மாவட்டம்: சேலம்
மறைமாவட்டம்: சேலம்
மறைவட்டம் : சேலம்
நிலை : கத்தீட்ரல் பேராலயம்
கிளைப்பங்குகள் :
1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சாமிநாதபுரம்
2. புனித அந்தோனியார் ஆலயம், அரிசிபாளையம்
அதிபர் & பங்குத்தந்தை : அருட்பணி. ஜோசப் லாசர்
உதவிப்பங்குத்தந்தை: அருட்பணி. ஸ்டேன்லி சேவியர்
குடும்பங்கள் : 900
அன்பியங்கள் : 44
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு : காலை 06.00 மணி, காலை 08.00 மணி, காலை 10.00 மணி, மாலை 05.00 மணி (ஆங்கிலத் திருப்பலி) மற்றும் மாலை 06.00 மணி திருப்பலி
திங்கள் முதல் சனி வரை : காலை 06.00 மணி மற்றும் மாலை 06.00 மணி திருப்பலி
செவ்வாய் : மாலை 06.00 மணி புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் நவநாள் திருப்பலி
வியாழன் : காலை 11.00 மணி மற்றும் மாலை 06.00 மணி குழந்தை இயேசு நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை
சனி : மாலை 04.30 மணி திருமுழுக்கு மற்றும் ஒப்புரவு அருட்சாதனங்கள்
மாதத்தின் முதல் வியாழன் : காலை 06.30 மணி முதல் மாலை 07.30 மணிவரை முழு நேர நற்கருணை ஆராதனை.
காலை 11.00 மணி மற்றும் மாலை 06.00 மணி குழந்தை இயேசு நவநாள், நலம் நாடுவோருக்கான சிறப்புத் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை
மாதத்தின் முதல் வெள்ளி : காலை 06.30 மணிமுதல் மாலை 07.30 மணிவரை முழு நேர நற்கருணை ஆராதனை
மாதத்தின் இரண்டாம் ஞாயிறு : காலை 08.00 மணி சிறார் திருப்பலி
மாதத்தின் நான்காம் வியாழன் : மாலை 06.00 மணி திருப்பலிக்குப்பின் பேராலயத்தை சுற்றி திரு ஒளி பவனி
பேராலயத் திருவிழா : ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை
வழித்தடம்: சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 200மீ தொலைவில் அரிசிப்பாளையத்தில் குழந்தை இயேசு பேராலயம் அமைந்துள்ளது.
பேராலய வரலாறு :
1930ம் ஆண்டில் திருத்தந்தை பதினாறாம் பத்திநாதரின் ஆணையின் பேரில், பாண்டிச்சேரி உயர் மறைமாவட்டத்தின் கீழுள்ள பகுதிகளைப் பிரித்து சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களை உள்ளடக்கி சேலம் மறைமாவட்டம் உதயமானது. இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மேதகு. ஹென்றி புரூனியர் அவர்கள் நியமிக்கப்பட்டார். வசதிகளே இல்லாத காலத்தில் அன்றைய குருக்களின் கடின உழைப்பால் சேலம் மறைமாவட்டம் வளர்ந்தது.
சேலம் மறைமாவட்டத்தின் தலைமை பங்காகிய செவ்வாய்பேட்டையிலிருந்து 1953ம் ஆண்டு அரிசிப்பாளையம் பங்கு பிரிக்கப்பட்டு, புனித சவேரியார் இளங்குருமட ஆலயத்தை மையமாகக் கொண்டு அரிசிப்பாளையம் பங்கு உருவாக்கப்பட்டது. இப்புதிய பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. D. அருள் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட போது இப்பங்கு அரிசிப்பாளையம், பெரமனூர், சாமிநாதபுரம், பள்ளப்பட்டி, அழகாபுரம், ஜான்சன்பேட்டை, வீராணம் ஆகிய பகுதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது.
27.11.1991 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி ஆண்டகை அவர்களால் குழந்தை இயேசு பேராலய நேர்ந்தளிப்பு விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று முதல் தூய சவேரியார் பங்கானது குழந்தை இயேசு பேராலய பங்காக பெயர் மாற்றமும் இடமாற்றமும் பெற்று சிறந்து விளங்குகிறது.
சேலம் மறைமாவட்டத்திற்கு இவ்வழகிய பேராலயத்தை கட்டிக்கொடுத்து சிறப்புற மறைமாவட்டத்தை வழிநடத்தி வந்த முன்னாள் ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி ஆண்டகை அவர்கள் 09.06.1999 அன்று இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் பேராலயத்தின் மேற்குப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தை இயேசு பேராலயம் சேலம் நகரத்தின் நடுவில் உள்ள அரிசிப்பாளையத்தில் சுமார் 4 1/2 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் 14.08.1988 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பிரான்ஸ் நாட்டு கோத்திக் கட்டடக்கலை வடிவமைப்புடன் கட்டப்பட்டு, 27.11.1991 அன்று பேராயர்கள், 13 ஆயர்கள், 150 குருக்கள், 400 அருட்கன்னியர்கள், ஏராளமான பொதுநிலையினர்கள் பங்குகொண்ட திருப்பலியில் இப்பேராலயம் அர்ச்சிக்கப்பட்டது. இப்பேராலயமானது, மறைந்த முன்னாள் ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களின் சிறப்பை இன்றும் எடுத்துக்கூறும் சான்றாக உள்ளது. 18,000 ச.மீ பரப்பளவு கொண்ட இப்பேராலயத்தில் 5,000 இறைமக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடி செபிக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. இப்பேராலயத்தில் உள்ள ஒரே பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட குழந்தை இயேசுவின் திருச்சுரூபம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெரெய்ப்பூரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரரால் செய்யப்பட்டது. சேலத்தில் உள்ள ஒரு இந்து சகோதரர் இதைச் செய்வதற்கு பொருளுதவி செய்தார். இதுபோல் மதங்களைக் கடந்து சேலம் மாநகரின் நினைவுச் சின்னமாக இப்பேராலயம் திகழ்கிறது.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. D. அருள்
2. அருட்பணி. J. J. சாந்தப்பா
3. அருட்பணி. I. செல்வரத்தினம்
4. அருட்பணி. T. M. சவரிமுத்து
5. அருட்பணி. பால் தாழதட்
6. அருட்பணி. A. செபஸ்தியான்
7. அருட்பணி. S. அமல்ராஜ்
8. அருட்பணி. S. சவரி (1992-1998)
9. அருட்பணி. M. S. மார்டின் (1999-2004)
10. அருட்பணி. S. புஷ்பநாதன் (2004-2008)
11. அருட்பணி. A. சிங்கராயன் (2008-2013)
12. அருட்பணி. I. கிரகோரி ராஜன் (2013-2018)
13. அருட்பணி. S. ஜான் ஜோசப் (2018-2020)
14. அருட்பணி. A. ஜோசப் லாசர் (2020 முதல் தற்போது வரை...)
பங்கில் பணியாற்றிய உதவிப்பங்குத்தந்தையர்கள்
அருட்பணி. A. ஆரோக்கிய டேவிட் (2015 ஜூன் - ஆகஸ்ட்)
அருட்பணி. இன்னாசி முத்து (2007-2008)
அருட்பணி. D. ஆனந்தராஜ் (2009-2010)
அருட்பணி. ஸ்டீபன் சொரூபன் (2012-2013)
அருட்பணி. வின்சென்ட், ISCH (2019-2020)
அருட்பணி. ஸ்டேன்லி சேவியர் (2020-2021)
அருட்பணி. A. மெசியா (2021- Till Today...)
அரிசிப்பாளையம் பங்கின் கல்வி நிறுவனங்கள்:
1. Little Flower Middle School (Diocese Management)
2. Little Flower Higher Secondary School (LFHSS - Diocese Management)
3. Little Flower Metriculation School (SMMI Sisters Management)
4. St. Mary's Girls Higher Secondary School (St. Franciscon Salesian Sisters Management)
5. Cluny Metriculation School (St. Joseph Cluny Sisters Management)
பங்கின் இல்லங்கள் மற்றும் மருத்துவமனை:
1. அமல அன்னையின் பிரான்சிஸ்கு சலேசிய அருட்கன்னியர்கள் இல்லம் (SMMI)
2. புனித மரியன்னை சிறுமியர் இல்லம் (மறைமாவட்ட நிர்வாகம்)
3. தொன் போஸ்கோ அன்பு இல்லம் (தொன் போஸ்கோ சலேசிய சபையினர் நிர்வாகம்)
4. அமல அன்பு கரங்கள் (அமல அன்னையின் பிரான்சிஸ்கு சலேசிய சபை கன்னியர்கள் நிர்வாகம்)
5. புனித சூசையப்பர் குளூனி சபை கன்னியர்கள் இல்லம்
6. புனித மரியன்னை மருத்துவமனை (அமல அன்னையின் பிரான்சிஸ்கு சலேசிய சபை கன்னியர்கள் நிர்வாகம்)
பங்கில் செயல்படும் பக்தசபைகள் :
1. பங்கு ஆலோசனைக்குழு
2. நிதிக்குழு
3. கிறிஸ்துவ நண்பர்கள் குழு
4. அருங்கொடை செபக்குழு
5. வின்சென்ட் தே பவுல் சபை
6. மரியாயின் சேனை (4 பிரசீடியங்கள்)
7. பாடற்குழு
8. இளைஞர் இளம்பெண்கள் குழு
9. பீடச்சிறுவர்கள் குழு
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. A. சார்லஸ்
2. அருட்பணி. தேவசகாயம், தருமபுரி மறைமாவட்டம்
3. அருட்பணி. V. ஆல்பர்ட் அந்தோணிராஜ்
மற்றும் பல அருட்சகோதரிகள்..
அரிசிபாளையம் குழந்தை இயேசுவை நாடி தேடி வாருங்கள்! எண்ணிலடங்கா அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற்று, குடும்பங்களில் இறையாட்சியை கட்டியெழுப்பி நிறைவாழ்வு வாழ்ந்திடுங்கள்.