833 புனித லூர்து அன்னை ஆலயம், திருத்துறைப்பூண்டி

           

புனித லூர்து அன்னை ஆலயம்

இடம்: திருத்துறைப்பூண்டி

மாவட்டம்: திருவாரூர்

மறைமாவட்டம்: தஞ்சை

மறைவட்டம்: பட்டுக்கோட்டை

பங்குத்தந்தை அருட்பணி. I. பிரான்சிஸ் சேவியர்

உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. M. பீட்டர் டேமியன் துரைராஜ்

நிலை: பங்குத்தளம்

கிளைப் பங்குகள்:

1. புனித அந்தோணியார் ஆலயம், மடப்புரம்

2. புனித அடைக்கல அன்னை ஆலயம், பள்ளங்கோயில்

3. திருஇருதய ஆண்டவர் ஆலயம், மேட்டுப்பாளையம்

4. புனித செபஸ்தியார் ஆலயம், காடுவாகொத்தமங்கலம்

5. புனித அன்னாள் ஆலயம், மாங்குடி

6. புனித செபஸ்தியார் ஆலயம், ஓவரூர்

7. புனித சவேரியார் ஆலயம், பொன்னிரை

8. புனித செபஸ்தியார் ஆலயம், பழையங்குடி

9. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சித்தாய்மூர்

10. புனித சவேரியார் ஆலயம், மீனாட்சிவாய்க்கால்

11. புனித அந்தோணியார் ஆலயம், பாமணி

12. புனித செபஸ்தியார் ஆலயம், குன்னலூர்

13. புனித அருளானந்தர் ஆலயம், கட்டிமேடு

14. மரித்தம்மாள் கல்லறை ஆலயம், கள்ளிக்குடி

15. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், வேப்பஞ்சேரி

16. ஆண்டாங்கரை

17. கீராந்தி

18. அம்மனூர்

19. கடுவெளி

20. வெள்ளங்கால்

21. சித்தாலத்தூர்

22. வேளூர்

23. குரும்பல்

24. மணலி

25. நெடும்பலம்

26. வித்வான்மானைக்கால்

27. தலக்காடு

குடும்பங்கள்: 950

அன்பியங்கள்: 25

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 06:30 மணி திருப்பலி, நற்கருணை ஆராதனை, காலை 08:30 மணி இரண்டாம் திருப்பலி 

நாள்தோறும் காலை 06:30 மணி திருப்பலி

வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணி ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி

சனிக்கிழமை மாலை 06:30 மணி ஜெபமாலை, திருப்பலி

மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை குணமளிக்கும் நற்செய்திப் பெருவிழா

திருவிழா: பிப்ரவரி மாதம் 02 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி.‌ A. ஜேக்கப் ஆன்டனி, தஞ்சை மறைமாவட்டம் (மடப்புரம்)

2. அருட்பணி. S. சவரிமுத்து, கடப்பா மறைமாவட்டம் (மேட்டுப்பாளையம்)

3. அருட்பணி. A. மரியதாஸ், தஞ்சை மறைமாவட்டம் (திருத்துறைப்பூண்டி)

4. அருட்பணி. A. பிலோமின்ராஜ், தஞ்சை மறைமாவட்டம் (திருத்துறைப்பூண்டி)

5. அருட்பணி.‌ A. வின்சென்ட் தேவராஜ், தஞ்சை மறைமாவட்டம் (திருத்துறைப்பூண்டி)

6. அருட்பணி.‌ A. ஜெயராஜ், தஞ்சை மறைமாவட்டம் (திருத்துறைப்பூண்டி)

7. அருட்பணி.‌ M. சேவியர், தஞ்சை மறைமாவட்டம் (மடப்புரம்)

8. அருட்பணி.‌ K. ஜெரோம், தஞ்சை மறைமாவட்டம் (பள்ளங்கோயில்)

9. அருட்பணி.‌ R. மத்தியாஸ், MSFS (மடப்புரம்)

10. அருட்பணி. A. அந்தோனிராஜ், தஞ்சை மறைமாவட்டம் (மாங்குடி)

11. அருட்பணி. M. A. ஸ்டீபன் ராஜ், தஞ்சை மறைமாவட்டம் (மேட்டுப்பாளையம்)

12. அருட்பணி. ஜோசப் விக்டர் எட்வின், SJ (பள்ளங்கோயில்)

13. அருட்பணி.‌ A. சகாயராஜ், SDB (திருத்துறைப்பூண்டி)

14. அருட்பணி.‌ S. தேவசகாயராஜ், MSFS (பொன்னிரை)

அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. மேரி ஜூடு, அன்னாள் சபை (மடப்புரம்)

2. அருட்சகோதரி. ஜெயசீலி, அடைக்கல அன்னை சபை (திருத்துறைப்பூண்டி)

3. அருட்சகோதரி.‌ ஆன்டனி மேரி ஜெயசீலி, அடைக்கல அன்னை சபை (திருத்துறைப்பூண்டி)

4. அருட்சகோதரி.‌ மார்கிரட், அடைக்கல அன்னை சபை (மடப்புரம்)

5. அருட்சகோதரி.‌ எமல்டா மேரி, அடைக்கல அன்னை சபை (பொன்னிரை)

6. அருட்சகோதரி.‌ அல்போன்ஸ் மேரி, அடைக்கல அன்னை சபை (பள்ளங்கோயில்)

7. அருட்சகோதரி.‌ பவுலின் தெரசாள், அடைக்கல அன்னை சபை (திருத்துறைப்பூண்டி)

8. அருட்சகோதரி.‌ பிரிட்டா ரூபி, அடைக்கல அன்னை சபை (பள்ளங்கோயில்)

9. அருட்சகோதரி. சகாய மேரி, அடைக்கல அன்னை சபை (திருத்துறைப்பூண்டி)

10. அருட்சகோதரி.‌ லூர்து மேரி, அடைக்கல அன்னை சபை (பள்ளங்கோயில்)

11. அருட்சகோதரி. சோபியா, அடைக்கல அன்னை சபை (பள்ளங்கோயில்)

12. அருட்சகோதரி. அருள் தெரசா, அடைக்கல அன்னை சபை (சிங்களாந்தி)

13. அருட்சகோதரி.‌ லூர்து மேரி, அடைக்கல அன்னை சபை (திருத்துறைப்பூண்டி)

14. அருட்சகோதரி.‌ பரலோக மேரி, அடைக்கல அன்னை சபை (திருத்துறைப்பூண்டி)

வரலாறு

"உருவில்லான் உருவாகி உலகில் ஒரு மகன் உதிப்ப கருவில்லா கருதாங்கி கன்னி தாய் ஆகினயே" என்ற வீரமாமுனிவரின் வியத்தகு வரிகளில் ஆரமாய் என்றும் அலங்கரித்து நிற்பவளே, அன்னை மரியாள்.

ஜாதி, மத பேதமற்ற, சமத்துவ நகரமாம் இந்த திருத்துறைப்பூண்டி திருநகரில், நடுநாயகமாய் ஓங்கி உயர்ந்த கோபுரத்தோடும், அழகோடும் செம்மாந்து சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது புனித லூர்து அன்னை ஆலயம்.

மறைசாட்சியான புனித அருளானந்தர் கொள்ளிடம் கரையில் தத்துவாஞ்சேரியில், 1677 ஆம் ஆண்டு தமது மறைப்பணிக்காக இல்லம் அமைத்துக் கொண்டு, கோடியக்கரை காலிமர் முனை வரை தமது பணிப் பகுதியாகக் கொண்டு, கால்நடைப் பயணமாக பயணித்த வழித்தடத்தில்  மன்னார்குடி, கோட்டூர் தோட்டம், திருத்துறைப்பூண்டி, தாணிக்கோட்டகம், கடினல்வயல், அகஸ்தியம்பள்ளி ஆகிய இடங்களில் தங்கி மறைப்பரப்பு பணியைச் செய்து வந்ததாகவும், கோடியக்கரையிலும் தங்கி மறைப்பரப்பு பணி செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. 

புனித அருளானந்தரின் பாதம் பட்ட பகுதியான திருத்துறைப்பூண்டியில், இதே இடத்தில் 1875 ஆம் ஆண்டு  கீற்று கொட்டகை ஆலயம் அமைத்து, அதில் புனித லூர்து அன்னையின் சுரூபம் வைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வழிபட்டு வந்தனர். 

அப்போது இந்த ஆலயமானது, மன்னார்குடி புனித சூசையப்பர் பங்கின் கீழ் இருந்தது.‌ 1919 ஆம் ஆண்டிற்குப் பிறகு அருட்பணி. L. சோமா அவர்கள் வசதிபடைத்தோரிடம் உதவிகள் பெற்றும், தமது சொந்த முயற்சியிலும் நிலம், தென்னந்தோப்பு என வாங்கி சிறிய ஆலயம் கட்டினார்.

1922 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டி தனிப் பங்காக ஆனது.

அருட்பணி. B. நொரோனா அடிகளார் ஆலயத்தின் முன்புறம் கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டினார். 

அருட்பணி. S. A. அருளையா அவர்கள் ஆலய பீடத்தை புதிதாக மாற்றியமைத்து கட்டினார்.‌ பின்னர் அருட்பணி. அருளையா அவர்கள் 20.04.1977 அன்று ஆந்திரா மாநிலம் கடப்பா மறைமாவட்ட ஆயராக, வேளாங்கண்ணி திருத்தலப் பேராலயத்தில் வைத்து திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயரான பின்னர் திருத்துறைப்பூண்டி வந்து, அன்னைக்கு கட்டப்பட்ட கெபியை, 22.04.1977 அன்று புனிதம் செய்து திறந்து வைத்தார். ‌

அருட்பணி. P. C. மைக்கேல் பணிக்காலத்தில் பழைய வணிக வளாக கட்டிடங்கள் அகற்றப்பட்டு, புதிதாக கட்டப்பட்டது. 

அருட்பணி. V. சவரிமுத்து பணிக்காலத்தில் ஆலயத்திற்கு பின்புறம் நிலம் வாங்கி, அதில் திருமண மண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அருள்தந்தையவர்கள் உடல்நலக் குறைவால் இறைபதம் சென்றார். தொடர்ந்து வந்த அருட்பணி. R. சவரிநாதன் அவர்கள் பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும், ஆயர் அவர்களின் உதவியோடும் மண்டபத்தை கட்டி முடித்து 22.11.2004 ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் அருட்பணி. R. சவரிநாதன் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நிதிதிரட்டியும், ஆயர் அவர்களின் உதவியோடும், பங்கு மக்களின் பங்களிப்புடனும், சிறியதாக இருந்த ஆலயத்தை முற்றிலுமாக இடித்து விட்டு, புதிய ஆலயத்திற்கு 20.06.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, அழகுற கட்டிமுடிக்கப்பட்டு 15.06.2009 அன்று மேதகு ஆயர் M. தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

அருட்பணி. P. சேவியர் அவர்களால் ஆலய பலிபீடம், ஒலிவாங்கி அமைப்புகளை சிறப்புற அமைத்தும், ஜெனரேட்டர் வாங்கி மின்தடைக்கு நிரந்தர தீர்வும் ஏற்படுத்தப்பட்டது.

அருட்பணி. U. சவரிமுத்து அவர்கள் ஆலயத்தின் உட்புறம் மற்றும் முகப்பு அமைப்புகளை பளிங்கு கற்களால் அமைத்து, பீட அமைப்பு, மாதாவின் சுரூபம் ஆகியற்றை புதிதாக அமைத்தும், பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் புதிய கழிப்பறைகளையும் கட்டினார்.

அருட்பணி. G. ஜான் பிரிட்டோ அவர்கள் பொறுப்பேற்று பணிகளைத் தொடங்கிய போது, கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் இந்தப் பகுதியே நிலைகுலைந்து போனது. கஜா புயலில் சேதமடைந்த கிளைப்பங்குகளான சித்தாய்மூர், குன்னனூர், ஓவரூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆலயங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. முற்றிலுமாக சரிந்த திருமண மண்டபத்தின் மேற்கூரையும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

ந்த சூழ்நிலையில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஓராண்டிற்கும் மேலாக ஆலயம் மூடிக்கிடந்தது. பின் அரசு அறிவித்த பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதனிடையே பங்குத்தந்தை அருட்பணி. G. ஜான் பிரிட்டோ அவர்கள் வழிகாட்டலில், பங்கின் நூற்றாண்டு விழா 16.08.2021 அன்று தொடங்கப்பட்டது. ‌நூற்றாண்டு விழா குழுவினருடன் இணைந்து நிதிதிரட்டி இருபுறமும் தரைதளம், நூற்றாண்டுவிழா கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டது‌. மேலும் மண்ணின் மைந்தர் அருட்பணி. R. மத்தியாஸ் அவர்களின் உதவியுடன் மாதாவின் பழைய கெபியை அகற்றிவிட்டு, புதிய கெபியை கட்டினார். மேலும் பழைய மணிக்கூண்டை புதுப்பித்து 'புனிதர்களின் நினைவு கோபுரமாக, அழகுற அமைத்துக் கொடுத்தார்.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் அவர்கள், விழாக் குழுவினருடன் இணைந்து நூற்றாண்டு (1922-2022) விழாவை, 2022 ஆம் ஆண்டில் மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாட வழிவகை செய்ததுடன், பங்கை வளர்ச்சியின் பாதையில் சிறப்புற வழிநடத்தி வருகின்றார்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயத்திற்கு, திருப்பயணம் செல்லும் இறைமக்கள் இவ்வாலயத்தில் வந்து ஓய்வெடுத்து ஜெபித்து செல்கின்றனர்.

புனித லூர்து அன்னையின் அருளால் எண்ணற்ற புதுமைகள் நடந்து வருவதாலும், பல ஊர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் நாள்தோறும் மற்றும் திருவிழா காலங்களில் வருகை தருகின்றனர்.

மாதா டிவி:

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை திருத்துறைப்பூண்டி ஆலயத்தில் நடைபெறும் திருப்பலி மாதா டிவியில் ஒளிபரப்பாகிறது.

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. புனித ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளி, பள்ளங்கோயில்

2. ஆர்.சி அருளானந்தா நடுநிலைப் பள்ளி, பள்ளங்கோயில்

3. புனித ஜான் டி பிரிட்டோ மழலையர் & தொடக்கப்பள்ளி,  பள்ளங்கோயில்

4. புனித சவேரியார் மழலையர் & தொடக்கப்பள்ளி, பொன்னிரை

5. புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்துறைப்பூண்டி

6. புனித தெரசாள் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, திருத்துறைப்பூண்டி

7. புனித தெரசாள் தொடக்கப்பள்ளி, திருத்துறைப்பூண்டி

8. தூய அந்தோனியார் தொடக்கப்பள்ளி, திருத்துறைப்பூண்டி

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மறைக்கல்வி

2. பீடச்சிறுவர்கள்

3. இளையோர் இயக்கம்

4. மரியாயின் சேனை

5. புனித வின்சென்ட் தே பவுல் சபை

6. பாடகற்குழு 

7. கிறிஸ்துவ சேவை மன்றம்

8. பங்குப் பேரவை 

9. அன்பியங்கள்

10. வழிபாட்டுக் குழு

11. ஜெபகோபுரம்

பங்கில் உள்ள கெபிகள்:

1. லூர்து அன்னை கெபி

2. புனிதர்களின் கோபுரம்

பங்கில் உள்ள துறவற இல்லங்கள்:

1. அடைக்கல அன்னை சபை

2. கோயம்புத்தூர் காணிக்கை அன்னை சபை

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. L. சோமா (1922-1930)

2. அருட்பணி.‌ G. ஜோசப் (1931-1932)

3. அருட்பணி. G. ஹிலனன்லூர் (1932-1934)

4. அருட்பணி.‌ A. இருதயம் (1934-1941)

5. அருட்பணி. A. M. கார்டோசா (1941-1946)

6. அருட்பணி.‌ A. ரேகோ (1947-1948)

7. அருட்பணி.‌ M. A. அருள்சாமி (1948-1964)

8. அருட்பணி.‌ P. R. தாமஸ் (1964 மே-ஜூன்)

9. அருட்பணி. P. R. சில்வேரா (1964-1966)

10. அருட்பணி.‌ B. நொரோனா (1966-1974)

11. அருட்பணி.‌ S. A. அருளையா (1974-1977)

12. அருட்பணி. A. மரியதாஸ் (1977 பிப்ரவரி-ஜூன்)

13. அருட்பணி.‌ I. ஆரோக்கிய சாமி (1977-1979)

14. அருட்பணி. G. அருள் இருதயம் (1979-1980)

15. அருட்பணி. P. C. மைக்கேல் (1980-1989)

16. அருட்பணி. K. ஜோசப் (1989-1996)

17. அருட்பணி. V. சவரிமுத்து (1996-2003)

18. அருட்பணி.‌ A. விக்டர் மரிய சூசை (2003 பிப்ரவரி-ஜூன்)

19. அருட்பணி.‌ R. சவரிநாதன் (2003-2009)

20. அருட்பணி. P. சேவியர் (2009-2012)

21. அருட்பணி. U. சவரிமுத்து (2012-2016)

22. அருட்பணி.‌ G. ஜான் பிரிட்டோ (2016-2022)

23. அருட்பணி. I. பிரான்சிஸ் சேவியர் (2022-----)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. I. பிரான்சிஸ் சேவியர் அவர்கள்

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: மேட்ரிக்ஸ் கிறிஸ்டோபர் மற்றும் அன்பு ஆகியோர்

ஆலய வரலாறு: ஆலய நூற்றாண்டு விழா மலர்.

வழித்தடங்கள்: கிழக்கு கடற்கரைச் சாலை வழித்தடத்தில், பட்டுக்கோட்டை -திருத்துறைப்பூண்டி

திருச்சி -தஞ்சாவூர் -மன்னார்குடி -திருத்துறைப்பூண்டி 

சென்னை -காரைக்கால் -நாகப்பட்டினம் -வேளாங்கண்ணி திருத்துறைப்பூண்டி 

சென்னை -கும்பகோணம் -திருவாரூர் -திருத்துறைப்பூண்டி.

Church Location: Our Lady of Lourdes Church, Thiruthuraipoondi https://maps.app.goo.gl/ecn2DPLZG77Q6pWW8