630 புனித சுவக்கின் அன்னாள் ஆலயம், குருமிலாங்குடி


புனித சுவக்கின் அன்னாள் ஆலயம் 

இடம் : குருமிலாங்குடி, 623404

மாவட்டம் : இராமநாதபுரம் 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : R.S மங்கலம் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. புனித அடைக்கல அன்னை ஆலயம், தளிர்மருங்கூர் (தெற்கு) 

2. புனித செபஸ்தியார் ஆலயம், தளிர்மருங்கூர் (வடக்கு) 

3. புனித செபஸ்தியார் ஆலயம், தளிர்மருங்கூர்  (கிழக்கு)

4. புனித சவேரியார் ஆலயம், புத்துவயல் 

5. புனித செபஸ்தியார் ஆலயம், அரியப்புவயல்

6. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பிச்சனேந்தல்

7. புனித சாந்தப்பர் ஆலயம், பழங்குளம் 

8. புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், சித்தம்பூரணி 

9. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், பாப்பானேந்தல் 

10. புனித செபஸ்தியார் ஆலயம், சேமவயல் 

11. புனித சந்தனமாதா ஆலயம், தேளூர் 

பங்குத்தந்தை : அருள்பணி. J. மரிய அந்தோனி 

குடும்பங்கள் : 305 (கிளைப்பங்குகள் சேர்த்து)

ஞாயிறு திருப்பலி காலை 08.30 மணி

வாரநாட்களில் கிளைப்பங்குகளில் திருப்பலி

ஆலயத்தின் சிறப்பு: புனித சுவக்கின் அன்னா ஆலயமானது, குழந்தைப்பேற்றை ஏங்கித் தவிப்போருக்கு வரம் தரும் ஆலயமாகத் திகழ்கிறது. பல தம்பதியர் இவ்வாலயத்தில் வந்து செபித்து குழந்தைப்பேற்றை பெற்றிருக்கிறார்கள். 

திருவிழா : 

ஆவணி மாதம் முதல் சனி, ஞாயிறு. 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. ஆரோக்கியசாமி

2. அருள்பணி. ஆனந்த், OCD

3. அருள்பணி. குமார், MMI

4. அருள்பணி. பிரபு, SJ

5. அருள்சகோதரி. ஜெயந்தி, SSA 

6. அருள்சகோதரி. ஜான்சி, FSAG

7. அருள்சகோதரி. ஜான்சி, FSAG

8. அருள்சகோதரி. கலையரசி, SSA 

9. அருள்சகோதரி. ப்ரியா, FSAG

10. அருள்சகோதரி. பாக்கியம் 

11. அருள்சகோதரி. A. கவிதா, SMA 

12. அருள்சகோதரி. J. கவிதா

வழித்தடம் : தொண்டி -யிலிருந்து மேற்கு நோக்கி 3கி.மீ தூரத்தில் குருமிலாங்குடி அமைந்துள்ளது. 

Location Map :

Kurumilangudi

Kurumilangudi - Vill,, Thondi, Tamil Nadu 623404

https://goo.gl/maps/FdVdj31aDLjd383a6

வரலாறு :

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழைமையான ஆலயங்களில் ஒன்றான குருமிலாங்குடி ஆலய வரலாற்றைக் காண்போம்.. 

செம்மண் புனிதரான புனித அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ) கைது செய்யப்பட்டு, ஓரியூர் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது, குருமிலாங்குடி வழியாகச் சென்றதாக ஒரு வாய்மொழி மரபு உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊரில் வாழ்ந்த கத்தோலிக்க மக்களுக்காக தொடக்க காலத்தில் சிறு ஆலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்ததன. தொடர்ந்து காரங்காடு பங்கின் கிளைப் பங்காக குருமிலாங்குடி செயல்பட்டு வந்தது. 

1922 ம் ஆண்டு காரங்காடு பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, குருமிலாங்குடி தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. 

தற்போதைய புதிய ஆலயமானது கட்டப்பட்டு, 16.05.1997 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு S. எட்வர்ட் பிரான்சிஸ் D.D அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

பங்கின் நூற்றாண்டு விழா 2021 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கொண்டாடப்பட இருக்கிறது. 

முழுக்க முழுக்க கிராமப்புற பங்கான குருமிலாங்குடி விவசாயக் குடிமக்களை தன்னகத்தே கொண்டது. மக்கள் ஆலய செயல்பாடுகளிலும், ஆன்மீகத்திலும் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். 

மேலும், சமூக விடுதலையிலும் நாட்டம் கொண்டவர்கள் ஆவர். உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் வழிநடத்துதலில், பங்கு மக்கள் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். 

பங்கில் புனித சுவக்கின் அன்னம்மாள் நடுநிலைப் பள்ளி உள்ளது. 

பங்கில் புனித அன்னாள் சபை சகோதரிகள் (மாதவரம்) இல்லம் உள்ளது. 

பங்கில் உள்ள பக்த சபைகள் :

1. இயேசுவின் கண்மணிகள் 

2. பீடப்பூக்கள் 

3. திருக்குடும்ப சபை

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

5. இளையோர் இயக்கம் 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. R. விசுவாசம் (1922)

2. அருள்பணி. மரியதாஸ் (1923)

3. அருள்பணி. T. S. M. இக்னேஷியஸ், SJ (1923-1924)

4. அருள்பணி. ஜோப்லெட், SJ (1924-1926)

5. அருள்பணி. குருவில்லா, SJ (1927-1933)

6. அருள்பணி. பிக்கார்டு, SJ (1933-1934)

7. அருள்பணி. B. A. மரிய நாயகம் (1934-1937)

8. அருள்பணி. P. சவரிமுத்து (1937)

9. அருள்பணி. M. சூசை மாணிக்கம் 

10. அருள்பணி. P. M. D. சில்வா (1956-1965)

11. அருள்பணி. V. M. சவரிமுத்து (1965-1968)

12. அருள்பணி. M. G. பாக்கியர் (1968-1969)

13. அருள்பணி. R. S. பீட்டர் (1969-1977)

14. அருள்பணி. P. ஜோசப் (1977-1984)

15. அருள்பணி. அருள்ஜீவா (1985-1986)

16. அருள்பணி. A. சேவியர் அருள்ராஜ் (1989-1994)

17. அருள்பணி. S. எட்வின்ராயன் (1994)

18. அருள்பணி. S. அருள்தாஸ் (1995-2000)

19. அருள்பணி. கிளமென்ட் ராஜா (2000-2006)

20. அருள்பணி. சார்லஸ் கென்னடி (2006-2009)

21. அருள்பணி. அம்புரோஸ் லூயிஸ் (2009-2014)

22. அருள்பணி. மரிய லூயிஸ் (2017-2018)

23. அருள்பணி. J. மரிய அந்தோனி (2018 முதல் தற்போது...)

தகவல்கள் மற்றும் புகைப்படம்: பங்குத்தந்தை அருள்பணி. J. மரிய அந்தோனி.