506 புனித சார்லஸ் பொரோமியோ ஆலயம், தாரமங்கலம்


புனித சார்லஸ் பொரோமியோ ஆலயம்

இடம் : தாரமங்கலம், தாரமங்கலம் அஞ்சல், 636502

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : மேட்டூர்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்கு :
புனித காணிக்கை மாதா ஆலயம், ஊ. மாரமங்கலம்

சிற்றாலயங்கள்:
1. புனித அந்தோணியார் சிற்றாலயம், ஏரிமுகாம்
2. புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், அட்டை ஓட்டு முகாம்.

பங்குத்தந்தை : அருட்பணி. V. ஆல்பர்ட் அந்தோணி ராஜ்.

குடும்பங்கள் : 80
அன்பியங்கள் : 7

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி

வாரநாட்கள் : காலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : நவம்பர் 4 -க்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையை மையமாகக் கொண்டு ஒரு வாரம்.

வழித்தடம் : ஈரோட்டிலிருந்து சங்ககிரி, கொங்கணாபுரம் செல்லும் வழியாக 53கி.மீ தொலைவில் தாரமங்கலம் உள்ளது.

சேலத்திலிருந்து சூரமங்கலம், இரும்பாலை செல்லும் வழியாக 22கி.மீ தொலைவில் ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில் தாரமங்கலம் புனித சார்லஸ் பொரோமியோ ஆலயம் உள்ளது.

Location map : https://maps.app.goo.gl/NcZg4T31JVLS3krBA

வரலாறு :

R.C செட்டிப்பட்டி பங்கின் ஒரு பகுதியாக விளங்கிய தாரமங்கலத்தில், மரியாயின் மாசற்ற இதய சபைக் கன்னியர்கள் நீண்ட காலமாக பணியாற்றி வந்தனர். 1971 -ஆம் ஆண்டு கும்பகோணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி. T. A. இராஜமாணிக்கம் அவர்கள் வருகை புரிந்தார். 1972 ஆம் ஆண்டு 6 குடும்பங்கள் திருமுழுக்கு பெற்றனர். அப்போது அருட்தந்தை அவர்கள் ஒரு வீட்டில் திருப்பலி நிறைவேற்றி மக்களின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றி வந்தார்.

அருட்தந்தை அவர்களின் அரிய முயற்சியால் 1974ம் ஆண்டு ஒரு வீட்டில் மருத்துவமனை தொடங்கப்பட்டது. புதிதாக மனம் மாறியவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும் நற்செய்தி அறிவிப்புப் பணியாற்றவும் ஒரு கன்னியர் மடம் தொடங்க வேண்டும் என அருட்பணி. இராஜமாணிக்கம், அருட்பணி. பீட்டர் கரியத்தரா மற்றும் அருட்சகோதரி. லொயோலா மரி ஆகியோர் முயற்சி செய்தனர்.

02.04.1978 அன்று இங்கு ஆலயம் கட்டப்பட்டது. 572 கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொண்ட இவ்வாலயமானது, 1984 -ல் புதிய பங்காக உயர்த்தப்பட்டு புனித சார்லஸ் பொரோமியோவைப் பாதுகாவலராகக் கொண்டு விளங்குகிறது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. குழந்தைராஜ் அவர்கள் பணியாற்றினார். தற்போது உள்ள பங்குத்தந்தை இல்லம் 05.10.1991 அன்று புதியதாகக் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. ஜான் ஜோசப் (2011-2016) அவர்களின் பணிக்காலத்தில் சாலையில் செல்லும் மக்களின் தேவைக்காக கெபி ஒன்றை எழுப்பி அதில் அன்னை வேளாங்கண்ணி, திருஇருதய ஆண்டவர், பங்கின் பாதுகாவலர் புனித சார்லஸ் பொரோமியோ ஆகிய சுரூபங்களை அக்கோபுரத்தில் நிறுவினார்.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. ஆல்பர்ட் அந்தோணி ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது தாரமங்கலம் இறைசமூகம்.

பங்கில் உள்ள கன்னியர் இல்லம் :
திரு இருதய சபைக் கன்னியர்கள் இல்லம் (நங்கவள்ளி)
மரியாயின் மாசற்ற திருஇருதய சபைக் கன்னியர்கள் இல்லம்.

பங்கின் கல்விக்கூடம் மற்றும் மருத்துவமனை:
புனித சார்லஸ் மெட்ரிக் பள்ளி (மரியாயின் மாசற்ற திருஇருதய சபை கன்னியரர்கள் நிர்வாகம்)
புனித சார்லஸ் மருத்துவமனை. (மரியாயின் மாசற்ற திருஇருதய சபை கன்னியர்கள் நிர்வாகம்)

பங்கில் உள்ள பக்த சபைகள் :
பங்குப்பேரவை
மரியாயின் சேனை
மறைக்கல்வி மன்றம்
இளைஞர் அணி
பாடகற்குழு

பங்கில் பணியாற்றிய பங்குப்பணியாளர்கள் :
1. அருட்பணி. H. J. குழந்தைராஜ் (1984-1989)
2. அருட்பணி. தாமஸ் கீராஞ்சிரா (1989-1991)
3. அருட்பணி. R. இருதயநாதன் (1991-1992)
4. அருட்பணி. C. S. அந்தோணிசாமி (1992-1993)
5. அருட்பணி. M. ஆரோக்கியம் (1993-1996)
6. அருட்பணி. D. ஜெகநாதன் (1996-1998)
7. அருட்பணி. C. மைக்கேல் (1998-2003)
8. அருட்பணி. S. பிரான்சிஸ் சேவியர் (2003- 2006)
9. அருட்பணி. R. சேவியர் (2006-2011)
10. அருட்பணி. S. ஜான் ஜோசப் (2011-2016)
11. அருட்பணி. I. மரியசூசை (2016-2019)
12. அருட்பணி. V. ஆல்பர்ட் அந்தோணி ராஜ் (2019 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. V. ஆல்பர்ட் அந்தோணி ராஜ் அவர்கள்.