205 நல்லாயன் ஆலயம், நல்லாயன்புரம்


நல்லாயன் ஆலயம்

இடம் : நல்லாயன்புரம் (மலையடி)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்

பங்குத்தந்தை : அருட்பணி காட்வின் சௌந்தர்ராஜ்.

கிளைகள் :

1. ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கிய அன்னை நகர்
2. கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்துராஜ புரம்.

குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு

புதன்கிழமை மாலை 06.30 மணிக்கு சகாய மாதா நவநாள் திருப்பலி.

வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஈஸ்டர் பண்டிகை முடிந்த பின்னர் வருகின்ற நான்காவது ஞாயிறாகிய நல்லாயன் ஞாயிறை ஒட்டிய 10 நாட்கள்.

வரலாறு :

அப்போதைய திருவனந்தபுரம் மறை மாவட்டம் மணிவிளை பங்கிற்குட்பட்ட மூவோட்டுக்கோணம் பகுதியில் ஒரு ஓலைக்குடிசை அமைத்து, பள்ளிக்கூடம் துவங்கி அப்பகுதிவாழ் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு திருப்பலியும் , மறைக்கல்வியும் 1930 -ல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மலையடி பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த மற்றுமொரு பள்ளிக்கூடம் விலைக்கு வாங்கப்பட்டு அங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலியும் மறைக்கல்வியும் வழங்கப்பட்டது.

1952 -ல் இவ்விரு பகுதி கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைத்து புதிய ஆலயம் கட்டப்பட்டு, நல்லாயன்புரம் என்ற புதிய பெயர் நல்லாயன் இயேசுவின் பெயரால் சூட்டப்பட்டது. 1965 ல் ஆலயம் கட்டிமுடிக்கப் பட்டது.

2009-ல் ஆலய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது.

2012 -ல் எழிலான சகாய மாதா குருசடி ஒன்று கட்டியெழுப்பப்பட்டது.

2017 -ம் ஆண்டில் ஆலய பீடம் மற்றும் ஆலயத்தின் இருபக்கங்களும் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட்டது. மேலும் ஆஸ்பெஸ்டாஸ் மேற் கூரை மாற்றப்பட்டு கான்கிரீட் செய்யப் பட்டது. சிமென்ட் தரை மாற்றப்பட்டு கிரானைட் தரை போடப்பட்டது.

இந்திய, தமிழ் கட்டிடக்கலை நயங்களுடன் விளங்கும் கோபுரமும் தூண்களும் கத்தோலிக்கர்களின் உயர்வான மதநல்லிணக்க உணர்வுகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.

தற்போது அருட்தந்தை காட்வின் சௌந்தர்ராஜ் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில் நல்லாயன் புரம் வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக முன்னேறி செல்கின்றது.

களியக்காவிளை - மூவோட்டுக்கோணம் வழித்தடத்தில் நல்லாயன்புரத்தில் (மலையடி) இவ்வாலயம் அமைந்துள்ளது.