234 புனித சூசையப்பர் ஆலயம், சஞ்சாய நகர்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : சஞ்சாயநகர்

மாவட்டம் : தஞ்சாவூர்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ம. தேவதாஸ் அம்புறோஸ்

பங்குத்தந்தை : அருட்பணி A. அல்போன்ஸ் அடிகள்

நிலை : பங்குதளம்

கிளைப்பங்குகள் :

1. புனித சந்தியாகப்பர் ஆலயம், தளிகைவிடுதி
2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பாப்பாநாடு.

குடும்பங்கள் : 500
அன்பியம்:15

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு மற்றும் 08.30 மணிக்கு.

திருவிழா : மே மாதத்தில் முதல் வாரம் சனி மற்றும் ஞாயிறு.

சிறப்புகள் :

இவ்வாலயம் 3 தலைமுறைகளுக்கு பழமை வாய்ந்தது...

ஆண்டு தோரயமாக கணக்கிட்டதில் 1873 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தற்போதைய புதிய ஆலயமானது 30-04-2014 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் கீழ்தளத்தில ஆராதனை நாதர் ஆலயம் அமையப் பெற்றுள்ளது தனிச்சிறப்பு.

மண்ணின் இறையழைத்தல்களாக 12 குருக்களும், 24 அருட்சகோதரிகளையும் கொடுத்து உள்ளது சஞ்சாயநகர் இறை சமூகம்.

வழித்தடம் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

முகநூலில் தொடர;

https://www.facebook.com/st.josephchurchsanjayanagar/