758 தூய அடைக்கல மாதா ஆலயம், எலத்தகிரி

         

தூய அடைக்கல மாதா ஆலயம்

இடம்: எலத்தகிரி

மாவட்டம்: கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: கிருஷ்ணகிரி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. குழந்தை இயேசு ஆலயம், குழந்தை இயேசு நகர்

2. பூண்டி மாதா ஆலயம், புளியந்தோப்பு, இராயப்பனூர்

பங்குத்தந்தை: அருள்பணி. C. மைக்கேல் ஆண்ட்ரூஸ்

குடும்பங்கள்: 650

அன்பியங்கள்: 25

ஞாயிறு திருப்பலி: காலை 06.30 மணி காலை 08.30 மணி மற்றும் மாலை 06.00 மணி (பாறைக்கோயில்)

நாள்தோறும் திருப்பலி காலை 06.00 மணி

புதன் மாலை 06.00 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி

சனி மாலை 06.00 மணிக்கு இடைவிடா சகாய மாதா நவநாள் திருப்பலி

ஒவ்வொரு மாதத்தின் 2-வது புதன் மாலை 06.00 மணிக்கு திருக்குடும்ப விழா: சிறப்பு திருப்பலி, திருக்குடும்ப தேர்பவனி

பாறைக் கோயில் திருவிழா: பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் திருக்குடும்ப திருவிழா

பங்குத் திருவிழா: மே மாதம் முதல் வாரத்தில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Most.Rev.S. Singaroyar (சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர்& மாதா டிவி இயக்குநர்)

2. Rev.Fr.Vincent Xavier Maria Pragasam, SDB

3. Rev.Fr.John Louis Maria Pragasam, SDB 

4. Rev.Fr.Vincent, SDB 

5. Rev.Fr.Daniel Ambrose, SDB

6. Rev.Fr.Sagayam, SDB

7. Rev.Fr.Savarinathan

8. Rev.Fr.Christopher, SDB

9. Rev.Fr.Robert, SDB 

10. Rev.Fr.Irudhaya Selvam

11. Rev.Fr.William

12. Rev.Fr.Das

13. Rev.Fr.Sathiyanathan, SDB

14. Rev.Fr.D.Cruz Arul Raj

15. Rev.Fr. D.Susai Raj- MMI

16. Rev.Fr.A.Lawrence

17. Br.D.Stephen Anandha Raj, CSC

மற்றும் பலர்...

மண்ணின் அருட்சகோதரிகள்:

1. Rev.Sr.Beril (Presentation Convent)

2. Rev.Sr.Christina

3. Rev.Sr.Natasha

4. Rev.Sr.Stella

5. Rev.Sr.Susila (Carmel 3rd Divison)

6. Rev.Sr.Sheela, FSM

7. Rev.Sr.Glady Kavitha

8. Rev.Sr.Selina, FSM

9. Rev.Sr.Helen, FSM

10. Rev.Sr.Nancy

11. Rev.Sr.Arputhamary, SCB

12. Rev.Sr.Regina Mary, SCB

13. Rev.Sr.Clara, SCB

14. Rev.Sr.Metilada (Holy Cross)

15. Rev.Sr.Daisy (Presentation Convent)

16. Rev.Sr.M.Arputha Mary-SCB

17. Rev.Sr.M.Regina Mary-SCB

18. Rev.Sr.D.Ann David-SCB

19. Rev.Sr.K.Clara Jesintha Rani- SCB

20. Rev.Sr.L.Savariyammal-

21. Rev.Sr.L.Stella Regina Mary-

22. Rev.Sr.L.Glory Jesintha Rani- J&J

23. Rev.Sr.S.Margret Fathima Mary- St.Anns

24. Rrv.Sr. I Helen Issac- Blue Sisters

25. Rev.Sr. L. Savariammal, SSA

26. Rev.Sr. L. Rejina, SMMI

27. Rev.Sr. L. Gloria, JMJ

மற்றும் பலர்...

Location map: https://www.google.com/search?client=ms-android-vivo-rvo2&sa=X&v=11.30.9.21.arm64&hl=en-US&cs=0&cds=2&biw=392&bih=809&sxsrf=ALeKk03JwrFy6DbThG7eNCJ4BKm6NrVXOw:1622009733552&q=Our+Lady+of+Refuge+Church&ludocid=3849718342052567193&ibp=gwp;0,7&lsig=AB86z5W9mIzB_76EYJ9VhF_XYrUv&kgs=e3441152776bb647&shndl=-1&source=sh/x/kp/local&entrypoint=sh/x/kp/local

வரலாறு:

எலத்தகிரி (Elathagiri)  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். 'எலுத்தகிரி' என்ற பெயராலும் இந்த கிராமம் அழைக்கப்படுகிறது. பெங்களூர் -சென்னை நெடுஞ்சாலைக்கு 3 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகர் கிருட்டிணகிரியிலிருந்து 9 கி.மீ தொலைவிலும் எலத்தகிரி அமைந்துள்ளது. கிராமத்தில் பல கத்தோலிக்க கிறித்துதவ குடியேற்றங்கள் உள்ளன. எனவே கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பள்ளிகளைத் தொடங்கினர். எலத்தகிரி கிராமம் அதன் தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரபலமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்த எலத்தகிரி ஊரில் அமைந்துள்ள தூய அடைக்கல மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்....

இயேசு சபை குருக்கள்; காவேரிப்பட்டினம், அகரம்-பாரூர், மருதேரி, ஊத்தங்கரை -கானாம்பட்டி, மாலியம்பட்டி, நெல்லிமரத்துப்பட்டி, கிருஷ்ணகிரி -வெண்ணம்பள்ளி, மோட்டூர், மற்றும் அங்கனமலை ஆகிய இடங்களில் மறைப்பரப்பு பணி செய்தனர். இது பலரை கத்தோலிக்கர்களாக மாற வழிவகுத்தது.  இந்தப் பகுதியில் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாரிஸ் மிஷனரிகள் கத்தோலிகர்களை மேலே குறிப்பிட்ட கிராமத்திலிருந்து எலத்தகிரிக்கு குடியேற அழைத்தனர். 1782 ஆம் ஆண்டில், ஊத்தங்கரைக்கு அருகிலுள்ள மேல்வீதி -மாலியம்பட்டியைச் சேர்ந்த மைக்கேல் நாயகம், இந்த கிராமத்தில் குடியேறிய முதல் குடும்பம் என்று அருட்பணி. டெபியனின் குறிப்பேட்டில் உள்ளது. 

1784 ஆம் ஆண்டில், நெல்லிமரத்துப்பட்டியைச் சேர்ந்த தோட்டம் சின்னப்பன் குடும்பம் இந்த கிராமத்தில் குடியேறியது என்று சேலம் மறைமாவட்ட குருக்களால் எழுதப்பட்ட சரித்திர சுருக்கம் நூலில் கூறப்பட்டுள்ளது.  

1827க்கு முன் எண்ணம்பள்ளி, மோட்டூர், கொல்லப்பட்டி (வெண்ணம்பள்ளிக்கு அருகில்), கானாம்பட்டி, மாலியம்பட்டி ஆகிய இடங்களில் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.  சரித்திர சுருக்கம் என்ற நூலில் 1780 மற்றும் 1830க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த பல இடப்பெயர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

கி.பி 1820 ஆண்டு காலகட்டத்தில் எலத்தகிரியில் கிறிஸ்தவர்கள் வந்து குடியேறினர். தருமபுரி, கிருஷ்ணகிரி மேலும் எடப்பாடி ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்களும், மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த கிறிஸ்தவ மக்கள் எலத்தகிரியில் விவசாயம் செய்வதற்காக குடியேறி, வெற்றிலை பயிரிட்டு, அவற்றை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைத்து வாழ்ந்து வந்தனர்.

கி.பி 1859 ஆம் ஆண்டு வரை தருமபுரி -கோவிலூரில் இருந்த மறைப்பணியாளர்கள், எலத்தகிரி கிறிஸ்தவர்களை வழிநடத்தி வந்தனர். 1859 இல் கோவிலூர் தனிப்பங்கான போது எலத்தகிரி கிருஷ்ணகிரி மற்றும் கிருஷ்ணகுப்பம் ஆகியன கோவிலூரின் கிளைப் பங்குகளாக விளங்கின.

1862 ஆம் ஆண்டு ஊருக்கு நடுவில் அடைக்கல மாதா ஆலயம் கட்டப்பட்டது.

1872-73 காலகட்டத்தில் அருட்பணி. பினோ அடிகளார் ‌புதிய ஆலயம் கட்ட நிலம் வாங்கினார். 

அதன்பின் 1897 ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் -கோவிலூரில் தங்கியிருந்த மறைப்பணியாளர்கள் எலத்தகிரியை வழிநடத்தி வந்தனர்.

பின்னர் எலத்தகிரி மற்றும் கடத்தூர் ஆகிய இரண்டு ஊர்களும் ஒரே மறைப்பணியாளரின் பொறுப்பில் இருந்தன.

அருட்பணி. பினோ அடிகளாரால் வாங்கப்பட்ட நிலத்தில் 

1897 இல், எலத்தகிரி- கடகத்தூர் பங்குத்தந்தை புகழ்பெற்ற பாண்டிச்சேரி மிஷனரி கட்டிடக்கலை நிபுணரான Rev Fr. Welter Dholsburg, MEP அவர்களது முயற்சியால் தற்போது காணப்படும் புதிய தேவாலயத்திற்கான அடிக்கல் 14-11-1900 நிறுவப்பட்டு பணிகளைத் தொடங்கினார். ஆனால் தேவாலய கட்டுமானம் 1922 இல் தான் நிறைவடைந்தது. 

அருட்பணி. உர்மாண்ட், MEP, பணிக்காலத்தில் ஆலயகோபுரம் 1949 மற்றும் 1951-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டு முடிக்கப்பட்டது.

1904 ஆம் ஆண்டு எலத்தகிரி தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

2019-2020 காலகட்டத்தில் பங்குத்தந்தை அருட்பணி.‌ மைக்கேல் ஆண்ட்ரூஸ் அவர்களின் முயற்சி மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன், ஆலய பீடம் அழகுற கட்டப்பட்டு மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

எலத்தகிரியின் கிளைப்பங்குகளாக இருந்து, பின்னர் தனிப் பங்காக உயர்த்தப் பட்ட பங்குகள்:

கிருஷ்ணகிரி -1930

கந்திகுப்பம் -1979

சுண்டம்பட்டி - 1997

புஷ்பகிரி -2015

காந்தாம்பள்ளம் மிஷன் -2017.

பாறைகோவில்:

1904 ஆம் ஆண்டில், காலரா நோயானது, எலத்தகிரி முழுவதும் பரவத் தொடங்கியது.  நோய்வாய்ப்பட்டவர்கள் கிராமத்திற்குப் பக்கத்தில் உள்ள பாறைக்குச் சென்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்;  பிரார்த்தனைக்குப் பிறகு, அவர்கள் குணமடைந்தனர்.  பின்னர் பாறையின் மீது ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. பல்வேறு புதுமைகள் நடந்து வந்ததால், உள்ளூர் மக்களால் பாறை கோவில் என்று அழைக்கப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் பாறை கோயில் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. விழாவானது மறைமாவட்டம் முழுவதும் மிகப்பிரபலமாக விளங்குகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்விழாவில் பங்கேற்றுள்ளார் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.

எலத்தகிரியில் அருட்சகோதரிகள் பணிகள்:

1) 1904 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி, பாண்டிச்சேரி FIHM சகோதரிகள் எலத்தகிரியில் ஒரு வீட்டில் குடியேறி, மிஷனரி சேவையைத் தொடங்கினார்கள்.  பின்னர், 1906 இல், ஒரு கான்வென்ட் கட்டிடம் கட்டப்பட்டது அங்கு குடியேறி பணிபுரிந்தனர்.

2) FSM சபை சகோதரிகள், பங்குத்தந்தை  அருட்பணி. ஜோசுவா அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, 1953 இல் எலத்தகிரியில் பணியாற்ற வந்தனர். 1954 இல் அவர்கள் ஒரு மருத்துவமனையைக் கட்டி சேவையைத் தொடங்கினர். 1957 இல் ஒரு பெண்கள் விடுதியைத் திறந்தனர்.

3) 1998 ஆம் ஆண்டில், FSAG சகோதரிகள் (செயின்ட் அலோசியஸ் கோன்சாகாவின் பிரான்சிஸ்கன் சகோதரிகள்) அவர்களின் அண்டை கிராமமான காத்தான்பள்ளத்தில் ஒரு துறவு இல்லத்தை நிறுவினர். 2009 இல், அவர்கள் பெண்களுக்கான கோன்சாகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவினர்.

கல்வி:

1923 ஆம் ஆண்டு பழைய தேவாலய கட்டிடத்தில் செயின்ட் கார்டியன் ஏஞ்சல் பள்ளி என ஒரு தொடக்கப் பள்ளி நிறுவப்பட்டது.  

1947-ம் ஆண்டில் புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியாகவும், 1957-ல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1980-ல் மேல்நிலைப் பள்ளியாகவும் மாறியது.

தலைமை ஆசிரியர் அருட்பணி. ஜோசப் அவர்கள், 1957 ஆம் ஆண்டு புனித ஜோசப் பெயரில் சிறுவர்களுக்கான இல்லத்தை தொடங்கினார். பின்னர் அருட்பணி. இக்னேஷியஸ் கலத்தில், புனித அலோசியஸ் பெயரில் ஒரு தங்கும் விடுதி ஒன்றை நிறுவினார்.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:

1. அன்பியங்கள்

2. இளையோர் இயக்கம்

3. மரியாயின் சேனை (ஆண்கள் &பெண்கள்)

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. கோல்பிங்

6. ஆசிரியர்கள் மன்றம்

7. பீடச்சிறுவர் சிறுமியர்

8. பாடகற்குழு

9. மறைக்கல்வி

10. பங்குப்பேரவை

11. நிதிக்குழு

பங்கில் உள்ள கல்விக் கூடங்கள்:

1. St. Antonys Primary School

2. St Antonys Higher Secondary School

எலத்தகிரியில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

(புதுச்சேரி உயர் மறைமாவட்டம்)

1. அருள்பணி. S. தோமினிக் (1901-1928)

2. அருள்பணி.‌ M. தோமினிக் (1928-1930)

(சேலம் மறைமாவட்டம் 1930 முதல்)

1. அருள்பணி. மார்ட்டின், MEP (1930-1932)

2. அருள்பணி. புலியார்டு, MEP (1932-1934)

3. அருள்பணி. ஹாரோ, MEP (பொறுப்பு) (1934-1935)

4. அருள்பணி. லியோ டெபினி, MEP (1936-1940)

5. அருள்பணி. மெர்சியர், MEP (1940-1942)

6. அருள்பணி. சக்கரையாஸ் (1942-1949)

7. அருள்பணி. ஹிர்மான்ட் (1949-1951)

8. அருள்பணி. ஜெசுவா (1951-1958)

9. அருள்பணி. T. S. ஜோசப் (1958-1960)

10. அருள்பணி. M. S. ஜோசப் (1960-1961)

11. அருள்பணி. D. அருள் (1961-1962)

12. அருள்பணி. மத்தேயு கட்வில் (1962-1964)

13. அருள்பணி. இக்னேஷியஸ் கலத்தில் (1964-1972)

14. அருள்பணி. K. P. சுவக்கின் (1972-1980)

15. அருள்பணி. அருள்சுந்தரம் (1981-1982)

16. அருள்பணி. A. செபாஸ்டின் (1982-1986)

17. அருள்பணி. S. புஷ்பநாதன் (1986)

18. அருள்பணி. M. ஜெகராஜ் (1987-1988)

19. அருள்பணி. D. M. சவரிமுத்து (1988-1992)

20. அருள்பணி. S. அமல்ராஜ் (1992-1994)

(தருமபுரி மறைமாவட்டம் 1997 முதல்)

1. அருள்பணி. M. அருள்சாமி (1994-1998)

2. அருள்பணி.‌ M. ஜெகராஜ் (1998-1999)

3. அருள்பணி. M. அந்தோணிசாமி (1999-2004)

4. அருள்பணி. S. மரிய ஜோசப் (2004-2005)

5. அருள்பணி. S. ஹென்றி ஜார்ஜ் (2005-2008)

6. அருள்பணி. A. சூசைராஜ் (2008-2013)

7. அருள்பணி. K. மரிய ஜோசப் (2013-2014)

8. அருள்பணி. J. ஆரோக்கியசாமி (2014-2017)

9. அருள்பணி. C. மைக்கேல் ஆண்ட்ரூஸ் (2017 முதல்...)

இறையாசீர் நிரம்பப்பெற்ற எலத்தகிரி ஆலயத்திற்கு ஒருமுறையேனும் வந்து பாருங்கள்.. இறைவனின் மகத்துவத்தை அள்ளிப் பருகிடுங்கள்...

தகவல்கள் மற்றும் ஆலய வரலாறு: பங்குத்தந்தை அருட்பணி. மைக்கேல் ஆண்ட்ரூஸ் அவர்கள்

தகவல்கள் சேகரிப்பில் உதவி:

பங்கு உறுப்பினர்கள்

மண்ணின் இறையழைத்தல்கள், புகைப்படங்கள் மற்றும் தகவல் சேகரிப்பு: திரு. எட்வின், சென்னை