473 புனித தோமையார் ஆலயம், வீரபாண்டியன்பட்டணம்


புனித தோமையார் ஆலயம்

இடம் : வீரபாண்டியன்பட்டணம்

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : மணப்பாடு

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. A. S. கிருபாகரன்

இணைப் பங்குத்தந்தை : அருட்பணி. வளன் அரசு

குடும்பங்கள் : 946
அன்பியங்கள் : 36 (9 மண்டலங்கள்)

திருவழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு அதிகாலை 05.15 மணி
காலை 07.00 மணி மற்றும் மாலை 05.00 மணிக்கும் திருப்பலி.

வாரநாட்களில் அதிகாலை 05.15 மணி மற்றும் காலை 06.30 மணிக்கும் திருப்பலி.

முதல் செவ்வாய் புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் மாலை 05.00 மணிக்கு திருப்பலி.

முதல் சனி லூர்து அன்னை கெபியில் மாலை 05.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

முதல் வெள்ளி புனித இராயப்பர் சின்னப்பர் சிற்றாலயத்தில் காலை 06.30 மணிக்கு திருப்பலி.

மாதத்தின் இறுதி சனி புனித வேளாங்கண்ணி மாதா சிற்றாலயத்தில் மாலை 05.30 மணிக்கு திருப்பலி.

மாதந்தோறும் 13 ஆம் நாள் புனித பாத்திமா அன்னை சிற்றாலயத்தில் மாலை 05.30 மணிக்கு திருப்பலி.

புனித சவேரியார் சிற்றாலயத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளி மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

கிறிஸ்து அரசர் சிற்றாலயத்தில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வெள்ளி மாலை 05.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

வழித்தடம் : திருச்செந்தூரிலிருந்து, தூத்துக்குடி செல்லும் சாலையில், திருச்செந்தூரிலிருந்து 2கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map : https://maps.app.goo.gl/BACnRVCXMEBAbo7VA

திருவிழாக்கள் :

பக்தசபை திருவிழாக்கள் :
1. திருஇருதய சபை திருவிழா
2. பரிசுத்த கார்மேல் மாதா சபை திருவிழா
3. திருக்குடும்ப சபை திருவிழா
4. புனித ஞானப்பிரகாசியார் சபை திருவிழா
5. புனித அமலோற்பவ மாதா சபை திருவிழா
6. நற்கருணை வீரர் சபை திருவிழா
7. புனித தொன்போஸ்கோ சபை திருவிழா
8. பாலர்சபை திருவிழா.

சிற்றாலயங்களில் திருவிழாக்கள் :
1. கிறிஸ்து அரசர் திருவிழா
2. புனித பாத்திமா அன்னை திருவிழா
3. புனித லூர்தன்னை கெபி திருவிழா
4. புனித இராயப்பர் சின்னப்பர் திருவிழா
5. புனித வேளாங்கண்ணி மாதா திருவிழா
6. புனித சவேரியார் திருவிழா
7. புனித ஜார்ஜியார் திருவிழா
8. புனித அந்தோனியார் திருவிழா.

ஊர்த் திருவிழா:
டிசம்பர் 21 ஆம் தேதி புனித தோமையார் திருவிழா.

பரலோக அன்னையின் திருவிழா ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி. ஆலயம் அர்ச்சிக்கப் பட்ட நாள். அன்னையின் விண்ணேற்புப் திருவிழா பரிசுத்த கார்மேல் மாதா சபையினரால் கொண்டாடப் படுகிறது.

மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணியாளர்கள்:
1. அருட்பணி. அல்போன்ஸ் மரிய காகு late
2. அருட்பணி. லாம்பர்ட் மிராண்டா (late)
3. அருட்பணி. விலாட்மீர் ராயன் (late)
4. அருட்பணி. ஆஸ்வால்ட் வி. ராயன் (late)
5. அருட்பணி. ஜெர்மானுஸ் பி. ராயன் (late)
6. அருட்பணி. ரூஸ்வால்ட் பர்னாந்து
7. அருட்பணி. ஜெரோசின் அ. காற்றார்
8. அருட்பணி. எட்வின் காகு
9. அருட்பணி. சுரேஷ் காகு
10. அருட்பணி. ப்ரொமில்டன் லோபோ
11. அருட்பணி. ஃபெரிங்டன் ராயன்
12. அருட்பணி. ஜெரால்டு மிராண்டா
13. அருட்பணி. கார்மேல் வி. ராயன்
14. அருட்பணி. பிரதிஸ் அ. காற்றார்
15. அருட்பணி. ஜெயந்த் ராயன்
16. அருட்பணி. ரெம்பர்ட் பர்னாந்து
17. அருட்பணி. ஜஸ்டின் பிரபு
18. அருட்பணி. கார்லோ வி. ராயன்.

திருத்தொண்டர்கள் & அருட்சகோதரர்கள்:
1. திருத்தொண்டர். இதயன்
2. அருட்சகோதரர். ஜாய்சன்
3. அருட்சகோதரர். ஜெரால்டு

அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. அசன்சியா மேரி
2. அருட்சகோதரி. அனன்சியா ரொட்ரீகோ
3. அருட்சகோதரி. ஆக்னஸ் ஜூலி
4. அருட்சகோதரி. பெனில்டா மேரி
5. அருட்சகோதரி. பெர்னட்டா பி. ராயி
6. அருட்சகோதரி. சார்லஸ் பொரோமியோ மேரி
7. அருட்சகோதரி. கொலேற்றா மேரி
8. அருட்சகோதரி. கேத்லின் பர்னாந்து
9. அருட்சகோதரி. டூல்சியா FMM
10. அருட்சகோதரி. எல்ஜியூஸ் மேரி
11. அருட்சகோதரி. எஸ்கலின்
12. அருட்சகோதரி. இவான்சலின் மேரி late
13. அருட்சகோதரி. எட்வர்ட் கிரகோரி மேரி late
14. அருட்சகோதரி. எலிசபெத் மேரி late
15. அருட்சகோதரி. பாத்திமா ரொட்ரீகோ
16. அருட்சகோதரி. பாத்திமா அ. காற்றார்
17. அருட்சகோதரி. ஜில்டாஸ் மேரி
18. அருட்சகோதரி. ஜெனேசியூஸ் மேரி late
19. அருட்சகோதரி. ஜெம்மா மேரி late
20. அருட்சகோதரி. ஜெர்மான்ஸ் மேரி late
21. அருட்சகோதரி. கில்பர்ட் மேரி late
22. அருட்சகோதரி. ஹில்டா பி. ராயி
23. அருட்சகோதரி. இக்னேசியூஸ் மேரி late
24. அருட்சகோதரி. ஐவன் மேரி வாஸ்
25. அருட்சகோதரி. ஜோதி
26. அருட்சகோதரி. ஜாண் கிரசன்டிஸ் மேரி
27. அருட்சகோதரி. ஜாண் யூட்ஸ் மேரி
28. அருட்சகோதரி. ஜூலியன் எய்மர்ட் மேரி
29. அருட்சகோதரி. ஜோவித்தா மேரி
30. அருட்சகோதரி. லூசியஸ் மேரி
31. அருட்சகோதரி. லிசிக் தெரசா மேரி
32. அருட்சகோதரி. லைடா மேரி
33. அருட்சகோதரி. மௌரா லோபோ
34. அருட்சகோதரி. மேரி ஆன்
35. அருட்சகோதரி. மேரி மெலானி
36. அருட்சகோதரி. மெல்கியோர் மேரி
37. அருட்சகோதரி. மெலிண்டா மேரி
38. அருட்தாயார். கேப்ரினி
39. அருட்சகோதரி. மெடோனா மேரி
40. அருட்சகோதரி. மேரி ப்ரூடன்சியா
41. அருட்சகோதரி. ஓரன்சியா மேரி
42. அருட்சகோதரி. பாத்திமா கலா காகு
43. அருட்சகோதரி. பவுலா லோபோ
44. அருட்சகோதரி. பெரிக்ரின் லாசியூஸ் மேரி
45. அருட்சகோதரி. பீற்றர் கேனிசியூஸ்
46. அருட்சகோதரி. ரெமோனா மேரி late
47. அருட்சகோதரி. ரொசாரியோ FMM
48. அருட்சகோதரி. செப்ரின் மேரி late
49. அருட்தாயார். சரணிற்றா ராயி
50. அருட்சகோதரி. தியோடரிற்றா மேரி late
51. அருட்சகோதரி. தியோடரிற்றா மேரி
52. அருட்சகோதரி. தியோடர் மேரி
53. அருட்சகோதரி. வின்சென்சியா மேரி
54. அருட்சகோதரி. சேவியர் பெர்பெத்துவா LSP
55. அருட்சகோதரி. ஸ்ரீமா
56. அருட்சகோதரி. டொமிட்டிலா (பொனிற்றா) SSAM
57. அருட்சகோதரி. ரொலிமா
58. அருட்சகோதரி. கரோலின் விக்டோரியா
59. அருட்சகோதரி. எமிலா பர்னாந்து
60. அருட்சகோதரி. கிரேஸி மென்னேசா
61. அருட்சகோதரி. வினோதா பீரிஸ்
62. அருட்சகோதரி. ஷர்மிளா மென்னேசா
63. அருட்சகோதரி. பிரைட்டா
64. அருட்சகோதரி. கனிஸ்டா
65. அருட்சகோதரி. நித்தியா.

ஆலய வரலாறு :

இந்தியாவின் திருத்தூதரான புனித தோமையாரின் பெயரைத் தாங்கியுள்ள ஆலயமானது, கடந்த 134 ஆண்டுகளாக வீரபாண்டியன்பட்டணம் மக்களுக்கு விசுவாசத்தின் அரணாகவும், அன்பின் இருப்பிடமாகவும் அமைந்திருக்கிறது.

வீரபாண்டியன்பட்டணம் தூத்துக்குடி மறை மாவட்டத்திலே பழம்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பங்காகும். கி.பி 1542 லிருந்து 10 ஆண்டுகள் முத்துக்குளித்துறையிலே பணிபுரிந்த புனித சவேரியார், பலமுறை இந்த ஊருக்கு வருகை புரிந்ததாக வரலாற்று நூல்கள் வழியாக அறியப்படுகிறது.

வீரபாண்டியன்பட்டணம் மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தின் காரணமாக டச்சுக்காரர்களால் 1649 முதல் 1656 வரை இரு முறை துன்புறுத்தப் பட்டனர். ஆலயமும் வீடுகளும் சூறையாடப் பட்டன. இருப்பினும் தாங்கள் பெற்ற விசுவாசத்தை இம் மக்கள் வீரத்தோடு காப்பாற்றி வந்தனர்.

1713 ஆம் ஆண்டு வீரபாண்டியன்பட்டணம் தனிப்பங்காக உருப்பெற்றது.

புனித தோமையார் பெயரில் தற்போதுள்ள ஆலயம் 1882 ஆம் ஆண்டில் அடித்தளமிடப்பட்டு, 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அர்ச்சிக்கப் பட்டது.

அழகிய கோத்திக் கலை அம்சங்களுடன் கூடிய உயர்ந்த கோபுரங்களையும், மரசிற்பக்கலை அம்சங்களுடன் கூடிய சலவைக்கல் பீடங்களையும் கொண்ட இவ்வாலயம் 135 அடி உயரம் கொண்ட இரு கோபுரங்களை கொண்டது. ஆலயத்தின் நீளம் 180 அடி, அகலம் 55 அடி என்பது குறிப்பிடத் தக்கது.

வீரபாண்டியன்பட்டணம் ஆலயமானது 100, 125 வது ஆண்டுகள் நிறைவு விழாவைக் கொண்டாடி பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்று பொலிவுடன் திகழ்கிறது. பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் இவ்வாலயத்தின் அழகையும், இறை மக்களின் ஆன்மீகத்தையும் பேணி வளர்த்தனர். கிறிஸ்தவ விசுவாச வாழ்விலே இம் மக்களை கட்டியெழுப்பும் ஆலயமாகவும், இவர்களின் அன்றாட வாழ்க்கையின் மையமாகவும், முக்கியமான அங்கமாகவும் திகழும் இவ்வாலயமானது பலநூறு ஆண்டுகளைக் கண்டு இறைவனை மகிமைப்படுத்த ஆசிக்கின்றனர்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. அந்தோணி டி. சூசா (1713-1775)
2. அருட்பணி. லூயிஸ் பாஸ்கா. ஓ. (1775-1776)
3. அருட்பணி. டொமிங்கோ டி. குரூஸ் (1776-1777)
4. அருட்பணி. பவுலோ பெட்ரோ டயஸ் (1777)
5. அருட்பணி. பெரோ மெண்டஸ் (1803-1804)
6. அருட்பணி. இக்னேசியஸ் எஸ்டிபான் கோமஸ் (1804-1806)
7. அருட்பணி. ஜோண் லூயிஸ் கண்டஜ் (1806-1810)
8. அருட்பணி. கெமில்லோ பிரான்சிஸ்கோ மிராண்டா (1810-1811)
9. அருட்பணி. விக்டோரினோ குயிண்டோ (1811-1812)
10. அருட்பணி. அன்டோனியா ஜான்டிலோபஸ் (1812-1813)
11. அருட்பணி. பெரிபெரோ சேவியர் டி. அன்னா (1813-1818)
12. அருட்பணி. பிரான்சிஸ்கோ டி. மிராண்டா (1818)
13. அருட்பணி. பவுலோ பாஸ்டர் பீரிஸ் (1818)
14. அருட்பணி. தோமே அண்டோனியோ டி. ஆக்ஸோ (1818-1823)
15. அருட்பணி. ஜாண் பாய்டிஸ்ட் லுட்நோஸ் (1823-1826)
16. அருட்பணி. ஜியார்ஜிஸ் குருஸ் மோத்தா (1826-1830)
17. அருட்பணி. பிரான்சிஸ்கோ மிக்கேல் பெராஸ் (1830-1836)
18. அருட்பணி. மெகெய் (1836-1838)
19. அருட்பணி. பெர்த்ராண்ட் (1838)
20. அருட்பணி. அல்மார்டின் (1838)
21. அருட்பணி. அந்தோனி சலேஸ் (1839)
22. அருட்பணி. லூயிஸ் டி. ராங்குயிட் (1839)
23. அருட்பணி. கஸ்தானியர் (1845-1847)
24. அருட்பணி. தாமஸ் கைஜ் (1847)
25. அருட்பணி. புச்சிநெல்லி (1847)
26. அருட்பணி. சார்லஸ் டிராங்குயட் (1851-1853)
27. அருட்பணி. வேவ்ரெக்ஸ் (1853-1854)
28. அருட்பணி. வெர்டியர் (1854)
29. அருட்பணி. சார்லஸ் ரொட்ரீகஸ் (1854)
30. அருட்பணி. கெஜட்டான் ரொட்ரீகஸ் (1858-1859)
31. சார்லஸ் ரொட்ரீகஸ் (1859-1860)
32. அருட்பணி. ராயப்பர் (1860-1865)
33. அருட்பணி. பாட்டுட் அந்தோனி (1865-1866)
34. அருட்பணி. ஹென்றி டி. செரே (1866-1867)
35. அருட்பணி. ராயப்பர் (1867)
36. அருட்பணி. சார்லஸ் ரொட்ரீகஸ் (1867)
37. அருட்பணி. ஹென்றி டி. செரே (1867-1868)
38. அருட்பணி. கெஜட்டான் ரொட்ரீகஸ் (1868-1877)
39. அருட்பணி. ஹிப்போலிட் ஜோசப் ப்ளான்ங்க் (1877)
40. அருட்பணி. பெச்சலார்டு (1877)
41. அருட்பணி. ராயப்பர் (1879)
42. அருட்பணி. மிக்கேல் (1879)
43. அருட்பணி. மாகெட் (1880)
44. அருட்பணி. ராயப்பர் (1880)
45. அருட்பணி. இம்மானுவேல் பெய்ரெட் (1882-1892)
46. அருட்பணி. சிலுவைநாதர் சே. ச (1892-1899)
47. அருட்பணி. கபிரியேல் பெர்த்தியு சே. ச (1899-1910)
48. அருட்பணி. பவுல் டெக்கோலி சே. ச (1910-1919)
49. அருட்பணி. ஜோசப் பொஸ்க் சே. ச (1919)
50. அருட்பணி. இம்மானுவேல் திதோசா சே. ச (1919-1921)
51. அருட்பணி. ஜெகநாதர் (1921-1923)
52. அருட்பணி. J. பெரியநாயகம் (1923-1928)
53. அருட்பணி. கஸ்பார் ரோச் (1928-1934)
54. அருட்பணி. ரெமிஜியூஸ் மிசியர் (1934-1946)
55. அருட்பணி. J சிங்காராயர் லோபோ (1946-1954)
56. அருட்பணி. ஜோசப் (1954-1957)
57. அருட்பணி. கபிரியேல் டிவோட்டா (1957-1960)
58. அருட்பணி. இம்மானுவேல் டயஸ் (1960-1962)
59. அருட்பணி. ரொசாரியோ பர்னாந்து (1962-1965)
60. அருட்பணி. S. கபிரியேல் (1965-1967)
61. அருட்பணி. S ஜோப்டிரோஸ் (1967-1972)
62. அருட்பணி. சார்லஸ் பர்னாந்து (1972-1978)
63. அருட்பணி. ஜோசப் இரத்தினராஜ் (1978-1982)
64. அருட்பணி. ரொசாரியோ பர்னாந்து (1982-1984)
65. அருட்பணி. D. J. C. அமிர்தம் (1984-1988)
66. அருட்பணி. G. ஆஸ்வால்ட் பர்னாந்து (1988-1991)
67. அருட்பணி. C. சேவியர் (1991-1996)
68. அருட்பணி. சகாய ஜோசப் (1996-1999)
69. அருட்பணி. சேவியர் ஜார்ஜ் (1999-2003)
70. அருட்பணி. ஸ்டீபன் கோமஸ் (2004)
71. அருட்பணி. T. M. ஜாண் பென்சன் (2004-2007)
72. அருட்பணி. S. M. சகாயம் (2007-2009)
73. அருட்பணி. செட்ரிக் பீரிஸ் (2009-2010)
74. அருட்பணி. G. ஜோசப் (2010-2014)
75. அருட்பணி. A. ஆன்ட்ரூ டிரோஸ் (2014-2019)
76. அருட்பணி. A. S. கிருபாகரன் (2019 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. அருட்பணி. A. S. கிருபாகரன் அவர்களின் வழிகாட்டுதலுடன், இணைப் பங்குத்தந்தை அருட்பணி. வளன் அரசு.