724 புனித லூர்து மாதா ஆலயம், பொன்னக்கோன்பட்டி

     

புனித லூர்து மாதா ஆலயம்

இடம்: பொன்னக்கோன்பட்டி, மலையடிப்பட்டி அஞ்சல்

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: திருச்சி

மறைவட்டம்: மணப்பாறை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி

பங்குத்தந்தை: அருட்பணி. ஜேம்ஸ்

குடும்பங்கள்: 65

மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி நடைபெறும்

திருவிழா: பிப்ரவரி மாதத்தில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Br. சவரிமுத்து, மாரிஸ்ட் சகோதரர்கள்

2. Br. தாமஸ் ராபர்ட் எட்வர்ட், திருஇருதய சபை

3. Sr. எட்வர்ட், CIC

4. Sr. மெர்சி, CIC

5. Sr. மைக்கேல் சித்ரா, CFMSS

6. Sr. கேத்ரின் மத்தீனா, CFMSS

வழித்தடம்: மணப்பாறை -மலையடிப்பட்டி -பொன்னக்கோன்பட்டி

மலையடிப்பட்டியிலிருந்து 3கி.மீ தொலைவில் பொன்னக்கோன்பட்டி அமைந்துள்ளது

Location map: Our Lady Of Lourdes Church,Ponnakkonpatti.

Manaparai Taluk,Trichy District, Chettiapatti, Tamil Nadu 621307

https://maps.app.goo.gl/a42uRSJWgWeUPkLWA

ஊர் வரலாறு :

திருச்சி சமயபுரம் அருகே திருப்பட்டூர் என்னும் ஊரில் இருந்து இடம்பெயர்ந்து, பிச்சைமணியாரம்பட்டி என்னும் ஊரில் மக்கள் குடியேறி உள்ளனர். பின் இருப்புப்பாதை பணிகள் நடைபெற்றதால் அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்போதுள்ள பொன்னக்கோன்பட்டியில் நிரந்தரமாக குடியேறினர்.

ஊர்ப் பெயர்க் காரணம் :

இவ்வூரில் வாழ்ந்து வந்த பொன்னுக்கோன் என்பவர் நினைவாக இவ்வூர் பொன்னக்கோன்பட்டி என்னும் பெயர் பெற்றது.

ஆலய - வரலாறு & வளர்ச்சி நிலைகள் :

கி.பி.1952-ல் ஊர்ப் பொதுமக்கள் ஒருங்கிணைந்து, புனித லூர்து மாதாவிற்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்து அடித்தள அமைப்பு கட்டுமானப்பணி நடந்தது. கட்டுமானப் பணிகளைத் தொடர முடியாமல் போகவே 40 ஆண்டுகளுக்குப் பிறகு மலையடிப்பட்டி பங்குத்தந்தை அருட்பணி. பைபிள் S. தேவராஜ் அவர்களின் உதவியோடு புனித லூர்து அன்னை ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டு 29.02.1992 அன்று மேதகு ஆயர் S. L. கபிரியேல் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஆலய வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

நடைபெறும் வழிபாடுகள் :

தவக்காலங்களில் சிலுவைப் பாதையும், மாதமொரு முறை மலையடிப்பட்டி பங்குத்தந்தையால் திருப்பலியும், வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களால் ஜெபமாலை வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

அன்னதானம் :

புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் அன்று சமபந்தி அன்னதானம் வெகு சிறப்புடன் நடைபெறுகிறது.

புதுமைகள் நிறைந்த பொன்னக்கோன்பட்டி ஆலயம் வாருங்கள்.. இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

வரலாறு: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜோசப் அற்புதராஜ், OFM Cap 

மண்ணின் இறையழைத்தல்கள் தகவல்கள்: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. சூ‌. ஸ்டீபன் கஸ்பார், திண்டுக்கல் மறைமாவட்டம்

புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்களான திரு. வில்சன் பீட்டர் -டெய்சி மோனிஷா தம்பதியர்.