174 புனித ஜார்ஜியார் ஆலயம், பள்ளவிளை


புனித ஜார்ஜியார் ஆலயம்

இடம் : பள்ளவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

பங்குத்தந்தை : அருட்பணி. ஜஸ்டின்

இணை பங்குத்தந்தை : அருட்பணி. ஜெபராஜ்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித பனிமய மாதா ஆலயம், #பட்டரிவிளை

குடும்பங்கள் : 145
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு

வியாழன் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

திருவிழா : மே மாத துவக்கத்தில் பத்து நாட்கள்

வழித்தடம் :

திங்கள்சந்தை -யிலிருந்து #தலக்குளம் சாலையில் வரும்போது #Arumugam மருத்துவமனை வந்து, அங்கிருந்து #மணவாளக்குறிச்சி செல்லும் சாலையில் #பள்ளவிளை -யில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

பள்ளவிளை வரலாறு :

கல்லுக்குட்டி ஆசான் என்பவர் கொத்தியாவட்டை என்ற இடத்தில் தமக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சிறு குருசடி அமைத்து இறைவனை வழிபட்டு வந்தார். இந்த குருசடியில் புனித ஜார்ஜியார் திருவுருவப் படம் வைக்கப்பட்டு மக்கள் ஜெபித்து வந்தனர். பல அற்புதங்கள் நடந்து வந்ததால் குருசடியின் பொருளாதார நிலையும் வளர்ச்சியடைய, குருசடி கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது.

அயல் நாட்டு நிதியுதவி மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் அவர்களின் முயற்சியால் புதிய ஆலயத்திற்கு மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 26.02.1974 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 1998 ஆம் ஆண்டு முதல் அன்பியங்கள் துவக்கப் பட்டன.

இவ்வாலய நிகழ்வுகளில் பிற சமய மக்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பு செய்து மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

அருட்பணியாளர்கள் மைக்கேல் ஆஞ்சலூஸ், ஜெலட்டின் ஜெரால்டு ஆகியோரால் மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களின் உதவியுடன் பீடம் புதுப்பித்தல், கலையரங்கம், குருசடி ஜெபக்கூடமாக மாற்றம் ஆகியப் பணிகள் செய்யப் பட்டன.

மண்ணின் மைந்தர்கள் :

1. அருட்பணி. ஜெயக்குமார்
2. அருட்பணி. ஆல்பின் ஜூடு.