புனித சூசையப்பர் தேவாலயம்
இடம் : பாத்திமாநகர்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்
ஆயர். மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ்
பங்குத்தந்தை : அருட்தந்தை அருள்தாஸ்
நிலை : பங்குதளம்
குடும்பங்கள் : 240
அருள் வாழ்வியங்கள் (அன்பியம்) : 12
ஞாயிறு : காலை 07.30 மணிக்கு மறைக்கல்வி
காலை 09.00 மணிக்கு காலை ஜெபம்
காலை 09.30 மணிக்கு திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு ஜெபமாலை, மாலை 06.00 மணிக்கு திருப்பலி தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம், இறுதியில் நேர்ச்சை கஞ்சியும் வழங்கப் படுகின்றது.
வரலாறு :
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தில் மெதுகும்மல் கிராமத்தில், கூத்தன்விளையை சார்ந்த திரு. *பொடியன் நாடார் மக்களான திருவாளர்கள் *கேசவன் மற்றும் மனாஸ் நாடார்* அவர்களால் இனாமாக வழங்கப்பட்ட 95 சென்ட் நிலத்தில் 01-09-1935 ல் அருட்தந்தை *சென்னாட்டு மத்தாய் கத்தனார்* அடிகளாரால், ஓலைக் குடிலில் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது.
பிரான்சிஸ்கன் சபை அருட்பணியாளர்களின் அயராத மறை பரப்பு பணியால் 50 குடும்பத்துடன் இருந்த பங்குதளத்தை 125 குடும்பமாக்கி தலத்திருச்சபையில் இணைத்தனர்.
அருட்தந்தை ஜோஷ்வா தாழத்தேதில் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயமணி மற்றும் மணிமேடை கட்ட முயற்சி மேற்கொண்டு திரு செல்லப்பன், திருமதி றோசம்மாள் குடும்பத்தினரின் பொருளுதவியால் பணிகளை செய்தார்.
அருட்தந்தை ஜேக்கப் கரியந்தானத் அடிகளார் முயற்சியால் ஓட்டினால் ஆன குருகுல இல்லம் ஒன்றை நிறுவினார்.
1971 -ம் ஆண்டு ஆயர் பெருந்தகை பெனடிக்ட் மார் கிரிகோரியஸ் ஒத்துழைப்பால் தனிப்பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜான் குற்றியேல் பதவியேற்றார்.
அருட்தந்தை ஜான் தாழையில் அவர்கள் குளப்புறம் என்று இருந்த ஆலயத்தை, புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், பாத்திமாநகர் என மாற்றினார்.
தொடர்ந்து அருட்தந்தை ஜோசப் பிலாங்காலை அவர்கள் மணிமேடையை புதுப்பித்தார்.
அருட்தந்தை பிரேம் குமார் அவர்கள் பல பக்த இயக்கங்களை புத்துயிரூட்டி புதுப்பித்தார்.
1999 ல் அருட்தந்தை ஜார்ஜ் தாவரத்தில் அவர்கள் ஆலய பலிபீடத்தை விரிவாக்கம் செய்து, அன்றைய மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு யூஹானோன் மார் கிறிஸ்டோஸ்டம் ஆண்டகை அவர்கள் அர்ச்சித்தார்.
2000-'01 ஆண்டுகளில் ஒரு குருசடியும், கல்வாரி தோட்டமும், மணி விழா கலைக்கூடமும் கட்டப் பட்டது.
அருட்தந்தை ஜஸ்டின் நுள்ளிக்காடு அவர்களின் முயற்சியால் பழைய குரு இல்லத்தை மாற்றி புதிய கான்கிரீட் குரு இல்லம் கட்டப்பட்டது.
2009 -ம் ஆண்டு அருட்தந்தை பெர்னார்ட் அவர்களின் பணிக்காலத்தில், பங்கின் 75 -வது ஆண்டு பவள விழாவிற்கான துவக்கவிழா, மார்த்தாண்டம் ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து அருட்தந்தை அருள்தாஸ் அவர்கள் பொறுப்பேற்று பவளவிழா நிறைவுவிழா திருநாள் பிரமாண்ட முறையில் கொண்டாடப் பட்டது. அந் நாட்களில் தான் புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டு, ஆயரின் அனுமதியும் வாங்கப்பட்டது.
2015 -ம் ஆண்டில் புதிய ஆலய கட்டுமானப் பணிக்களை மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
சுமார் மூன்றரை ஆண்டுகள் அருட்தந்தையின் வழிநடத்துதல், திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பாலும், அருட்சகோதரிகளின் ஒத்துழைப்பாலும், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளாலும் புதிய ஆலயத்தை கட்டி முடத்து 29-12-2018 அன்று அர்ச்சிக்கப் படவுள்ளது.
மண்ணின் இறை அழைத்தல்கள் :
1.Fr ஜான் கிறிஸ்டோபர் OIC ( Correspondent of Bethany Navajeevan matriculation, CBSE school, Vencode )
2. Fr ஏசுதாஸ்
3. Fr வில்பிரட்
4. Fr வினு இம்மானுவேல்
திருத்தொண்டர் : சகோ ஷாஜி
அருட்சகோதரிகள் :
1. Sis மரியா ஜோஸ்
2. Sis அஜிதா
வழித்தடம் : மார்த்தாண்டத்திலிருந்து 82F இரயுமன்துறை பேருந்தில் பயணித்து, பாத்திமாநகரில் இறங்கினால் இவ்வாலயத்தை வந்தடையலாம்.