இடம் : தெப்பக்குளம், கருங்குளம்
மாவட்டம் : திருச்சி
மறை மாவட்டம் : திருச்சி
மறை வட்டம் : மணப்பாறை
நிலை : கிளைப் பங்கு
பங்கு : புனித இஞ்ஞாசியார் ஆலயம், கருங்குளம்.
ஞாயிறு திருப்பலி : நண்பகல் 12.00 மணிக்கு
சனிக்கிழமை இரவு 07.00 மணிக்கு நவநாள்.
திருவிழா :
செப்டம்பர் மாதம் 08-ம் தேதி நிறைவடைகின்ற வகையில் மூன்று நாட்கள். அதற்கு முன்பாக ஏழு நாட்கள் நவநாட்கள்.
கருங்குளம் பங்கு ஆலயத்தில் இருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
ஆரம்பத்தில் ஓடுவேய்ந்த சிற்றாலயமாக இருந்தது. பின்னர் தற்போது காணப்படும் அழகிய ஆலயமானது பலரின் நன்கொடைகளால் கட்டப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட ஆலயம் இது.
பல அற்புதங்கள் நாள்தோறும் நடந்து வருவதால் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.
மிகவும் வறட்சி நிறைந்த இப்பகுதியில் தண்ணீர் கிடைப்பது அரிது. அப்படிப்பட்ட இந்த ஊரில் ஆலயத்தின் அருகே ஒரு முறை கட்டிடத் தேவைக்காக சிறிது மண்ணைத் தோண்டியவுடன், தண்ணீர் கிடைத்ததைக் கண்டு ஆச்சரியம்!!! கொண்ட மக்கள் அன்னையின் அருளால் தான் இவை நிறைவேறியது என்றெண்ணி அகமகிழ்ந்தனர்.
வேளாங்கண்ணியில் வற்றாத மாதா குளம் காண்பது போல, இந்த தண்ணீர் கண்ட இடத்தை பின்னர் அழகிய தெப்பக்குளமாக அமைத்தனர். இத்தண்ணீரை புனிதமாகக் பயன்படுத்தி அனேக மக்கள் நலமடைந்துள்ளனர்.
வழித்தடம் :
திருச்சி -திண்டுக்கல் பிரதான சாலையில் வையம்பட்டியிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்தில் கருங்குளம் ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
மணப்பாறை - கரூர் - கருங்குளம் வழியாகவும் வரலாம்.