாமூர் பங்குத்தந்தை அருள்திரு. ஜான்மரி ஷவனல் அவர்களின் மறைப்பரப்புப் பணியால் இளமங்கலம் பகுதியில் பலர் கிறிஸ்தவம் தழுவினர்.

கி.பி 1915 ஆம் ஆண்டில் அருள்திரு. ஜான்மரி ஷவனல் அவர்களால் இளமங்கலத்தில் ஓலைக்குடில் ஆலயம் கட்டப்பட்டு, மேல்சித்தாமூரின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

1954 ஆம் ஆண்டு பழைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது.

பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, தற்போதைய புதிய ஆலயமானது அருள்திரு. S. ஆனந்தராஜ் அவர்களின் பணிக்காலத்தில் துவக்கப்பட்டு, தொடர்ந்து அருள்திரு. அ. ஆரோக்கியதாஸ் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் கட்டிமுடிக்கப்பட்டு, அப்போதைய புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி ஆனந்தராயர் அவர்களால் 27.09. 2013 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

ஆலயத்தின் கெபிகள்:

1. இருதய ஆண்டவர் கெபி

2. புனித ஆரோக்கிய மாதா கெபி

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. இளையோர் குழு

2. ஜெபக்குழு

3. பீடச்சிறார்

4. மறைக்கல்வி மன்றம்

5. பாடகற்குழு

கல்வி நிறுவனம்:

ஆர். சி துவக்கப்பள்ளி, இளமங்கலம்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்திரு. A. ஆரோக்கியதாஸ்