449 புனித மரிய மதலேனாள் ஆலயம், ஓடப்பள்ளி


புனித மரிய மதலேனாள் ஆலயம்

இடம் : ஓடப்பள்ளி

மாவட்டம் : நாமக்கல்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய தமத்திருத்தவ ஆலயம், SPB காலனி.

பங்குதந்தை : அருட்பணி. த. ஜான் கென்னடி

குடும்பங்கள் : 55 +
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு

திருவிழா : ஆடி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறும்.

வழித்தடம் : ஈரோடு - கொக்கராயன்பேட்டை -ஓடப்பள்ளி.


வரலாறு :

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள செழிப்பான அழகிய ஊர் ஓடப்பள்ளி.

1942-ம் ஆண்டு அருட்தந்தை வெங்கத்தனம் அடிகளார் அவர்களால், புனித ஆண்ட்ரூஸ் ஆர்.சி துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.1991-ம் ஆண்டு புதிய கட்டிடம் உருவானது.

மேலும் இவ்வூரில், முதலில் 1991-ம் ஆண்டு புனித அன்னாள் கன்னியர் இல்லம் கட்டப்பட்டது.

19.03.1999 அன்று ஓடப்பள்ளி புனித மரிய மதலேனாள் ஆலயம் கட்டப்பட்டு , அருட்தந்தை. மார்டின் அவர்களால் புனிதப்படுத்தப் பட்டது.

03.08.2015 அன்று புனித மரிய மதலேனாள் ஆலயமானது அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. இக்னேஷியஸ் பிதேலிஸ் அவர்களின் முயற்சியால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அருட்பணி. எட்வர்ட் ராஜன் அவர்களால் மந்திரிக்கப் பட்டது.