இடம் : நவமங்கலம், உடுப்பம் அஞ்சல், நாமக்கல் தாலுகா, 637019
மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சவேரியார் ஆலயம், கொசவம்பட்டி
பங்குத்தந்தை : அருள்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர்
குடும்பங்கள் : 80
அன்பியங்கள் : 4
வியாழன் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி
திருவிழா : பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி (சாம்பல் புதனுக்கு முன்பாக)
வழித்தடம் : நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புதன்சந்தை வழியாக 2கி.மீ தொலைவில் நவமங்கலத்தில் இவ்வாலயம் உள்ளது.
மண்ணின் மைந்தர்கள் :
1. வேதியர். சாமிநாதன், (ஓய்வு)
2. வேதியர். ஜூலியஸ் சீசர்
வரலாறு :
பேட்டப்பாளையம் பங்கு ஆலயத்தை, பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்துவ மக்கள், ஆலய வழிபாட்டு கொண்டாட்டங்களுக்காகவும் விவசாய வாணிப நோக்கத்திற்காகவும் புனித சவேரியார் ஆலயம் நோக்கி வருவர். பெரும்பாலும், மோகனூர், பேட்டப்பாளையம் காவேரிக்கரைகளில் விவசாயம் செய்து வந்த இவர்கள், காலப்போக்கில் விவசாய நிலங்களை வாங்கி, இன்றைய முத்துடையார்பாளையம் கிழக்கே குடியமர்ந்தனர். இங்கு வாழ்ந்த எல்லோரிடமும் நிலபுலம் இருந்தது. இம்மக்களின் சிறப்பும், பெருமையும் இப்பகுதியில் புதியதாக குடியேறியதால் "புதூர்" என்று அழைத்தனர்.
மலைகளை ஒட்டி இவ்வூர் அமைந்துள்ளதால் முன்னோரின் கடின உழைப்பால் நவதானியங்களை பயிரிடும் நல்நிலமாக மாற்றி செழுமையாக வாழ்ந்தனர். நவதானியங்கள் இங்கு கிடைப்பதால் "நவ+மங்கலம்" நவமங்கலம் என்று இவ்வூரின் பெயர் மாறியது. இந்நிலத்தின் சிறப்பு என்னவென்றால் ஓடைகளோ, ஆறுகளோ, ஏரிகளோ, குளங்களோ இல்லாதபோதும் இம்மண் செம்மண் பூமி என்பதால் விவசாயம் செழிப்புடன் விளங்குகிறது.
இங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள் என்பதால் சமூக, சமுதாய அளவில் பின்தங்கி வாழ்ந்தனர். கடந்த 50 ஆண்டுகளாக கல்வியில் சிறந்து, விழிப்புணர்பு பெற்று தங்களது விடாமுயற்சியும், கடின உழைப்பால் இன்று பல அடித்தட்டு விழிப்பு நிலைகளை கடந்து மாபெரும் வளர்ச்சி மாற்றம் பெற்றுள்ளனர். தனியார், அரசு என அனைத்து துறைகளிலும் தடம்பதித்துள்ளனர்.
ஆலயம் : தொடக்கத்தில் மக்களின் வழிபாட்டு தேவைகளுக்காக சிறு கூடாரம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் செம்மண்ணால் சுவர் எழுப்பி கூரை வேய்ந்தனர். அதன்பின், கூரை பிரிக்கப்பட்டு ஓட்டுக்கட்டடமாக மாற்றினர். சுவர்கள் பலவீனமாக ஆனதால் கொசவம்பட்டியின் அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. இராஜமாணிக்கம் அவர்களின் பெரும் முயற்சியால் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு 26.07.2007 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புதுமைகள் :
புனித செபஸ்தியாரை பாதுகாப்பில் கொண்டு வாழும் மக்கள் கத்தோலிக்க விசுவாசத்தை சோதிக்க எண்ணற்ற பிரிவினை சபையினர் ஊடுருவி பார்த்தனர். ஆனால், புனிதரின் வல்ல செயலால் அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
மழை இல்லாத பல நேரங்களில் புனிதரின் பரிந்துரையால் பலமுறை தேவைக்கு அதிகமாகவே மழை பொழிந்துள்ளது.
பலமுறை நாட்டையே அச்சுறுத்தும் காலரா, அம்மை, வாந்தி பேதி என கொள்ளை நோய்கள் தாக்கியபோதும் புனிதரின் பரிந்துரையால் யாருக்கும் எத்தீங்கும் ஏற்பட்டதில்லை.
புனிதரின் ஆசீரால் எண்ணற்ற அதிசயங்களும் அற்புதங்களும் இன்றளவும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. நவமங்கலம் என்ற கிராமம் கத்தோலிக்க விசுவாசத்தில் தனது ஊரின் பெயருக்கு ஏற்ப ஆண்டவர் தலையில் அணிந்திருக்கும் மகுடத்தில் அழகிய நவமணி கற்கள் போன்றது. இவ்வாலயத்திற்கு வாருங்கள்! புனிதர் வழியாக இறையாசீர் பெறுங்கள்!!
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : மண்ணின் மைந்தர் வேதியர். ஜூலியஸ் சீசர் அவர்கள்.