15 இயேசுவின் திரு இருதய ஆலயம், பள்ளியாடி

   

இயேசுவின் திரு இருதய ஆலயம்.

இடம் : பள்ளியாடி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்கு தளம்
கிளை : தூய பேதுரு ஆலயம், சேரிக்கடை.

குடும்பங்கள் : 950
அன்பியங்கள் : 25

ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு.

பங்குத்தந்தை (2018): அருட்பணி பெனடிக்ட் M. D ஆனலின்.

திருவிழா : ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பத்து நாட்கள்.

வரலாறு

கிபி 1910 ம் ஆண்டு உருவான இப்பங்கு தளமானது புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கினாவிளை யின் கிளைப்பங்காக இருந்தது. பின்னர் 1930 ல் தனிப் பங்கானது.

குழித்துறை மறை மாவட்டத்தில் வின்சென்ட் டி பால் சபை இந்த ஆலயத்தில் தான் முதன் முதலாக துவக்கப் பட்டது. இச் சபையினர் சிறப்பாக செயல்பட்டு நிதிகளை சேகரித்து வருடந்தோறும் ஒரு ஏழைக்கு "நிரந்தரக் குடில்" என்ற பெயரில் இல்லம் கட்டி, அதனை கிறிஸ்துமஸ் விழா நேரத்தில் அவர்களுக்கு வழங்குகின்றனர்.

மேலும் தற்போது இங்கு செயல் பட்டு வந்த பெல்ஜியம் நாட்டு மிஷனரிகள் நினைவாக "பள்ளியாடி -பெல்ஜியம் மிஷனரிகள்" இணைந்து ஒரு நிரந்தர வைப்புத்தொகை (fund) உருவாக்கி அதன் மூலம் புற்று நோயாளிகளின் (cancer) சிகிட்சைக்கும் அவர்களின் வாழ்விற்கும் உதவி செய்து வருகின்றனர் என்பது போற்றுதலுக்குரியதாகும்.

இவ்வாறு நற் செயல்கள் பல புரிந்து வருகிற இப்பங்கு மக்களுக்கு நமது குழுவினர் சார்பிலும் மற்றும் உங்கள் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.