353 பாத்திமா அன்னை ஆலயம், தெக்களூர்

    
பாத்திமா அன்னை ஆலயம்,

இடம் : தெக்களூர்

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை - மயிலை உயர் மறை மாவட்டம்.
மறை வட்டம் : அல்போன்சா புரம்

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :
1. சகாய மாதா ஆலயம், பெறுகுமி
2. திரு இருதய ஆண்டவர் ஆலயம், சிங்காராஜபுரம்
3. குழந்தை இயேசு ஆலயம், புச்சிரெட்டிபள்ளி.

பங்குத்தந்தை : அருட்பணி சேவியர் ஆரோக்கியசாமி IVD (IVD - இறை திருவுள சபை)

தொடர்பு எண் (பங்குத்தந்தை) : 9123573354

குடும்பங்கள் : 150 (கிளைப் பங்குகளையும் சேர்த்து)
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 07.45 மணிக்கு

திங்கள், வியாழன், வெள்ளி திருப்பலி : காலை 06.30 மணிக்கு

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

பிரதிமாதந்தோறும் 13 -ஆம் தேதி தியானம் மற்றும் குணமளிக்கும் ஆராதனை.

திருவிழா : மே 25-ஆம் தேதியை உள்ளடக்கிய ஏழு நாட்கள்.

வழித்தடம் : திருத்தணி - பள்ளிப்பட்டு சாலையில் 6 கி.மீ தூரத்தில் உள்ளது தெக்களூர்.

வரலாறு :

1952 -ஆம் ஆண்டு மேதகு ஆயர் லூயிஸ் மத்தியாஸ் அவர்களின் ஆசீரோடு கே. ஜி கண்டிகையை மையமாகக் கொண்டு, அதனை இயேசுவின் கூடாரமாகவும் அவரது அன்னை மரியா வலம் வரும் புனித இடமாகவும் தேர்ந்தெடுத்தவர் காலஞ்சென்ற அன்புத்தந்தை பரம்பெட் அடிகளார். சேவையின் சின்னமான அருட்தந்தை அவர்களை மக்கள் யாவரும் பெரிய சாமியார் என்றே அழைத்து வந்தனர்.

1957- இல் வசதிகளற்று, போதிய கல்வியறிவின்றி வாழ்ந்து வந்த தெக்களூர் கிராமத்தின் மீது அருட்தந்தை பரம்பெட் அடிகளாரின் பார்வை பட்டதால், வளர்ச்சியின் பாதையை நோக்கி சென்றது இக்கிராமம். அருட்தந்தை அவர்கள் கே. ஜி கண்டிகையிலிருந்து கால்நடை பயணம் மேற்கொண்டு தெக்களூரில் சிறு ஓலைக்கூரை ஆலயம் அமைத்து திருப்பலியும், மறைக்கல்வியும் திருமுழுக்கும் தந்து மக்களை மகிழ்வித்தார்.

1960-இல் அருட்பணி மரியநாயகம் ஆண்டகை அவர்களால் புனித பாத்திமா அன்னையின் பெயரில் புதிய ஆலயம் இங்கு உருவானது. அன்று முதல் கே. ஜி கண்டிகையின் கிளைப்பங்காக செயல்பட்டது. காலப்போக்கில் வளர்ச்சியின் காரணமாக 1967-இல் தனிப்பங்கானது. அதன்பிறகு சில காரணங்களால் 1972-இல் திருத்தணி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில் JMJ அருட்சகோதரிகள் இறைப்பணியாற்ற தெக்களூர் வந்தனர். இடைப்பட்ட காலங்களில் வளர்ச்சியின்மை காரணங்களால் இப்பங்கு மிகவும் நலிவுற்று காணப்பட்டது. இந்நிலையில் 30-05-2010 அன்று ஆலய பொன்விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

15-05-2011 அன்று சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் மேதகு ஏ. எம். சின்னப்பா அவர்களின் ஆசிரோடு, தெக்களூர் கிராம மக்களின் பெரும் முயற்சியின் பலனாகவும், மறை மாவட்ட குருக்களின் ஆதரவுடன் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி ஜோன்ஸ் கிளிட்டஸ் அவர்கள் நியமிக்கப் பட்டார்.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி சேவியர் ஆரோக்கியசாமி அவர்களின் சீரிய முயற்சியால் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு, இம் மக்களின் கல்வியறிவு மென்மேலும் வளர உறுதுணையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.