127 அதிசய மின்னல் மாதா திருத்தலம், தன்னூத்து


அதிசய மின்னல் மாதா திருத்தலம்

இடம் : தன்னூத்து

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை.

பேராயர் : அந்தோணி பாப்புசாமி (மதுரை உயர் மறை மாவட்டம்)
பங்குத்தந்தை : அருட்பணி S. A அந்தோணிசாமி.

நிலை : திருத்தலம்
பங்குதளம் : தூய இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சேர்ந்தமரம்.

குடும்பங்கள் : 50
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : மதியம் 12.00 மணிக்கு.

திருவிழா :
ஜனவரி மாதம் 26 ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 04 ம் தேதி வரையிலான புனித அருளானந்தர் திருவிழா மற்றும் தேர்பவனி.

ஆகஸ்ட் மாதம் 23 ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 01 ம் தேதி வரையிலான மின்னல் மாதா காட்சி கொடுத்த விழாவை கொண்டாடும் திருவிழா மற்றும் தேர்பவனி.

தன்னூத்து மின்னல் மாதா திருத்தல வரலாறு :

தெனதமிழகத்தின் வீரத்தின் விளைநிலமாக விளங்கும் திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் இருந்து 10 கீ.மீதொலைவில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தன்னூத்து என்னும் சிரிய கிராமம் 15-கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களை கொண்டு 1971- ஆண்டு, திரு. N, பிரகஸ்பதி, அவர்களும், திரு. N, திருமலைச்சாமி அவர்களும் நிலம் அன்பளிப்பாக கொடுத்ததைவைத்தும் சேர்ந்தமரம் நிலகிழார் ( லேட் ) C அகஸ்டின் அவர்களின் பெருமுயற்சியாலும் ஊர்பொதுமக்களின் துனையோடும் அப்போதைய பங்குதந்தை SL. அருளப்பன் அவர்களின் அயராத உழைப்பினாலும் - 1974-ம் ஆண்டு மதுரை பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் ஆண்டகையால் சிரிய வடிவில் புனித அருளானந்தர் ஆலயம் அர்ச்சிக்கபட்பது.

செம்மண் புனிதராம் அருளானந்தர் விசுவாசத்தில் எழச்சியோடு வளர்ந்த கத்தோலிக்க குடும்பங்கள் அதிகரித்ததால், 2006-ம் ஆண்டு மண்ணின் மைந்தர் அருட்தந்தை J மைக்கேல்ராஜ் பாண்டியன் CMF அவர்களது பெருமுயற்சியால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு - 2012ம் ஆண்டு அப்போதைய பங்குதந்தை அருட்தந்தை அந்தோணி வியாகப்பன் அவர்களின் முன்னிலையில் பாளை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜூடுபால்ராஜ் ஆண்டகை அவர்களால் 7 3 - அடி கோபுரத்துடன்கூடிய அழகிய பெரிய அருளானந்தர் ஆலயம் அர்ச்சிக்கபட்பது மூன்று அடுக்கு கொண்ட கோபுரத்தில் 43 அடிஉயரம் கொண்ட மேல் தளத்தில் திரு இருதய ஆண்டவர் சுரூபமும் 33 அடி உயரம் கொண்ட நடு தளத்தில் அன்னை மரியாள் சுரூபமும் 23 அடி உயரம் கொண்ட கீழ்தளத்தில் மிக்கேல் அதிதூதர் சுரூபமும் மிக உறுதியான சிமெண்ட் கான்கிரீட் தளத்தில் பொருத்தப்பட்டிருந்தன

ஆலய வழிபாட்டிற்கு முன்னும் பின்னும் தூரத்திலிருந்தே கோபுர தரிசனம் பெற்று வந்த தன்னூத்து கிராம மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த நன்னாள், 01-09-2013. ஞாயிற்றுக்கிழமை மாலை 6-30 மணி முதல் 7 மணிக்குள் இடி, மின்னல், மழை, சூராவளிகாற்று போன்ற இயற்கை சீற்றத்துடன் மின்சார தடையும் இனைந்து கிராமத்தையே இருள் சூழ்ந்து மக்களை பேரச்சம் ஆட்கொண்டவேளையில் இடி, மின்னல் வெளிச்சத்தில், வெள்ளை நிறத்தில் அதே நேரத்தில் ஒளிரும் தீப்பிழம்பாக காட்சியளித்த அன்னையின் திருஉருவம் சிரித்த முகத்துடன் கோபுரத்தின் மேலிருந்து கீழே இறங்கிவந்த அதிசயம் நடைபெற்றது

அன்னை மரியாவின் இந்த அற்புத அதிசய வியத்தகு காட்சியை தன்னூத்து கிராமத்தை சேர்ந்த 1 . திருமதி. ந. மலர்கொடி வ / 43 . க / பெ. திரு பி. நவமணியரசு. 2 - திரு. பி.நவமணியரசு வ / 50 த / பெ N. பிரகஸ்பதி 3 - திரு. J. ராம்கபிலன். த / பெ R. ஜெகதிசன் 4 - திருமதி மரியசெல்வம் வ / 65 க / பெ அந்தோணி சாமி 5-திரு மி. லாரன்ஸ். த / பெ மிக்கேல் ராயப்பன். 6 - திருமதி பவளகொடி வ / 70 க / பெ . திரு மயில்வேல். 7 தெற்கு பரங்குன்றாபுரத்தை சார்ந்த தேவதாஸ், ( எ ) ஆறுமுகச்சாமி. த / பெ தேவஅற்புதம், ஆகிய ஏழு நபர்கள் வெவ்வேறு வகையில் இக்காட்சியை கண்டு சான்று பகிர்ந்துள்ளனர், உடனடியாக அரசு அதிகாரியான தலையாரி. VAO, வருவாய் ஆய்வாளர் பார்வையிட்டு ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தது அனைத்து பகுதிகளுக்கும் அன்னை மரியாவின் அதிசயம் பரவ தொடங்கியது

கோபுரத்தின் தடுப்புகிராதிகள், ஆலயத்தின் பக்கவாட்டிலூள்ள சிலாப்புகள் தரையில் கிடந்த கற்குவியல்கள் எதன்மீதும் மோதாமல். 33 - அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் திரு உருவம் எவ்வித கீறலும், சிராய்ப்பும், உடைசலும் எற்படாமல் பத்திரமாக இருப்பது மிகப் பெரும் ஆச்சரியம் முன்பு கோபுரத்தில் இருந்த அதே திசை நோக்கியே மாதா சுரூபம் தரையிறங்கி நிற்பதும் மாபெரும் அதிசயம். 73. அடி உயரத்திலிருந்த, சிலுவையில் பொருத்தபட்டிருந்த மின் விளக்கின் கண்ணாடி கீழே விழுந்தும் நொருங்கிவிடாமல் பாதுகாப்பாக அன்னையின் சுரூபத்திற்கு அருகில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தாவீது அரசர் பிறந்த பெத்லகேம் என்னும் சிற்றூர் இயேசுவின் பிறப்பால் சமாதானம் அருளும் ஒளியின் நகராக திகழ்வது போல் மின்னல் மாதா நிகழ்த்திய அற்புத கட்சியால் தன்னூத்து என்னும் சிரிய கிராமம் கத்தோலிக்க விசுவாச ஒளியின் சாட்சியாக மாறியுள்ளது கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த அதிசயத்தினால், இப்பகுதி அன்னையின் பக்தர்கள் கூடிவரும் புண்ணிய ஸ்தலமாக மாறியுள்ளது. இயற்கை சீற்றம், நோய்நொடிகள், கவலை, கண்ணீர் துன்ப, துயரங்கள், பாவ தீய சக்திகளின் பிடியிலிருந்தும் தன் அன்பு பிள்ளைகளை அன்னை மரியாள் பாதுகாத்து ஆசிர்வதிப்பதால் இவ்விடம் மகிமையும், புனித நிலையும் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது மாதத்திற்கு ஒரு திருப்பலி யே,நடைபெற்று வந்த தன்னூத்து புனித அருளானந்தர் ஆலயத்தில், அன்னையின் காட்சிக்கு பின் மின்னல் மாதா திருத்தலமாக உருவெடுத்து சாதி மத இனம் கடந்து அனைத்து தர மக்களின் குறைதீர்க்கும் புனித தலமாக உயர்ந்துள்ளது

பக்தர்களின் திரளான வருகையும், சாட்சியபகிர்வும் பக்திமிகு ஜெபமும் மின்னல் மாதாவின் புகழை பாரெங்கும் பரைசாற்றி பெருமைப்படுத்துகின்றன தன்னூத்து மின்னல் அன்னையின் அற்புதங்களையும் அதிசயங்களையும் நீங்களும் பெற்றிட அன்புடன் அழைகின்றோம்.

திருத்தல வழிபாட்டு நிகழ்வுகள்.

* புதன் கிழமை மாலை 07-30 மணிக்கு புனித அருளானந்தர் நவநாள் திருப்பலி.

* சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு ஜெபமாலையும்,11.30 நவநாள் ஜெபமும் ,திருப்பலியும் தொடர்ந்து நற்க்கருணை ஆராதனை ஆசீரும் நடைபெறும்.

* ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு ஜெபமாலை. 11.30 க்கு நவநாள் ஜெபம், 12.00 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும், தொடர்ந்து அசன உணவு பகிர்வும் நடைபெறும்.

*மாதத்தின் முதல் சனிக்கிழமை 10.00 மணி முதல் திருவிழிப்பு ஜெபம், அதிகாலை 02 .00 மணிக்கு குணமளிக்கும் நற்க்கருணை ஆராதனை, ஆசீரும், 03.00 மணிக்கு தமிழ் திருப்பலியும், 04.00மணி க்கு மலையாள திருப்பலியும் நடைபெறும்.

* மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 06.00 மணிக்கு மாதா டிவி- யில், திருத்தல திருப்பலி ஒளிபரப்பாகும்.

* தினமும் மாலை 07.00 மணிக்கு ஜெபமாலை நடைபெறும்.

* திருப்பயணிகளின் தேவைக்கேற்ப திருப்பலி நிறைவேற்றப்படும்.

திருவிழா நிகழ்வுகள்

* பிப்ரவரி முதல் சனி & ஞாயிறு அருளானந்தர் திருவிழா நடைபெறும்.

* மின்னல் மாதா திருவிழா, ஆகஸ்ட் 23 தேதி கொடியேற்றம், திருவிழா, தேர்பவனி செப்டம்பர் 1ம் தேதி.

அருட்தந்தை S.A. அந்தோணி சாமி பங்குத்தந்தை.
புனித மின்னல் மாதா திருத்தலம் .
சேர்ந்தமரம் (பங்கு)
பாளைமறைமாவட்டம்.
தன்னூத்து. 627857.
சங்கரன்கோவில்(tk)
திருநெல்வேலி (மாவட்டம்)
தமிழ்நாடு
இந்தியா.
போன் 04636 245177.