369 புனித யூதா ததேயு திருத்தலம், வாணுவம்பேட்டை


திருத்தூதர் புனித யூதா ததேயு திருத்தலம்.

இடம் : வாணுவம்பேட்டை

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு

நிலை : திருத்தலம்

பங்குத்தந்தை : அருட்தந்தை A. மார்ட்டின் ஜோசப்
இணை பங்குத்தந்தை : அருட்தந்தை வல்லபதாஸ் SDM

குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : காலை 06.30, காலை 08.30, மாலை 06.30 மணிக்கும் தமிழில்.

Sunday Evening : 05.00 Holy Mass in English
First Sunday 11.30 AM Special Novena Mass in English.

தினமும் காலை 06.00 மணிக்கு நற்கருணை ஆசீர், காலை 06.30 மணி மற்றும் மாலை 07.00 மணிக்கு திருப்பலி.

வியாழக்கிழமை :
நம்பிக்கை வியாழன் காலை 06.00 மணிக்கு நற்கருணை ஆராதனை, 06.30 மணிக்கு திருப்பலி.
காலை 10.30 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆராதனை, திருப்பலி.
மாலை 06.00 மணிக்கு செபமாலை, மாலை 06.30 மணிக்கு குணமளிக்கும் நற்கருணை ஆராதனை, திருப்பலி.

மாதத்தின் முதல் வியாழன் காலை 10.30 மணிக்கு திருச் செபமாலை, புனிதரின் நவநாள் செபம், திவ்ய நற்கருணை ஆராதனை, திருப்பலி, சாட்சி பகிர்வு, மதிய உணவு, மாலையில் 06.30 மணிக்கு புனிதரின் நவநாள் திருப்பலி தொடர்ந்து தேர்பவனி.

முதல் சனிக்கிழமை மாலை 07.00 மணிக்கு குழந்தை வரம் வேண்டும் தம்பதியருக்கு சிறப்பு செபம், ஆராதனை, ஆசீர்வாதம், திருப்பலி.

திருவிழா :
அக்டோபர் 25 முதல் 28 வரை.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி ரவி ஜோசப்
2. அருட்பணி விக்டர் வினோத்.
3. அருட்சகோதரி பவித்ரா அந்தோணி ராஜ்.

திருத்தல முகவரி :
எண் 9, மேடவாக்கம் மெயின் ரோடு, வாணுவம்பேட்டை, சென்னை - 91. தொடர்பு எண் : 044 22603765

திருத்தல இணையதளம் : http://www.st-judesshrine.com

திருத்தல முகப்புத்தக பக்கம் (FB page) : http://facebook.com/st.judesshrineVanuvampet

வழித்தடம் : தோமையார் மலை இரயில் நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு ( அனைத்து பேருந்துகளும்) பஸ் நிறுத்தம் - வாணுவம்பேட்டை பஸ் நிறுத்தம், புனித யூதா ததேயு திருத்தலம், வாணுவம்பேட்டை. ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.

திருத்தல வரலாறு :

திருத்தூதர் யூதா ததேயு திருத்தலமானது, செங்கை மறை மாவட்டத்தில் புனித தோமையார் மலை (பரங்கிமலை) புகைவண்டி நிலையத்திலிருந்து, சுமார் இரண்டு கி.மீ தூரத்தில் ஆதம்பாக்கத்தை அடுத்த மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணூவம்பேட்டையில் அமைந்துள்ளது.

1975-ஆம் ஆண்டு புனித மாற்கு ஆலயம் ஆதம்பாக்கத்தில் பங்காக உருவாக்கப் பட்டது. 1978 -ஆம் ஆண்டு வாணுவம்பேட்டையில் புனித யூதா ததேயு ஆலயம் கட்டப்பட்டு ஆதம்பாக்கம் புனித மாற்கு ஆலயத்தின் கிளைப்பங்காக உருவானது. அப்போது இத்திருத்தலத்தில் 50 குடும்பங்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதன்பிறகு ஆண்டுக்கு ஆண்டு குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

1987 முதல் 1993 வரை சென்னை மயிலை பேராயராக இருந்த Dr. கஸ்மீர் ஞானாதிக்கம் அவர்கள் ஆலய மேம்பாட்டிற்காக 25,000 ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். 2002 ஜூலை மாதத்தில் சென்னை மயிலை உயர் மறை மாவட்டம் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மறை மாவட்டம் உருவானது. மேதகு Dr.A.நீதிநாதன் அவர்கள் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயராக பொறுப்பேற்ற பிறகு, ஆதம்பாக்கம் சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்துடன் இணைக்கப் பட்டது.

வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு ஆலயமானது, ஆலந்தூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.

அதன்பிறகு ஆலயத்தின் வளர்ச்சி, பங்கு மக்களின் வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2006 -ஆம் ஆண்டு அருட்பணி G. M ஜோசப் அடிகளாரை பங்குத்தந்தையாகக் கொண்டு, தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

2009 -இல் அருட்பணி J.டெரி ஸ்டீபன் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.
2014- இல் அருட்பணி. மைக்கேல் சுரேஷ் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

06-07-2017 அன்று அதிசயிக்கதக்க வகையில் பீடத்தில் உள்ள இயேசுவின் பாடுபட்ட சுரூபத்திலிருந்து ஐந்து காயங்கள் வழியாக இரத்தம் கலந்த எண்ணெய் வடியக்கண்டு அனைவரும் பரவசமடைந்தனர்.

இவ்வாறு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது இறை பிரசன்னத்தை இவ்வாலயத்தில் வெளிப்படுத்தியதால், பரிசுத்த ஆவியின் வல்லமை நிறைந்த ஆலயமாக விளங்குகிறது. வெளியூர் மற்றும் பல பகுதிகளில் உள்ள மக்கள் ஆலயம் வந்து புனிதர் வழியாக இறைவனின் அருளை பெற்றுச் செல்கின்றனர்.

இவ்வாலயமானது செங்கல்பட்டு மறை மாவட்டத்தில் உள்ள ஒரே புனித யூதா ததேயு ஆலயம் என்பது குறிப்பிடத் தக்கது.

28-10-2018 ஆன்று மேதகு ஆயர் Dr. A. நீதிநாதன் அவர்களால் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. மாதந்தோறும் வெளிவரும் நம்பிக்கைச்சுடர் இதழ் தனிச்சிறப்பு.

2019 முதல் அருட்பணி A. மார்ட்டின் ஜோசப் அவர்கள் பொறுப்பேற்று, இத் திருத்தலத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

தினந்தோறும் காலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை இறை வழிபாட்டிற்கு திருத்தலம் திறந்திருக்கும்.

அனைவரும் வாருங்கள்..! புனிதரின் அருட்கொடைகளை பெற்றுச் செல்லுங்கள்..!