732 கடற்கரை புனித அந்தோனியார் ஆலயம், வேர்க்கொட்டு இராமேஸ்வரம்

  

கடற்கரை புனித அந்தோனியார் சிற்றாலயம்

இடம்: வேர்க்கொட்டு, இராமேஸ்வரம், 623526

நிலை: சிற்றாலயம்

பங்கு: புனித சூசையப்பர் ஆலயம், வேர்க்கொட்டு, இராமேஸ்வரம்

பங்குப்பணியாளர்: அருட்பணி. பி. தேவசகாயம்

உதவிப் பங்குப்பணியாளர்: அருட்பணி. சே. ஜேம்ஸ் ராஜா

செவ்வாய் மாலை 05:15 மணிக்கு திருப்பலி

திருவிழா: ஜூலை மாதம் 09-ம் தேதி

Location map:

https://maps.app.goo.gl/Wk1XTryYpRFCV8bC8

ஆலய வரலாறு:

"1983 -ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் ஏற்பட்ட பிறகு, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் தமிழர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆகவே கச்சத்தீவு ஆலய நினைவாக இராமேஸ்வரம் வேர்க்கொட்டு கடற்கரையில், சீனக்கோபுர வடிவில் ஆலயம் கட்டப்பட்டு, 20.06.2000 அன்று அர்ச்சிக்கப்பட்டது."

படகுபராமத்து வேலை செய்து வந்த ஒரு கேரள மாநிலத்தவர் முதலில் சிறிய ஆலயத்தைக் கட்டினார். பின்னர் ஓடு வேய்ந்த ஆலயமாக மாற்ற முயற்சித்த போது கடற்படை அதிகாரி தடை விதிதத்தார். புனித அந்தோனியாரின் வல்லமையால் தடைவிதித்த அதிகாரியே ஆலயம் கட்ட அனுமதி அளித்தார்.

உரோமையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித அந்தோனியாரின் விரல், திருவிழா நவநாளின் போது முத்திசெய்ய அனுமதிக்கப் படுகிறது.

மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்லும் போது பாதுகாப்பு வேண்டி இவ்வாலயத்தில் செபித்து சென்று வருகின்றனர்.

புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு செல்ல இயலாதவர்கள், இவ்வாலயத்தில் தங்கி தீய ஆவிகளின் தொல்லையிலிருந்து விடுபடுகின்றனர்.

ஆலய பீடத்தில் திருச்சிலுவையை சுற்றிலும் கடல்சிப்பிகள் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தின் முன்புறம் புனித அந்தோனியார் கெபி, புனித ஆரோக்கிய அன்னை கெபி உள்ளது.

ஜூலை மாதத்தில் முதல் ஞாயிறு கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 9 நாட்கள் நவநாட்கள் கொண்டாடப்பட்டு, இறுதியில் கடல்பவனியும், தேர்ப்பவனியும் நடைபெறும்.

கடல் பவனியானது புனித அந்தோனியார் சுரூபத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசைப்படகில் ஏற்றி, கடலில் பவனியாக வருவது கண்கொள்ளா காட்சியாகும். முன்பு 200 விசைப்படகுகள் பவனியாக வரும். தற்போது கடற்படை படகுகள் மட்டுமே வலம் வரும்.

கடற்கரை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வாருங்கள்.. புனிதரின் பரிந்துரையால் இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குப்பணியாளர் அருட்பணி. தேவசகாயம் அவர்கள்