தூய வளனார் (சூசையப்பர்) ஆலயம்
இடம் : கோட்டைக்காடு
மாவட்டம் : புதுக்கோட்டை
மறை மாவட்டம் : தஞ்சாவூர்
மறை வட்டம் : புதுக்கோட்டை
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. தூய அடைக்கல அன்னை ஆலயம், குளப்பன்பட்டி
2. தூய அந்தோனியார் ஆலயம், கடுக்ககாடு
3. உலக இரட்சகர் ஆலயம், மேல சவேரியார் பட்டணம்
4. புனித சவேரியார் ஆலயம், கீழ சவேரியார் பட்டணம்
5. தூய சந்தியாகப்பர் ஆலயம், வடக்கு கண்ணியான்கொள்ளை
6. புனித சவேரியார் ஆலயம், தெற்கு கண்ணியான்கொள்ளை.
சிற்றாலயம்: புனித வனத்து அந்தோனியார் சிற்றாலயம், கோட்டைக்காடு.
பங்குத்தந்தை : அருட்பணி. B. ததேயுஸ் MMI
குடும்பங்கள் : 988
அன்பியங்கள் : 14
ஞாயிறு திருப்பலி : காலை 05.45 மணி மற்றும் காலை 08.30 மணி.
நாள்தோறும் திருப்பலி : காலை 05.45 மணிக்கு.
செவ்வாய் மாலை 06.30 நவநாள், திருப்பலி.
மாதத்தின் முதல் புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு கனவின் தூய வளனார் நவநாள், திருப்பலி, தேர்பவனி, நற்கருணை ஆசீர், அன்பின் விருந்து.
திருவிழா : சாம்பல் புதன் தொடங்கி 9 வது வாரச் சனிக்கிழமை கொடியேற்றம். 10 வது வார சனிக்கிழமை தேர்பவனி.
சிற்றாலய திருவிழா : பெந்தேகோஸ்தே தூய ஆவியார் திருவிழாவிற்கு பிறகு கொடியேற்றம்.
தனிச்சிறப்பு : புனித அருளானந்தர் கோட்டைக்காடு வழியாக ஓரியூர் சென்றதாக வரலாறு கூறுகிறது. ஆலய மணிகள் ஜெர்மன் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. புதுக்கோட்டை மறை வட்டத்தின் முதல் பங்கு என்பதும் தனிச்சிறப்பு.
மண்ணின் இறையழைத்தல்கள் :
மண்ணின் அருட்பணியாளர்கள்:
1. அருட்பணி. இஞ்ஞாசியார் SJ (late)
2. அருட்பணி. இஞ்ஞாசியார் SJ (late)
3. அருட்பணி. செபஸ்தியான்
4. அருட்பணி. இஞ்ஞாசிமுத்து MSFS மாகாணத் தலைவர்
5. அருட்பணி. ஜேசுராஜ்
6. அருட்பணி. பெர்னார்ட்
7. அருட்பணி. ஆரோ ஜேசு
8. அருட்பணி. வின்சென்ட்
9. அருட்பணி. செபஸ்தியான்
10. அருட்பணி. ஆரோக்கியசாமி
11. அருட்பணி. மரியலூயிஸ்
12. அருட்பணி. ஸ்டாலின்
13. அருட்பணி. அலெக்ஸாண்டர்
14. அருட்பணி. பெர்னாட்ஷா
15. அருட்பணி. பாப் டேனியேல்
16. அருட்பணி. ஆன்றோ ரீகன்
17. அருட்பணி. அற்புத சந்தியாகு.
மண்ணின் அருட்சகோதரிகள் :
1. அருட்சகோதரி. சலேத்
2. அருட்சகோதரி. எமில்டா
3. அருட்சகோதரி. கார்மல்
4. அருட்சகோதரி. சம்மனசு
5. அருட்சகோதரி. ஜெஸிந்தா
6. அருட்சகோதரி. தெரசா
7. அருட்சகோதரி. தேன்மொழி
8. அருட்சகோதரி. புளோரா
9. அருட்சகோதரி. எஸ்தர் மேரி
10. அருட்சகோதரி. குளோரா மேரி
11. அருட்சகோதரி. பிரான்சிஸ் மேரி
12. அருட்சகோதரி. சூசை ராணி
13. அருட்சகோதரி. ஜூலி
14. அருட்சகோதரி. ஜெயராக்கினி
15. அருட்சகோதரி. மெல்கி
16. அருட்சகோதரி. சோபியா
17. அருட்சகோதரி. அன்னைதெரசா
18. அருட்சகோதரி. ஜோஸ்பின் பிரீடா
19. அருட்சகோதரி. ரெகஸி
20. அருட்சகோதரி. விண்ணரசி
21. அருட்சகோதரி. ஜோதி
22. அருட்சகோதரி. ஜெனித்தா
23. அருட்சகோதரி. ஃப்ளாரா
24. அருட்சகோதரி. சோபனா.
25. அருட்சகோதரி. செல்சி
26. அருட்சகோதரி. எலிசபெத்
வழித்தடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி வழியாக வெட்டன்விடுதி, கடுக்காகாடு, (கோட்டைக்காடு), சூரக்காடு ஊர் வழியாக கறம்பக்குடி மற்றும் பட்டுக்கோட்டை செல்லும் பேருந்து.
ஆலங்குடியிருந்து பேருந்து எண் 3A, A5. மினி பேருந்துகள் : ரஞ்சித், ஆனந்த், AKGN.
👉Location map : Dropped pin Near Pudukkottai, Tamil Nadu
https://maps.app.goo.gl/ZGX5x5aRXKhi7m7j6
வரலாறு :
புனித அருளானந்தர் ஓரியூர் பகுதிக்கு மறைப்பரப்புப் பணிக்காக சென்ற போது கோட்டைக்காடு பகுதி வழியாக சென்றதாக கூறப்படுகிறது. புனிதரின் பாதம்பட்ட புண்ணியபூமியாம் கோட்டைக்காட்டில் காணப்படும் தூய சூசையப்பர் ஆலய வரலாற்றினைக் காண்போம்.
தஞ்சை மறை மாவட்டம் உருவாவதற்கு முன்னர் வல்லம் பங்கிலிருந்தும், திருச்சி மறை மாவட்டம் நாஞ்சூர் பங்கிலிருந்தும் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, கி.பி 1898 ஆம் ஆண்டு கோட்டைக்காடு பங்கு உதயமானது.
பங்கின் தொடக்க காலத்தில் மதுரை மிஷன் சேசு சபை குருக்கள், பங்குத்தந்தையர்களாக இருந்து கோட்டைக்காடு இறை சமூகத்தை சிறப்பாக வழி நடத்தினார்கள்.
கி.பி 1930 ஆம் ஆண்டு உரோமை மறைப்பரப்புப்பணி பேராலயத்திற்கும், அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், இப்பங்கு சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தின் கண்காணிப்பின் கீழ் வந்தது.
கி.பி 1952 ஆம் ஆண்டு முதல் தஞ்சை மறை மாவட்டத்தின் கீழ் இருந்து வருகிறது.
பங்கு ஆலயம் :
கி.பி 1908 ஆம் ஆண்டில் இயேசு சபை குருக்களால் ஆலயம் எழுப்பப் பட்டது. அதனைத் தொடர்ந்து கி.பி 1959 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
ஆலயம் மிகவும் பழுதடைந்ததால் பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நிதியுதவி, இவற்றுடன் மறை மாவட்ட உதவி, வெளிநாட்டு உதவியாளர்களின் துணையாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு கி.பி 2003 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.
அமைப்புகள் :
பங்குத்தந்தையுடன் இணைந்து ஆன்மீகம், மக்கள் நலப் பணிகளிலும் செயல்படவும் புனித வின்சென்ட் தே பவுல் சபை (துவக்கப்பட்டு41 ஆண்டுகள் ஆகிறது), மரியாயின் சேனை, அன்பியங்கள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இத்துடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஆடவர் சுய உதவிக் குழுக்கள் துவக்கப்பட்டு சிறப்புற செயல்பட்டு வருகின்றன.
ஆசிரியர்களின் உதவியுடன் ஞானம்மாள் குழு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பங்கு மக்களின் சேவை உள்ளத்தால் கிறிஸ்தவ வாழ்வு உரிமை இயக்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
புனித அன்னாள் சபை :
சமூக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி, போக்குவரத்து வசதிகளற்றும், கல்வி கற்கும் வசதிகள் கிடைக்காமலும் வாழ்ந்து வந்த கோட்டைக்காடு மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்கிற உயர் நோக்குடன், தஞ்சை மறை மாவட்ட ஆயர் மேதகு சுந்தரம் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. சூசை ஆகியோரால் புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் இங்கு வரவழைக்கப் பட்டனர்.
அன்னாள் அருட்சகோதரிகள் இம் மக்களுக்கு நல்ல கல்வியையும், அருளடையாளங்களைப் பெற மக்களை தயாரிப்பதிலும், வழிபாடுகள் சிறப்பிக்க உதவி, மறைக்கல்வி கற்பித்தல் என சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறாக சிறப்பு பெற்று விளங்கும் கோட்டைக்காடு பங்கானது தொடக்கத்தில் இயேசு சபை குருக்களாலும், 1952 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலும் தஞ்சை மறை மாவட்ட குருக்களாலும் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்தது.
2009 ஆம் ஆண்டு முதல் அமல மரி தூதுவர் சபை (MMI) குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சபை குருக்களின் சிறப்பான ஆன்மீக வழிகாட்டுதலில் மென்மேலும் சிறப்பு பெற்று விளங்குகிறது கோட்டைக்காடு தூய வளனார் இறை சமூகம்.
பங்கின் நிறுவனங்கள் :
தூய வளனார் தொடக்கப்பள்ளி
தூய வளனார் மேல்நிலைப் பள்ளி:
தூய வளனார் குழந்தைகள் காப்பகம் :
மற்றும் அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையம் :கால்நடை மருத்துவமனை :ஆகியன சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
ஆலய மைதானம் :
ஆலயத்தில் அனைவரும் விளையாடுவதற்காக ஒரு மைதானம் காணப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த திரு. ஜெரோம் வினித் அவர்கள், இங்குள்ள புனித வளனார் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டே, ஆலய மைதானத்தில் நாள்தோறும் கைப்பந்து விளையாடி வந்தார். இவரது கடும் பயிற்சி, முயற்சி, புனிதரின் ஆசீருடன் தற்போது இந்திய கைப்பந்து (Volleyball) அணித் தலைவராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது தலைமையில் இந்திய அணி தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது, கோட்டைக்காடு இறை சமூகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.
பங்கின் பங்குத்தந்தையர்கள் :
1. மதுரை மிஷன் குருக்கள் (இயேசு சபை) (1889-1931)
2. அருட்பணி. ஐ. அற்புதம் (1931)
3. அருட்பணி. C. G. மரிய ஜோசப் (1931)
4. அருட்பணி. L. ஜெரால்டு (1932)
5. அருட்பணி. E. M. கொன்சால்வஸ் (1932-1947)
6. அருட்பணி. கோன்ஸ்ட்டோ (1947-1948)
7. அருட்பணி. P. S. ரோட்ரிகஸ் (1948-1949)
8. அருட்பணி. B. F. நொரோனா (1949-1955)
9. அருட்பணி. சில்வேரா (1956-1957)
10. அருட்பணி. டிகாஸ்டா (1957-1959)
11. அருட்பணி. D. சூசை ராஜ் (1959-1964)
12. அருட்பணி. A. ஜேக்கப் (1964-1969)
13. அருட்பணி. R. ஜோசப் (1969)
14. அருட்பணி. அமலோற்பவநாதன் (1969)
15. அருட்பணி. A. ஜேக்கப் அந்தோணி (1969-1971)
16. அருட்பணி. பால் பின்டோ (1972-1976)
17. அருட்பணி. A. சவரிமுத்து (1976-1981)
18. அருட்பணி. கராசியாலோ பெர்னாண்டஸ் (1981-1987)
19. அருட்பணி. M. அந்தோணிதாஸ் (1987-1990)
20. அருட்பணி. M. அருள் (1990-1997)
21. அருட்பணி. குழந்தைசாமி (1997-2003)
22. அருட்பணி. A. அருள் (2003-2008)
23. அருட்பணி. D. சேவியர் MMI (2009-2010)
24. அருட்பணி. Y. வில்லியம் (2010-2013)
25. அருட்பணி. எட்மண்ட் லூயிஸ் MMI (2013-2016)
26. B. ததேயுஸ் MMI (2017- தற்போது வரை..)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. B. ததேயுஸ் MMI