572 கிறிஸ்து அரசர் ஆலயம், சாய்க்கோடு


கிறிஸ்து அரசர் ஆலயம் 

இடம் : சாய்க்கோடு (நல்லவிளை), காட்டாத்துறை (PO) 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம் : முளகுமூடு

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித யூதா ததேயு ஆலயம், குட்டைகாடு 

பங்குத்தந்தை : அருள்பணி. G. கிறிஸ்து ராஜ் 

குடும்பங்கள் : 106

அன்பியங்கள் : 4

வழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு திருப்பலி காலை 06.45 மணிக்கு. 

வெள்ளி மாலை 06.30 மணிக்கு திருஇருதய நவநாள், திருப்பலி.

திருவிழா : நவம்பர் மாதத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழாவை மையமாகக் கொண்டு ஐந்து நாட்கள். 

வழித்தடம் : நாகர்கோவில் -திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், சுவாமியார்மடம் ஊரிலிருந்து, வேர்க்கிளம்பி செல்லும் சாலையில் சென்று அங்கிருந்து இடதுபுறம் சென்றால் இவ்வாலயத்தை அடையலாம். 

வரலாறு :

குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த சாய்க்கோடு பகுதியில் கிறிஸ்து அரசர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயயத்தின் வடக்கே வீயன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளி, கிழக்கே இலஞ்சாக்கோட்டு விளை, தெற்கே குன்னன்விளை, மேற்கே கோணம் ஆகியன எல்லைகளாக விளங்குகின்றன. 

அருள்பணி. அம்புரோஸ் அவர்கள் புத்தன்கடை பங்குத்தந்தையாக இருந்த போது, 1947 ஆம் ஆண்டு 26 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. பின்னர் மீண்டும் 12 சென்ட் நிலம் தற்போதைய ஆலயத்தின் முன்புறம் வாங்கப் பட்டது. 

1947 ஆம் ஆண்டு அருள்பணி. அம்புரோஸ் அவர்களின் முயற்சியால் ஓலைக்கூரை ஆலயம் கட்டப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்களாக ஒருசில குடும்பங்களே இருந்தன. 

1977 ஆம் ஆண்டு சாய்க்கோடு, பள்ளியாடி பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. பள்ளியாடி பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. பெல்லார்மின் அவர்களின் முயற்சியால் ஓலைக்கூரை ஆலயம் அமைந்த இடத்தில், சிறு ஓட்டுக்கூரை ஆலயம் கட்டப்பட்டது. 

1984 ஆம் ஆண்டு குட்டைக்காடு தனிப்பங்கான போது, சாய்க்கோடு அதன் கிளைப் பங்காக ஆனது. இந்த காலகட்டத்தில் பிறசமயத்தை சேர்ந்த பலர் கிறிஸ்தவம் தழுவி, தலத்திருச்சபையில் உறுப்பினர்கள் ஆயினர். ஞாயிறு தோறும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே மீண்டும் பழைய ஆலயம் மாற்றப்பட்டு, அருள்பணி. ஜான் அமலநாதன் அவர்களின் முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு 19.11.2000 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

2003 ஆம் ஆண்டு ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டது. 19.11.2003 அன்று புதிய கலையரங்கம் கட்டப்பட்டு, அருள்பணி. ஜான் அமலநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது சாய்க்கோடு இறைசமூகம். 

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. G. கிறிஸ்து ராஜ்