912 புனித அந்தோனியார் ஆலயம், கல்வெட்டான்குழி

    

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: கல்வெட்டான்குழி, பாளையங்கோட்டை

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: பங்குதளம்

பங்குதந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ்

குடும்பங்கள்: 135

அன்பியங்கள்: 6 

திருவழிபாட்டு நேரங்கள்: 

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி, காலை 09:00 மணி

செவ்வாய் மாலை 06:30 மணி நவநாள், திருப்பலி, நற்கருணை ஆராதனை

வெள்ளி திருப்பலி மாலை 06:30 மணி

திருவிழா: ஜூன் மாதம் 01-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை.

மண்ணின் இறையழைத்தல்:

அருள்பணி.‌ மாசிலாமணி, சே.ச

வழித்தடம்: பாளையங்கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/xorGA1

வரலாறு:

மேதகு S. இருதயராஜ் ஆண்டகையவர்கள் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயராகவும், அருள்தந்தை மரிய மிக்கேல் அவர்கள் புனித சவேரியார் பேராலயப் பங்குத்தந்தையாகவும், இறை பணியாற்றிய காலத்தில் அன்பர் திரு. G. கஸ்பார்ராஜா அவர்களின் தனிப்பட்ட முயற்சியில், 13.10.1981 அன்று புனித அந்தோனியாருக்கு ஒரு ஓலைக்குடிசை கோவில் பாளையங்கோட்டை இரயில்வே பீடர் ரோடு கல்வெட்டான்குழி பகுதியில் எழுப்பப்பட்டது.

பேரருள்தந்தை M.S. சலேத் அவர்கள் பேராலயப் பங்கு குருவாக பணியாற்றிய போது, பெருமழையில் சேதமடைந்த குடிசைக் கோவில், திரு. கஸ்பார் ராஜா அவர்களின் சொந்த முயற்சியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை பொருத்தி புதுப்பிக்கப்பட்டு, பேரருள்தந்தை நவமணி அடிகளாரால் 18.06.1989 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

அருள்தந்தை S. ஜோக்கிம் அவர்கள் பேராலயப் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது, மறைந்த திரு. கஸ்பார் ராஜாவின் மனைவி திருமதி. கலைச்செல்வி கோவிலையும், சுற்றியிருந்த இடம் 7.80 சென்ட் இடத்தையும் (T.S. No. 1709/7B) 26.02.1991 அன்று மறைமாவட்டத்திற்குப் பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.

09.04.1991 அன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்கிழமை மாலையிலும் நவநாள் மற்றும் திருப்பலி நடைபெறத் தொடங்கியது.

பேராலய பங்குத்தந்தையான அருள்தந்தை ஜேம்ஸ் நிக்கோலாஸ் அவர்கள் காலத்தில், மறைமாவட்டப் பொருளாளர் அருள்தந்தை. J. யூஜின் டேவிட் ஆலயத்திற்குப் பின்புறம் இருந்த 9 சென்ட் நிலத்தை (T.S. No. 1709/1B) 06.02.1997 ல் வாங்கினார்.

பேராலயப் பங்கிலிருந்து மகாராஜநகர் 01.06.1998 அன்று தனிப்பங்காக அமைக்கப்பட்டு, கல்வெட்டான்குழி அதன் கிளைப் பங்கானது. மகாராஜநகரின் முதல் பங்குக் குருவான பேரருள்தந்தை. M. சூசை மரியான் அவர்கள், கல்வெட்டான்குழி ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலையும் திருப்பலி நடைபெற ஏற்பாடு செய்தார்.

அருள்தந்தை. V.K.S. அருள்ராஜ் அவர்கள் மகாராஜநகர் பங்குத்தந்தையாக பணியாற்றியபோது தற்போதைய ஆலயத்திற்கான அடித்தளம் 19.02.2006ல் இடப்பட்டது.

மகாராஜநகர் பங்குக்குரு பேரருள்தந்தை S. அந்தோணிசாமி அவர்களின் பணிக்காலத்தில், பேராலயப் பங்குத்தந்தையும் மறைவட்ட அதிபருமான அருள்தந்தை அந்தோனி A. குரூஸ் அவர்களால் 01.06.2008 அன்று புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

மகாராஜநகர் பங்குத்தந்தையாக அருள்தந்தை A. ஜெயபாலன் அவர்கள் பணியாற்றியபோது, 01.06.2011 அன்று ஆலயத்தின் உள் கூரை அமைக்கப்பட்டது. அன்பியங்கள் வலுவூட்டப்பெற்று பரிசுத்த வாரத்தின் அனைத்து முக்கிய நாட்களிலும் திருப்பலியும் வழிபாடுகளும் துவக்கி வைக்கப்பட்டன.

மகாராஜநகர் பங்குதந்தை

அருள்தந்தை R. பாக்கியசெல்வன்

அவர்கள் பணிக்காலத்தில், 05.05.2016 அன்று தேர்வு நிலைப்பங்காக அறிவிக்கப்பட்ட கல்வெட்டான்குழி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு, மறைமாவட்ட செயலக முதல்வர் அருட்தந்தை அந்தோனி A. குரூஸ் அவர்கள் பங்குப் பொறுப்பாளராக 12.06.2016 அன்று பணியேற்றார்.

பங்குத்தந்தையின் இல்லம் கட்டுவதற்காக ஆலயத்தின் கீழ்புறம் 1.88 சென்ட் இடம் 23.02.2017 ல் வாங்கப்பட்டது.

மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்தந்தை T. சேவியர் டெரன்ஸ் அவர்களால் 23.04.2017 அன்று பங்குத்தந்தையின் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பெற்றது.

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு A. ஜூடு பால்ராஜ் அவர்களால் கல்வெட்டான்குழி புனித அந்தோனியார் ஆலயம் 01.06.2017 அன்று மறைமாவட்டத்தின் 54-வது புதிய பங்காக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அருள்தந்தை. அந்தோனி A குரூஸ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

பங்குத்தந்தை இல்லம் கட்டி முடிக்கப்பட்டு

அருட்பணி. மை. பா. சேசுராஜ் பணிக்காலத்தில் 2022 ஜூன் மாதம் திருவிழாவின் போது அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

திருக்குடும்ப சபை சகோதரிகள் இப்பங்கில் பணிபுரிந்து வருகின்றனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. இளையோர் இயக்கம்

3. அன்னை தெரசா பெண்கள் இயக்கம்

4. மறைக்கல்வி மன்றம்

5. பங்குப் பேரவை

6. பீடப் பணியாளர்கள்

7. பாடகற்குழு 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. அந்தோனி A.‌ குரூஸ் (2017-2020)

2. அருட்பணி. அந்தோணி ராஜ் (2020-2022)

3. அருட்பணி. மை.பா. சேசுராஜ் (2022 முதல்...)

பாளையங்கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகே கல்வெட்டான்குழியில் அமைந்துள்ள, கோடி அற்புதராம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வாருங்கள்... அற்புதங்களையும் அதிசயங்களையும் காண்பீர்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ் அவர்கள்.