486 கிறிஸ்து அரசர் ஆலயம், நாமக்கல்


கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம் : நாமக்கல்

மாவட்டம் : நாமக்கல்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : நாமக்கல்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. திருஇருதய ஆண்டவர் ஆலயம், வள்ளிபுரம், நாமக்கல்
2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், கீரம்பூர், நாமக்கல்
3. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், தும்மங்குறிச்சி, நாமக்கல்
4. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மாரப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்
5. புனித சவேரியார் ஆலயம், கருப்பம்பட்டி, நாமக்கல்
6. புனித லூர்து அன்னை ஆலயம், மேட்டுப்பட்டி, நாமக்கல்
7. புனித சவேரியார் ஆலயம், வரதராஜபுரம், நாமக்கல்

குடும்பங்கள் : 500
அன்பியங்கள் : 15

பங்குத்தந்தை : அருட்தந்தை. A ஜான் அல்போன்ஸ்

இணைப் பங்குத்தந்தை : அருட்தந்தை. அருள்சுந்தர்

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.

வார நாட்களில் திருப்பலி :

*திங்கள், புதன், வெள்ளி காலை 06.30 மணிக்கு திருப்பலி.

*செவ்வாய், வியாழன், சனி மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

*மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை.

திருவிழா : நவம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறு கொடியேற்றத்துடன் துவங்கி, நவம்பர் மாதம் நான்காம் ஞாயிறன்று இரவு தேர்ப்பவனியோடு நிறைவுபெறும்.

மண்ணின் மைந்தர்கள் :

1. அருட்பணி. சார்லஸ் ஹெஸ்டன் ஜோஸப், (கோடி பங்கு, வையாமிங் மறைமாவட்டம், அமெரிக்கா)

2. அருட்சகோதரர். ஆல்பினஸ் மார்டின் ( இயேசு சபை)

3. அருட்சகோதரர். டேனி ஜான் (கிளரிஷியன் சபை)

4. அருட்சகோதரி. ஃபில் பிரான்சிஸ் (திருச்சிலுவை சகோதரிகள் இல்லம், கொல்கத்தா பிராவின்ஸ்)

Church Facebook address : https://www.facebook.com/christ.year.94

வழித்தடம் : நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 300 அடி தொலைவில், திருச்சி பிரதான சாலையில் அமைந்துள்ளது.

Location map :

ஆலய வரலாறு :

பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே கிறிஸ்துவ விசுவாசம் நாமக்கல் பகுதியில் வேரூன்றி வளர்ந்துள்ளது. குறிப்பாக திப்பு சுல்தான், மைசூர் மாகாணத்தின் மீது படையெடுத்து கைப்பற்றிய போது சிதறியோடிய கிறிஸ்துவ மக்கள் பலர் சேலம், ஓமலூர், சங்ககிரி மற்றும் நாமக்கல் பகுதிகளில் குடியேறி கிறிஸ்துவ விசுவாசத்திற்கு சான்று பகர்ந்து வாழ்ந்துள்ளனர்.

அப்போதைய கும்பகோணம் மறைமாவட்டத்தின் தோலூர்பட்டி பங்கின் கிளைப்பங்கான நாமக்கல்லில் மறைப்பணியாற்ற 26.07.1926 ல் கும்பகோணம் பேராலய பங்குத்தந்தை அருட்பணி. ஹென்றி புரூனியர் பணியமர்த்தப்பட்டார் . இவர் கொசவம்பட்டியில் தங்கியிருந்து நாமக்கல்லில் ஒரு சிற்றாலயத்தையும் பங்குத்தந்தை இல்லத்தையும் கட்டினார். அருட்தந்தை. ஹென்றி புரூனியர் 1927 ல் நாமக்கல்லில் குடியேறியவுடன் நாமக்கல் 1928 ல் ஒரு பங்காக உயர்த்தப்பட்டது .

1930 ல் சேலம் மறைமாவட்டம் உருவானபோது , கும்பகோணம் மறை மாவட்டத்திலிருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டு, சேலம் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

நாமக்கல் பங்குத்தந்தை அருட்பணி. ஹென்றி புரூனியர் சேலம் மறைமாவட்டத்தின் முதல் ஆயரானார் . காலத்தேவைகளுக்கு ஏற்ப 1961 - ல் அருட்பணி. மரியோ ரொடோஷினி நாமக்கல்லில் சுமார் 50 கத்தோலிக்க குடும்பங்களுக்கு போதுமான கற்களாலான ஆலயம் ஒன்றை கட்டினார் .

கல்வி நிறுவனங்களிலும், தொழிலகங்களிலும் , வியாபாரத்திலும், அரசு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு தேடி ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாமக்கல்லில் குடியேறினர். அதன் காரணமாக 1960 - ல் 50 -ஆக இருந்த கத்தோலிக்க குடும்பங்கள் இன்று 480 குடும்பங்களாக வளர்ந்துள்ளன.

எனவே, மக்களின் தேவைக்கேற்ப புதிய ஆலயம் ஒன்று நாமக்கல்லுக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்த முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. ச . சவரி அவர்கள் திட்டமிட்டார் . அதன்படி 2011 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 - ம் நாள் சேலம் ஆயர் மேதகு. சிங்கராயன் அவர்கள் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் மந்தரித்து பணிகளை தொடங்கி வைத்தார்.

புதிய ஆலயமானது அழகுற கட்டப்பட்டு நவம்பர் மாதம் 22.11.2014 அன்று அர்ச்சிக்கப்பட்டது. பங்கின் எதிர்கால வளர்ச்சியையும், வருங்கான சந்ததியினரையும் மனதில் கொண்டு இவ்வளவு பெரிய அழகுமிகு ஆலயத்தை தொடங்கிய அருட்தந்தை. சவரி மற்றும் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து அர்ச்சிப்புவிழாவை சிறப்பாக நடத்திய அருட்தந்தை. D. A. பிரான்சிஸ் ஆகியோர் நாமக்கல் பங்கு வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பிடித்துள்ளனர்.

இப்போதுள்ள பங்குத்தந்தை ஜான் அல்போன்ஸ் அவர்களால் NGGO's காலனி என்னும் பகுதியில் அங்கு வசிக்கும் மக்களுக்காக "ஆரோக்கிய அன்னை அருட்தலம்" கட்டப்பட்டது..அந்த சிற்றாலயம் கடந்த வருடம் 2019 ஆகஸ்ட் 15ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு மாதத்தின் முதல் புதன் கிழமை மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும்.. அனைத்து வாரமும் புதன்கிழமை மாலை 6.30மணிக்கு நவநாள் செபம் நடைபெறும்.

பங்கில் பணிப்புரிந்த பங்குத்தந்தையர்கள் அன்றுமுதல் இன்று வரை :

1. அருட்தந்தை. லாபான் திபாஜான்பாப்டிஸ்ட் (1929) ( தமிழ் பயிலுதல் )
2. அருட்தந்தை.ஜூஸ்ஸோ ஆந்ரே (1930-1932)
3. அருட்தந்தை. J.L. உர்மான் ஜான் (1931-1939)
4. அருட்தந்தை. ஹாரோ பிரதெரிக் (1931) ( தமிழ் பயிலுதல்)
5. அருட்தந்தை. மத்தேயு தலச்சீரா (1933-1935 )
6. அருட்தந்தை. N. மத்தேயு தெக்கடம் (1933-1935 )
7. அருட்தந்தை. அலெக்சாண்டர் சாவேலி (1937-1941)
8. அருட்தந்தை. ரோக்கிநாராகட் (1936-1940)
9. அருட்தந்தை. P.A. சக்கரியாஸ் புலவேலில் (1940-1941)
10. அருட்தந்தை. ரிகோதியே ஆர்சென் (1941)
11. அருட்தந்தை. N. மத்தேயு தெக்கடம் (1942-1943)
12. அருட்தந்தை . பால்தாழதட் (1944-1945)
13. அருட்தந்தை. A. அந்தோணிசாமி (1946-1948)
14. அருட்தந்தை. ஒத்ரேன் ஜார்ஜ் (1949-1957)
15. அருட்தந்தை. வன்ரின் (1949)
16. அருட்தந்தை . குழந்தைசாமி (1950)
17. அருட்தந்தை. மௌரிஸ் (1951-1954)
18. அருட்தந்தை. ரொடஸ்கினி மாரியூஸ் (1954-1960)
19. அருட்தந்தை. T தாமஸ் கீராஞ்சீரா ( உதவி குரு) (1960-1961)
20. அருட்தந்தை. ஜார்ஜ் எடத்திபரம்பில் (1961-1964)
21. அருட்தந்தை. C.S. அந்தோணிசாமி (1964 )
22. அருட்தந்தை. M. ஆரோக்கியசாமி (1965-1968 )
23. அருட்தந்தை. S.A. செபாஸ்டின் (1968-1970)
24. அருட்தந்தை. M. ஜெகராஜ் (1971-1972)
25. அருட்தந்தை. M.அல்போன்ஸ் (1972-1976)
26. அருட்தந்தை. M. செல்வம் (1976-1983)
27. அருட்தந்தை. S. தியோடர் செல்வராஜ் (1983-1988)
28. அருட்தந்தை. S. அந்தோணிசாமி (1988-1991) (கம்போடியா ஆயர் )
29. அருட்தந்தை. அந்தோணி மரிய ஜோசப் (1991-1994)
30. அருட்தந்தை. S. லூர்துசாமி (1994-1996)
31. அருட்தந்தை. S. ஆரோக்கியசாமி (1996-2000)
32. அருட்தந்தை. A. துரைராஜ் (2000-2003)
33. அருட்தந்தை. R. மாசிலாமணி (2003-2008)
34. அருட்தந்தை. S. சவரி (2008-2013 )
35. அருட்தந்தை. D.A. பிரான்சிஸ் (2013 - 2018)
36. அருட்தந்தை. ஜான் அல்போன்ஸ் (2018 - தற்போது வரை)

ஆலயத்தில் செயல்படும் குழுக்கள்:

பாலர் சபை
பீடச்சிறுவர் குழு
இளம் கத்தோலிக்க மாணாக்கர் இயக்கம்
பங்கு இளையோர் குழு
பங்கு பாடற்குழு
இளையோர் பாடற்குழு
திருச்சிலுவை தோழர்கள் இயக்கம்
மரியாயின் சேனை
அன்பிய ஒருங்கிணைப்பு குழு

பங்கில் செயல்படும் கன்னியர் இல்லங்கள்:

திருச்சிலுவை கன்னியர் இல்லம் - பங்கில் மருத்துவமனை நிறுவி மருத்துவ பணியும், கல்வி பணியும் புரிகின்றனர்.

திருச்சி புனித அன்னாள் சபை - மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு "கலர் ஃபுல் சில்ட்ரன் சிறப்பு பள்ளி" ஒன்றை இயக்கி வருகின்றனர். மேலும் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான இல்லமும் அமைத்து பணி புரிகின்றனர்.

FMM அருட்சகோதரிகள் - வரதராஜபுரம் பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்றே சிறப்பான இல்லம் அமைத்து, சிறப்பான பணி புரிந்துவருகின்றனர் .

ஆலயம் சார்ந்த கல்விக் கூடங்கள் :

பாத்திமா RC நடுநிலைப்பள்ளி, நாமக்கல்.

புனித மரியன்னை RC துவக்கப்பள்ளி, மாரப்பநாயக்கன்பட்டி.

புனித மரி RC துவக்கப்பள்ளி, வள்ளிபுரம்.

புனித மரியன்னை RC துவக்கப்பள்ளி, தும்மங்குறிச்சி.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. A. ஜான் அல்போன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில், பங்கு இளையோர்.