599 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், K. மோரூர்

      

புனித ஆரோக்கியநாதர் ஆலயம் 

இடம் : K. மோரூர், K. மோரூர் அஞ்சல், காடையாம்பட்டி தாலுகா, 633654

மாவட்டம் : சேலம் 

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : மேட்டூர் 

நிலை : மறைப்பரப்பு தளம் 

பங்குத்தந்தை : அருள்பணி. எட்வின், HGN

குடும்பங்கள் : 80

அன்பியங்கள் : 4

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 07.00 மணி செபமாலை, 07.30 மணி திருப்பலி. 

வாரநாட்களில் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு. 

வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை. 

சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி, இடைவிடா சகாய அன்னை நவநாள் 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை. 

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். 

வழித்தடம் : சேலத்தில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில், தீவட்டிப்பட்டி -டேனீஸ்பேட்டை -காடையாம்பட்டி -K. மோரூர்.

Location map :

Arokiyanather Church

K.Morur, Tamil Nadu 636354

https://g.co/kgs/YEHetm 

வரலாறு :

மாங்கனியின் மாநகரமாம் சேலம் மறைமாவட்டத்தில், தருமபுரி மறைமாவட்டத்தின் எல்லைப் பகுதியாக விளங்கும் K. மோரூர் என்னும் ஊரில் அமைந்துள்ள புனித ஆரோக்கியநாதர் ஆலய வரலாற்றைக் காண்போம். 

எழில்மிகு சோலைகள் நிறைந்த K. மோரூர் ஊரில் 1977 -ம் ஆண்டு அருள்பணி. R. சேவியர் அவர்களால் புனித ஆரோக்கியநாதரை பாதுகாவலராகக் கொண்டு ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலயம், தற்போது தருமபுரி மறைமாவட்டத்தில் உள்ள 

B. பள்ளிப்பட்டி பங்கின் கிளைப்பங்காகவும், பிறகு பொம்மிடி பங்கின் கிளைப்பங்காகவும் செயல்பட்டு வந்தது. பின்னர், B. பள்ளிப்பட்டி பங்கிலிருந்து V. கொங்கரப்பட்டி பங்கு 1997 -ம் ஆண்டு தனிப் பங்காக உதயமான போது, K. மோரூர் அதன் கிளைப்பங்காக மாறியது. 

V. கொங்கரப்பட்டி பங்கின் பங்குத்தந்தை அருள்பணி. ஜூடு நிர்மல்தாஸ் அவர்களின் பணிக்காலத்தில், K. மோரூரில் லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு, சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

V. கொங்கரப்பட்டி பங்கின் பங்குத்தந்தை அருள்பணி. அமல் மகிமை ராஜ் பணிக்காலத்தில் ஆலயமண்டபம் கட்டப்பட்டது. கல்லறைதோட்டத்தை சுற்றிலும் கால்வாய் அமைக்கப் பட்டது. 

V. கொங்கரப்பட்டி யிலிருந்து பிரிந்து 14.06.2015 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்கள் தலைமையில் K. மோரூரானது ஒரு மறைப்பரப்பு தளமாக உயர்த்தப்பட்டது. இதன் நிர்வாகத் தந்தையாக அருள்பணி. A. அழகு செல்வம் (2015-2016) அவர்கள் பொறுப்பேற்று, திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

பிறகு, அருட்பணி. R. சேவியர் (2016-2017) அவர்கள் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று, பங்குத்தந்தை இல்லம் பாதி அளவு  கட்டுமானப்பணிகள் நடைபெற்றது.

தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. A. அழகு செல்வம் அவர்கள், ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தி, பங்குத்தந்தை இல்லத்தை கட்டி முடித்தார். 

அருள்பணி. சைமன் பெஞ்சமின், HGN அவர்கள் பணிக்காலத்தில், ஆலய வளாகம், ஆலய பலிபீடம் புதுப்பிக்கப்பட்டது. கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்ற கெபி கட்டப்பட்டது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஆழ்துளை கிணறு போடப்பட்டது. அன்பியங்கள் ஒருங்கிணைக்கப் பட்டன. மரியாயின் சேனை துவக்கப் பட்டது. 

தற்போது 2020 ஆகஸ்ட் முதல் அருள்பணி. எட்வின், HGN அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தி வருகின்றார். 

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்கு பணிக்குழு

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

3. மரியாயின் சேனை 

4. மறைக்கல்வி

5. பீடச்சிறார் 

6. பாடகற்குழு 

7. இளையோர் இயக்கம்

பங்கில் பணியாற்றிய அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி. அழகு செல்வம் (நிர்வாகத்தந்தை) (2015-2016)

2. அருட்பணி. R. சேவியர் (2016-2017)

3. அருட்பணி. அழகு செல்வம் (2017-2018)

4. அருட்பணி. சைமன் பெஞ்சமின், HGN (2018-2020)

5. அருட்பணி. எட்வின், HGN (2020 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. எட்வின், HGN.