புனித அன்னம்மாள் ஆலயம்
இடம் : கிழவனேரி
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : வடக்கன்குளம்
பங்குத்தந்தை : அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், அச்சம்பாடு
2. புனித சவேரியார் ஆலயம், புதுக்குடியிருப்பு
. புனித ஆரோக்கியநாதர் ஆலயம், நடு ஆறு புளி
4. புனித சந்தனமாதா ஆலயம், தெற்கு ஆறு புளி
5. புனித லூர்து அன்னை ஆலயம், செம்பாடு.
குடும்பங்கள் : 220
அன்பியங்கள் : 10
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
நாள்தோறும் திருப்பலி : காலை 05.30 மணிக்கு
மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஆலயத்தை சுற்றி 153 மணி ஜெபமாலை, தொடர்ந்து திருப்பலி.
திருவிழா : ஜூலை 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
Location map : https://g.co/kgs/PFn6Cm
மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணியாளர்கள் :
1. அருட்பணி. அமலதாஸ்
2. அருட்பணி. சேகரன்
3. அருட்பணி. ஜோசப் கிறிஸ்டியான்
4. அருட்பணி. தாமஸ்
5. அருட்பணி. சேவியர்
6. அருட்பணி. அருளரசு
7. அருட்பணி. அன்ன அமல கிறிஸ்டியான்
8. அருட்பணி. ஞானஜோதி
9. அருட்பணி. டேவிட் லிவிங்ஸ்டன்
10. அருட்பணி. ஆன்றோ ஜஸ்டின்
11. அருட்பணி. ஜெய ஆன்றோ சர்ச்சில்.
அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. பொனிப்பாஸ் விமலா மெல்லி
2. அருட்சகோதரி. மரிய பிரபா
3. அருட்சகோதரி. ரீட்டா.
வழித்தடம் : வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில், வள்ளியூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் மடப்புரம் உள்ளது. மடப்புரத்திலிருந்து ஒரு கி.மீ உள்ளே வந்தால் இவ்வாலயத்தை அடையலாம்.
வரலாறு:
கள்ளிகுளத்தின் பங்குத்தந்தையாக அருட்தந்தை கௌசானல் அவர்கள் இறைப் பணியாற்றிய போது, அவரது மேற்பார்வையில் கிழவனேரி இருந்தது.
1926 ஆம் ஆண்டு கிழவனேரி தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. அப்போது பண்டாரக்குளம், அச்சம்பாடு, ஆனைகுளம், புதூர், புதுக்குடியிருப்பு, ஆறுபுளி, மடப்புரம் ஆகிய கிளைப் பங்குகள் கிழவனேரியின் கீழ் இருந்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் பங்காரு அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.
அருட்பணி. செங்கோல்மணி அவர்களின் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 23.07.1980 அன்று மேதகு ஆயர் அம்புறோஸ் மதலைமுத்து அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
அருட்பணி A. J. ரெக்ஸ் அவர்களது பணிக்காலத்தில் 23.07.2004 அன்று வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன் அவர்கள், பங்கு மக்களை ஒருங்கிணைத்து, தேவையான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதுடன், கிழவனேரி இறை சமூகத்தை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.
கிழவனேரி -யின் பங்குத்தந்தையர்கள் :
1. Fr. Stanislaus Bangaru (1926-1928)
2. Fr. Dominic Swaminathar (1928-1932)
3. Fr. Thomas Kalam (1932-1936)
4. Fr. Mascarenhas (19936-1942)
5. Fr. Amaladass Victoria (1942-1946)
6. Fr. M. Santhana Marian (1946-1950)
7. Fr. Edward Christian Fdo (1950-1962)
8. Fr. Francis Devasagayam (1962-1967)
9. Fr. Maria Viagulam (1967-1969)
10. Fr. Paul Alangaram (1969-1970)
11. Fr. Pancras M. Raja (1970-1974)
12. Fr. Karunagaran Gomez (1974-1976)
13. Fr. Dr. J. C. Amirtham (1976..)
14. Fr. R. S. Augustin (1976..)
15. Fr. Sengol S. Mani (1977-1982)
16. Fr. Sathiyanesan (1982-1988)
17. Fr. Deva Navamai (1988..)
18. Fr. Soosai Marian (1988-1993)
19. Fr. Joseph Leon (1993-1995)
20. Fr. V. Antony Samy (1995-1996)
21. Fr. Joseph Rethnaraj (1997-1998)
22. Fr. P. Nelson Paul Raj (1998-2003)
23. Fr. Jebanathan (2003-2004)
24. Fr. A. J. Rex (2004-2007)
25. Fr. Jackson (2007-2010)
26. Fr. Amal Gonsalvez (2010-2015)
27. Fr. Francis Vasanthan (2015 Till today..)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன் அவர்கள்.