651 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஓரிக்கோட்டை

       

புனித ஜெபமாலை அன்னை ஆலயம் 

இடம் : ஓரிக்கோட்டை, சீக்கியமங்கலம் வழி, ஓரிக்கோட்டை அஞ்சல், 623402

மாவட்டம் : இராமநாதபுரம் 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : R.S மங்கலம் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. புனித செபஸ்தியார் ஆலயம், சாந்திபுரம் 

2. புனித பெரியநாயகி அன்னை ஆலயம், T. நாகணி 

3. புனித சந்தியாகப்பர் ஆலயம், அல்லிகோட்டை 

4. புனித செபஸ்தியார் ஆலயம், பூவாணி 

5. புனித செபஸ்தியார் ஆலயம், புல்லவயல் 

பங்குத்தந்தை : அருள்பணி. S. எட்வர்ட் ஜெயகுமார் 

குடும்பங்கள் : 70 (கிளைப்பங்குகள் சேர்த்து 130)

அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி காலை 08.30 மணிக்கு 

வாரநாட்களில் கிளைப் பங்குகளில் திருப்பலி 

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை பவனி, நற்கருணை ஆராதனை, திருப்பலி, தொடர்ந்து நேர்ச்சை உணவு

திருவிழா : அக்டோபர் 10ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. தாமஸ் சவரிநாதன், CMF

2. அருள்பணி. அமல்ராஜ், NSFS

3. அருள்பணி. அருள்ஜோதி, SJ

மற்றும் 2 அருள்சகோதரர்கள், 15 அருள்சகோதரிகள். 

வழித்தடம் : சிவகங்கை -தொண்டி வழித்தடத்தில் சீக்கியமங்கலம். சீக்கியமங்கலத்திலிருந்து 3கி.மீ தொலைவில் -ஓரிக்கோட்டை அமைந்துள்ளது.

இராமநாதபுரம் -தேவகோட்டை வழி சீக்கியமங்கலம் -ஓராக்கோட்டை

Location map : Our Lady of Rosary Church

Orikottai, Tamil Nadu 623402

https://maps.app.goo.gl/QwKd8bkRf1UNDdT17

வரலாறு :

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் அமைந்துள்ள அழகிய கிராமமான ஓரிக்கோட்டையில் அமைந்துள்ள தூய ஜெபமாலை அன்னை ஆலய வரலாறு... 

இந்த கிராமத்தில் ஒரு பெரிய கண்மாயின் நடுவில், கண்காணிப்பு கோட்டை ஒன்று மன்னராட்சி காலத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக இக்கிராமம் ஓரிக்கோட்டை என அழைக்கப் படுவதாக கூறப்படுகிறது. 

ஓரிக்கோட்டையில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகிறது. அத்துடன் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவற்றையும் விவசாயத்துடன் செய்து வருகின்றனர். பருவமழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் வறுமையின் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகின்றனர். ஆகவே பிழைப்பு தேடி பலர் வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். 

ஆலயம் :

கி.பி 1857 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே ஓரிக்கோட்டையில் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டு, ஒன்றரை அடி உயரம் கொண்ட தூய ஜெபமாலை அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வந்தனர். 

காலப்போக்கில் மறைமாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு பங்குகளாகப் பிரிக்கப்பட்ட போது ஓரிக்கோட்டை தூய ஜெபமாலை அன்னை ஆலயமானது, புளியால் பங்கின் கிளைப் பங்காக ஆனது. 

1857 ல் கட்டப்பட்ட ஆலயம் இடிந்து விழவே 1948 ம் ஆண்டு ஆலயம் கட்ட ஆரம்பித்து, விளைச்சலின் பலன் கொண்டு சிறிது சிறிதாக கட்டப்பட்டு 1960 ஆம் ஆண்டு அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

கி.பி 1968 ஆம் ஆண்டு ஓரிக்கோட்டை தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. 

இந்த ஆலயமானது பல ஆண்டுகளைக் கடந்ததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஆகவே 2017 ம் ஆண்டு திருவிழாவிற்குப் பின்னர்  இவ்வாலயம் இடிக்கப்பட்டது. 

மக்களின் அயராத தன்னலமற்ற முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய அழகிய ஆலயமானது அருள்பணி. V. புஷ்பராஜ் அவர்களின் பணிக்காலத்தில் கட்டப்பட்டு 25.05.2019 அன்று மேதகு ஆயர் சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

திருச்சிலுவை சபை அருள்சகோதரிகள் இல்லம் அமைத்து, மனவளர்ச்சி உடல் வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார்கள். 

மாதாவின் புதுமைகள் :

கி.பி 1960 ஆம் ஆண்டு இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அருகிலிருந்த அஞ்சுக்கோட்டை கண்மாய் நிரம்பி வழிந்து, ஊருக்குள் நீர் புகுந்ததால், மண் சுவரால் ஆன வீடுகள் எல்லாம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. மக்கள் அனைவரும் மாதாவிடம் வந்து கண்ணீருடன் மன்றாடி ஜெபிக்க,  ஆலயத்திற்கு நேரான கிழக்கு திசையில் அஞ்சுக்கோட்டை கண்மாயில் உடைப்பெடுத்து, ஊருக்குள் சூழ்ந்திருந்த அனைத்து நீரும் கண்மாயிலிருந்து வெளியேறி ஆற்றின் வழியாக கடலில் சென்றடைந்தது. மக்கள் அனைவரும் ஆனந்தமடைந்து மாதாவிற்கு நன்றி செலுத்தினர். 

மேலும் பலர் தங்களது வேண்டுதல்களை மாதாவிடம் கூறி ஜெபிக்க, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதால் மாதாவிடம் மிகுந்த பற்றுடன் வாழ்கின்றனர். பலர் தங்களது குழந்தைகளுக்கு மாதாவின் பெயரை சூட்டியும் நன்றி செலுத்துகின்றனர். 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. மரியாயின் சேனை 

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

3. நற்செய்தி பணியாளர்கள் 

4. மகளிர் மன்றம் 

5. அன்பியங்கள் 

6. பாடகற்குழு.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. எட்வர்ட் ஜெயகுமார்