188 புனித யாக்கோபு ஆலயம், வாணியக்குடி


புனித யாக்கோபு ஆலயம்

இடம் : வாணியக்குடி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 1500
அன்பியங்கள் : 40

பங்குத்தந்தை : அருட்பணி ஆன்றோ
இணை பங்குத்தந்தை : அருட்பணி காலின்ஸ்

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மற்றும் காலை 07.00 மணி.

நாள்தோறும் திருப்பலி : காலை 06.15 மணிக்கு

திருவிழா : ஜூலை 25 -ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.

சிறு குறிப்பு :

கடற்கரையில் அமைந்துள்ள அழகிய ஆலயங்களில் வாணியக்குடி ஆலயமும் ஒன்று என்பது தனிச்சிறப்பு.

2019 ம் ஆண்டை இவ்வாலய பொன்விழா ஆண்டாகக் கொண்டாட இருக்கின்றனர்.

St. James உயர்நிலைப் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாலயத்திற்கு St. James மற்றும் St. Joseph பெயர்களில் இரண்டு திருமண மண்டபங்கள் உள்ளன.

மூன்று வருடத்திற்கு முன்னர் இவ்வாலய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அழகு படுத்தப் பட்டது.

ஆலயத்தின் உட்புறமானது ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆலயங்களில் காணப்படுவதைப் போன்று, அவற்றுக்கு நிகரான அழகிய கலை நயத்துடன் கூடிய பீடம், மேற்கூரை, பக்கவாட்டுச் சுவர்கள் காண்போரின் கண்களைக் கவர்வதுடன், விவிலிய வரலாற்று நிகழ்வுகளை நம் கண்முன் உயிரோட்டாமாக நிறுத்துகின்றன.

ஆலயங்களுக்கு திருப்பயணம் செல்பவர்கள் தவறாமல் இவ்வாலயத்திற்கு சென்று வரவும்.

தற்போது அருட்தந்தை ஆன்றோ அவர்களின் வழிகாட்டுதலில், இப்பங்கானது சிறப்பாக வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்கிறது ...!

வழித்தடம் :

நாகர்கோவில் - குளச்சல் -வாணியக்குடி.

மார்த்தாண்டம் - குளச்சல் -வாணியக்குடி.