புனித தோமையார் ஆலயம்
இடம் : நெடும்பரம்
மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : அல்போன்சாபுரம்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : ஜெகன்மாதா ஆலயம், கனகம்மாசத்திரம்
பங்குத்தந்தை : அருட்பணி. M. அந்தோணி தாஸ் (கப்புசின்)
குடும்பங்கள் : 80
அன்பியங்கள் : 4
ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு
வெள்ளி திருப்பலி : மாலை 07.00 மணிக்கு.
திருவிழா : ஜூலை மாதம் 02 ஆம் தேதி.
மற்றும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி.
வழித்தடம் : கனகம்மாசத்திரம் -திருத்தணி.
வரலாறு :
அழகிய கிராமமான நெடும்பரம் ஊரில் வசித்து வந்த மக்கள் சமூக பொருளாதார, கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஏழ்மையுடன் வாழ்ந்து வந்தனர்.
"ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்."
திருப்பாடல்கள் 146:8
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை-மயிலை உயர் மறை மாவட்டத்தில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த அருட்பணி. தாமஸ் வளவந்தாரா அவர்கள் இப்பகுதிக்கு வந்து, இந்த மக்களுக்கு பசி போக்க உணவளித்து, உறைவிட வசதிகள் செய்து கொடுத்து இவர்களின் வாழ்வு மேம்பட அயராது உழைத்தார்.
அருட்பணி. தாமஸ் வளவந்தாரா அவர்கள் நெடும்பரத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆலயம் ஒன்றை கட்டி அர்ச்சித்து, இம் மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றினார்.
தற்போது கனகம்மாசத்திரம் பங்கின் கிளைப் பங்காக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மரியாயின் சேனை, மேய்ப்புப்பணிக் குழு ஆகியன சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
Irish Presentation primary school இப்பகுதி மாணவர்களுக்கு சிறப்பாக ஆரம்பக் கல்வியை வழங்கி வருகிறது.
இவ்வாறாக மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த மக்கள், அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலில் படிப்படியாக கல்வி மற்றும் சமூக மாற்றம் பெறத் துவங்கி சிறப்பாக வாழ்கின்றனர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி அந்தோணி தாஸ் அவர்கள்.