428 புனித வனத்து அந்தோணியார் ஆலயம், மணக்கொல்லை


புனித வனத்து அந்தோணியார் ஆலயம்

இடம் : மணக்கொல்லை, வரதராசன்பேட்டை.

மாவட்டம் : அரியலூர்
மறை மாவட்டம் : கும்பகோணம்
மறை வட்டம் : ஜெயங்கொண்டம்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய அலங்கார அன்னை பேராலயம், வரதராசன்பேட்டை

பங்குத்தந்தை & அதிபர் : அருட்பணி. L. வின்சென்ட் ரோச் மாணிக்கம்.

துணை அதிபர் : அருட்பணி. J. M. ஜோமிக்ஸ் சாவியோ

உதவிப் பங்குத்தந்தை : அருட்பணி. அருள் பிலவேந்திரன்

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : ஜனவரி மாதம் 9 முதல் 17 ஆம் தேதி வரையிலான 10 நாட்கள்.

Location map : Saint Vanathu Chinnappar Church Church St, Ponnangani Natham, Thennur, Tamil Nadu 621805

https://maps.google.com/?cid=14005645738202986374

வரலாறு :

புனித அலங்கார அன்னை பேராலயத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது மணக்கொல்லை புனித வனத்து அந்தோணியார் ஆலயம்.

முதன் முதலில் வரதராசன்பேட்டை பங்கை சேர்ந்த 27 கிறிஸ்தவ குடும்பங்கள் மணக்கொல்லையில் வசிக்கத் துவங்கினர். இங்கு வழிபாட்டிற்கு ஆலயம் இல்லாததால் 1974 ம் ஆண்டு மக்கள் ஒருங்கிணைந்து மண் சுவர் ஆலயம் ஒன்றை எழுப்பி, புனித வனத்து அந்தோணியார் பெயர் சூட்டினர்.

தினமும் மாலை வேளையில் 27 கத்தோலிக்க குடும்பங்களும் இணைந்து ஜெபமாலை ஜெபித்து வந்தார்கள். நாளடைவில் மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பால் கூரை ஆலயமானது, கான்கிரீட் ஆலயமானது.

நாளடைவில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, அனைவரின் ஒத்துழைப்புடன் 2008 ஆம் ஆண்டு புதிய ஆலயத்தை கட்டினார்கள். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

தற்போது பங்குத்தந்தை & அதிபர், துணை அதிபர், உதவிப் பங்குத்தந்தை ஆகியோரின் வழிகாட்டுதலில் சிறப்பு பெற்று விளங்குகிறது மணக்கொல்லை புனித வனத்து அந்தோணியார் ஆலயம்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. வின்சென்ட் ரோச் மாணிக்கம்.