இடம் : சிந்தாமணி, நாங்குநேரி தாலுகா
மாவட்டம் : திருநெல்வேலி
மறைமாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : சாத்தான்குளம்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித ஆரோக்கியநாதர் ஆலயம், நாகல்குளம்
2. திருக்குடும்ப ஆலயம், மூலைக்கரைப்பட்டி
3. புனித ஜெயமாதா ஆலயம், மகிழ்ச்சிபுரம்
4. புனித தோமையார் ஆலயம், சேரகுளம்
5. வேளாங்கண்ணி மாதா ஆலயம், பழனியப்பபுரம்
6. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மறவன்குளம்
7. புனித அந்தோணியார் ஆலயம், கல்லத்தி
பங்குத்தந்தை : அருட்பணி. மெரிஸ் லியோ
குடும்பங்கள் : 175
அன்பியங்கள் : 7
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
தினமும் திருப்பலி : காலை 06:00 மணிக்கு
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை சிறப்பு திருப்பலி தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சப்பரபவனி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஊர் அசனவிருந்து நடைபெறும்.
திருவிழா : ஆகஸ்ட் மாதம் இறுதியில் 10 நாட்கள் (அனைத்து வருடமும் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்)
மண்ணின் இறையழைத்தல்கள்
1. அருள்திரு. அந்தோணிராஜ் (சிம்லா சண்டிகர் மறைமாவட்டம்)
2. அருள்திரு. மரியமிக்கேல், (SFX)
3. அருள்திரு. அருள் தனசீலன் (தூத்துக்குடி மறைமாவட்டம்)
4. அருள்திரு. பெஸ்கி (தூத்துக்குடி மறைமாவட்டம்)
மண்ணின் அருள் சகோதரிகள்
1. அருள்சகோதரி. பவுலின் (St Anne's Luzern)
2. அருள்சகோதரி. விமலி (Congregation of Theresian Carmelites)
3. அருள்சகோதரி. அமல ஜெஸ்லின் (Fransiscan Sisters of Aloysius Gonzaga)
பேருந்து வழித்தடம் :
1. திருநெல்வேலி to மூலைக்கரைப்பட்டி to முனஞ்சிப்பட்டி to சிந்தாமணி
2. நாங்குநேரி to மூலைக்கரைப்பட்டி to முனஞ்சிப்பட்டி to சிந்தாமணி
3. சாத்தான்குளம் to பேய்குளம் to சிந்தாமணி
4. ஶ்ரீவைகுன்டம் to பேய்குளம் to சிந்தாமணி
5. திசையன்விளை to சாத்தான்குளம் to பேய்குளம் to சிந்தாமணி
6. நாசரேத் to பேய்குளம் to சிந்தாமணி.
வரலாறு:
29 ஆம் நூற்றாண்டில் சாத்தான்குளம் பங்கில் இருந்த 53 கிளைப் பங்குகளில் சிந்தாமணியும் ஒன்று.
1914 ஆம் ஆண்டு சோமநாதபேரி தனிப்பங்காக ஆனபோது, சிந்தாமணி அதன் கிளைப் பங்காக ஆனது.
1950 ஆம் ஆண்டு 27 கிளைப்பங்குகளுடன் சிந்தாமணி தனிப் பங்காக உருவானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஞானப்பிரகாசம் அடிகளார் பொறுப்பேற்றார். சிந்தாமணியில் முதல் பள்ளிக்கூடத்தை நிறுவினார்.
அருட்பணி. அந்தோணி பர்னாண்டோ (1952-1953) பணிக்காலத்தில் கிளைப்பங்கான உவக்கிணற்றில் புனித பாத்திமா அன்னை ஆலயத்தைக் கட்டினார்.
அருட்பணி. தனிஸ்லாஸ் (1956-1959) பணிக்காலத்தில் ஆலயத்தை அழகுபடுத்தி, கோபுரங்கள் கட்டி அதில் உரோமையிலிருந்து கொண்டு வந்த ஆலயமணியை நிறுவினார். பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடம் கட்டினார்.
அருட்பணி. லூர்துமணி பணிக்காலத்தில் ஆலயத்திற்கு மின்சார வசதி செய்யப்பட்டது.
அருட்பணி. அம்புரோஸ் அடிகளார் பணிக்காலத்தில் ஆலய தளத்தில் அழகிய கற்கள் பதிக்கப்பட்டது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல ஆசிரியர்களை உருவாக்கினார்.
அருட்பணி. M. பிரகாசம் பணிக்காலத்தில் உணவுக்கு வேலை திட்டம் துவக்கப்பட்டு மக்களின் பசியைப் போக்கினார். சிந்தாமணி -சின்னமூலைக்கரை இடையேயான 5கி.மீ தொலைவிற்கு சாலை அமைத்தார். இன்று இந்த சாலை சாமியார் சாலை என அழைக்கப்படுகிறது. ஊருக்கு வடக்கே 5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, அதில் கிணறு தோண்டப் பட்டது.
அருட்பணி. தேவராஜன் பணிக்காலத்தில் 1978 ஆம் ஆண்டு சிந்தாமணியில் கன்னியர் இல்லம் அமைக்கப்பட்டது. கிளைப்பங்கான கல்லத்தி -யில் புதிய ஆலயம் கட்டப்பட்டது.
அருட்பணி. பங்கிராஸ் ராஜா பணிக்காலத்தில் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிளைப்பங்கான மறவன்குளத்தில் மக்கள் மனமாற்றம் செய்யப்பட்டு, புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் கட்டப்பட்டது. மிகுந்த மாதா பக்தரான இவர் பாடிய வியாகுல பிரசங்கம் அனைத்து ஆலயங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அருட்பணி. தனிஸ்லாஸ பெர்னாண்டோ பணிக்காலத்தில் நடுநிலைப் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெறப்பட்டது.
அருட்பணி. சேகரன் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 16.06.1992 அன்று மேதகு ஆயர் அமலநாதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அருட்பணி. ஜெரால்ட் ரவி பணிக்காலத்தில் நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆலயமானது விரிவாக்கம் செய்யப்பட்டது.
அருட்பணி. எட்வர்ட் பணிக்காலத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. சிந்தாமணியின் கிளைப் பங்காக இருந்த சவேரியார்புரம் தனிப்பங்காக உயர வழிவகுத்தார்.
அருட்பணி. ஜான்சன் பணிக்காலத்தில் ஆலய முன்மண்டபம் கட்டப்பட்டது. கிளைப் பங்கான சேரகுளத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட து. மேலும் கிளைப்பங்கான நாகல்குளம் புனித ஆரோக்கிநாதர் ஆலயம் கட்டப்பட்டது.
அருட்பணி. சலேத் ஜெரால்ட் பணிக்காலத்தில் 2011 ஆம் ஆண்டில் பழைய ஆலயம் அகற்றப்பட்டு, தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டு 2013 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.
சிந்தாமணி ஊரில் உள்ள கெபிகள்:
1. தூய மிக்கேல் அதிதூதர் கெபி
2. புனித அந்தோணியார் கெபி
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பாலர்சபை
2. நற்கருணைவீரர் சபை
3. புனித குழந்தை தெரசா சபை
4. தூய அமலோற்பவ மாதா சபை
5. புனித சவேரியார் இளைஞர் இயக்கம்
6. திருக்குடும்ப சபை
7. பீடப்பூக்கள்
8. பாடகற்குழு
9. புனித சூசையப்பர் சபை
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருள்பணி. ஞானப்பிரகாசம் (1950-1952)
2. அருள்பணி. அந்தோணி பர்னாண்டோ (1952-1953)
3. அருள்பணி. அகஸ்டின் பர்னாண்டோ (1953-1956)
4. அருள்பணி. தனிஸ்லாஸ் பாண்டியன் (1956-1959)
5. அருள்பணி. லூர்துமணி (1959-1961)
6. அருள்பணி. அம்புரோஸ் (1961-1968)
7. அருள்பணி. செங்கோல் S. மணி (1968-1970)
8. அருள்பணி. விளாட்மீர்ராயன் (1970-1972)
9. அருள்பணி. இருதயராஜ் (1972-1974)
10. அருள்பணி. M. G. பிரகாசம் (1974-1977)
11. அருள்பணி. தேவராஜன் (1977-1979)
12. அருள்பணி. ஜெபநாதன் (1979-1982)
13. அருள்பணி. பங்கிராஸ் ராஜா (1982-1984)
14. அருள்பணி. ஸ்தனிஸ்லாஸ் பெர்னாண்டோ (1984-1987)
15. அருள்பணி. சேகரன் (1987-1992)
16. அருள்பணி. ஜெரால்டு ரவி (1992-1995)
17. அருள்பணி. எட்வர்ட் (1995-1999)
18. அருள்பணி. ஜான்சன் (1999-2004)
19. அருள்பணி. சேசு நசரேன் (2004-2005)
20. அருள்பணி. வில்லியம் (2005-2006)
21. அருள்பணி. தாமஸ் (2006-2008)
22. அருள்பணி. ரோனால்ட் (2008-2009)
23. அருள்திரு. சலேட் ஜெரால்ட் (2009-2014)
24. அருள்பணி. குழந்தை ராஜன் (2014-2019)
25. அருள்பணி. அற்புத சேவியர் (2019-2021)
26. அருள்பணி. மெரிஸ் லியோ (2021 முதல்..)
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அற்புத சேவியர் (2020 ஆம் ஆண்டு)