204 புனித அன்னம்மாள் ஆலயம், வடக்குகோணம்


புனித அன்னம்மாள் ஆலயம்

இடம் : வடக்குகோணம், நாகர்கோவில் -4

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 243
அன்பியங்கள் : 9

பங்குத்தந்தை : அருட்தந்தை ரவி காட்சன் கென்னடி

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : ஆகஸ்ட் 15- ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

புனித அன்னம்மாள் ஆலய வரலாறு :

புனித சவேரியார் காலத்தில் கோட்டாறு திருச்சபை சீரும் சிறப்புமாக உள்நாட்டிலும், கடற்கரை கிராமங்களிலும் பரவி கிறிஸ்தவத்தை மக்கள் தழுவினர்.

1534- ல் கோவா மறை மாவட்டத்தின் கீழும், பிற்காலத்தில் கொச்சின் மறை மாவட்டத்தின் கீழும், 1853 முதல் கொல்லம் மறை மாவட்டத்தின் கீழும் கோட்டாறு திருச்சபை செயல்பட்டு வந்தது.

26-05-1930 அன்று கோட்டார் மறை மாவட்டம் புதிதாக உருவாக்கப் பட்ட போது கோணம் மக்கள் குருசடி பஞ்சவங்காடு புனித அந்தோணியார் பங்கு தளத்தின் கீழ் செயல்பட்டனர்.

காட்டோடைகள் நிரம்பிய கோணம் ஊரை, சவுளக்காரன் கோணம் என்று அழைத்தார்கள். (சவுளக்காரர்கள் மீன் விற்பதற்காக கட்டிய ஓடை) அழகிய சவளக்காரன் குளம் அமைந்த இப்பகுதியைச் சீர்படுத்தும் நோக்கில் 1903 -ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜாவால் நீர்பாசனத்திட்டமான அனந்தனாறு கால்வாய் அமைக்கப்பட்டது.

மழை நீரை சேமிக்கும் குளமான சவுளக்காரன் குளம் அனந்தனாறு வெட்டப்பட்ட பின் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதால் காட்டாற்று குளம், அனந்தன் குளம் எனப் பெயர் பெற்று, நீர் வளம் பெருகி இப்பகுதி செழுமையானது.

இன்றைய வடக்குகோணம் பங்கானது அக்காலத்தில் வழிபாடு நடத்த ஆலயம் இல்லாததால், மக்கள் குருசடி பங்கில் வழிபாடுகளில் கலந்து கொண்டும் வரி செலுத்தியும் வந்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரத்தை சார்ந்த சில குடும்பங்கள் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். இவர்களில் திரு. சம்மனசு என்பவர் கொழும்பு சென்று திரும்பி வந்த போது கொண்டு வந்த சந்தனமாதா (புனித அன்னம்மாள்) திருஉருவ படத்தை ஒரு முந்திரி மரத்தின் கீழ் வைத்து வழிபட்டு வந்தனர்.

இறைவனின் அருளாலும் மக்களின் கடின முயற்சியிலும் நிலம் வாங்கி ஓலைக்குடிசை கட்டி வழிபட்டு வந்தனர்.

அன்றைய பங்குத்தந்தையாக இருந்த முன்னாள் வேலூர் மறை மாவட்ட ஆயர் மேதகு சு. அந்தோணிமுத்து ஆண்டகை அவர்களின் முயற்சியாலும், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு 06-01-1964-ல் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இக்காலத்தில் குருசடி பங்கின் கிளைப்பங்கான 47 ஊர்களில் இவ்வூரும் ஒன்று.

வருடத்தில் கிறிஸ்து பிறப்பு, ஈஸ்டர் மற்றும் பெருநாட்களில் மட்டும் திருப்பலி வைக்கப்பட்டு, பின் மாதம் ஒருமுறை என மாற்றம் கண்டது.

அருட்தந்தை சூசை மரியான் அடிகளார் காலத்தில் மாதம் ஒருமுறை ஞாயிறு திருப்பலியும் வார நாட்களில் நேர்ச்சை திருப்பலிகளும் நிறைவேற்றப் பட்டன.

அருட்தந்தை கபிரியேல் அடிகளார் காலத்தில் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பாலர் பள்ளி ஆரம்பிக்கப் பட்டது.

குருசடி புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சொந்தமான தோப்பில் மேதகு ஆயர் ஆரோக்கிசாமி அவர்கள், 25 சென்ட் மனையை தெற்கு ஓரத்தில் வழங்கினார்கள். அப்பகுதியில் தற்போது புனித அன்னம்மாள் சமூக நலக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது.

புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு பங்குத்தந்தை அருட்பணி M. பெஞ்சமின் அடிகளார் முயற்சியால் மேற்கு ஜெர்மனி நாட்டு தொண்டு நிறுவனத்திடமிருந்து நிதி பெறப்பட்டு, மற்றும் பங்கு மக்களின் நன்கொடைகளாலும், ஒத்துழைப்பாலும் பணிகள் நிறைவு பெற்று பங்குத்தந்தை F. ஜோசப் ராஜ் அடிகளார் முன்னிலையில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் 10-08-1990 அன்று ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய கோபுரம் பழுதடைந்ததால் பங்கு மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு 23-04-2000 அன்று பேரருட்பணி குரூஸ் எரோணிமூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்தந்தை ஆ. பெஞ்சமின் காலத்தில் முடுதம் முறை நீக்கப்பட்டு முதன் முறையாக 30-12-1984 அன்று பங்குப்பேரவை ஏற்படுத்தப் பட்டது.

பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி சேகர் மைக்கேல் அவர்களின் முன்னிலையில் குருகுல முதல்வர் அருட்தந்தை ஜான் குழந்தை அவர்களால் 09-08-2002 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அதே நாளில் சமூக நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிய சத்துணவுக் கூடம் கட்டப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி பெஞ்சமின் அவர்களால் 07-12-2003 அன்று திறந்து வைக்கப் பட்டது.

குருசடி பங்கின் கிளைப் பங்காக இருந்த கோணம் ஊர், 31-05-2004 அன்று தனிப்பங்காக மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் உயர்த்தப்பட்டு, அருட்தந்தை அல்காந்தர் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

புனித ஆரோக்கிய அன்னை குருசடி கட்டப்பட்டு 31-10-2004 அன்று பங்குத்தந்தை அருட்பணி அல்காந்தர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் நிதியில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு 25-12-2005 அன்று திறந்து வைக்கப் பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பங்குப்பேரவை கட்டிடம் கட்டப்பட்டது.

புனித அன்னாள் சமூக நலக்கூடம் பங்குத்தந்தை அருட்பணி L. தார்சியுஸ் அவர்கள் காலத்தில் கட்டப்பட்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் 23-03-2008 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

அருட்தந்தை ஸ்பென்சர் செயிஸ் பணிக்காலத்தில் அதிகமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வளர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

பொன்விழாவின் சிறப்பைக் கூறும் வகையில் புனித அன்னம்மாள் பெனிபிட் ஃபன்ட் என்ற வங்கி 10-08-2013 ல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. வங்கி துவங்க, பொன்விழா குழுத்தலைவர் B. ஆல்பிரட் பெர்க்மான்ஸ் அவர்களின் பணி பாராட்டுக்குரியது.

இக்காலகட்டத்தில் கத்தோலிக்க சேவா சங்கமும் ஆரம்பிக்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2014 ம் ஆண்டு அருட்பணி G. மரிய சூசை வின்சென்ட் பணிக்காலத்தில் இவ்வால பொன்விழா ஜூபிலி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு சபைகள் இயக்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மேலும் இப்பங்கில் இயேசுவின் திரு இருதய சகோதரிகளின் நற்செய்திப் பணி சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

இப்பங்கில் பணியாற்றிய அருட்பணியாளர்கள் :

குருசடி பங்கில்

1. Fr ரிச்சர்டு ரொசாரியோ
2. Fr அம்புறோஸ் பெர்னாண்டஸ்
3. Fr O.R.P ஆன்றனி
4. Fr பெனடிக்ட்
5. Fr அலெக்சாண்டர்
6. Fr அந்தோணிமுத்து
7. Fr சூசை மரியான்
8. Fr டயனீஷியஸ்
9. Fr கபிரியேல்
10. Fr மரியதாசன்
11. Fr பெஞ்சமின் செபஸ்தியான்
12. Fr ஜோசப் ராஜ்
13. Fr S. வின்சென்ட்
14. Fr A. M ஹிலரி
15. Fr சேகர் மைக்கேல்
16. Fr பெஞ்சமின் லடிஸ்லாஸ்

தனிப்பங்கான பின்னர் :

1. Fr L ஆன்றனி அல்காந்தர்
2. Fr S. அருளப்பன்
3. Fr L. தார்சியுஸ் ராஜ்
4. Fr மார்ட்டீன் S அலங்காரம்
5. Fr S. ஸ்பென்சர் செயிஸ்
6. Fr G. மரிய சூசை வின்சென்ட்
7. Fr இம்மானுவேல்
8. Fr ரவி காட்சன் கென்னடி(தற்போது)

மண்ணின் இறை அழைத்தல்கள் :

1. Sis மரிய செல்வ மதலேன்
2. Sis அல்போன்சா
3. Sis பெல்சி

1.Fr சாம் பெரிக்ஸ் ஆன்றனி

தற்போது பங்குத்தந்தை அருட்பணி ரவி காட்சன் கென்னடி அவர்களின் சிறப்பான வழிநடத்துதலில் வடக்குகோணம் இறைசமூகமானது வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக முன்னேறி செல்கின்றது.