471 புனித செல்வநாயகி அன்னை ஆலயம், மோகனூர்


புனித செல்வநாயகி அன்னை ஆலயம்

இடம் : மோகனூர், மோகனூர் அஞ்சல், 637015

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித செசிலி ஆலயம், RC பேட்டப்பாளையம்.

பங்குதந்தை : அருட்பணி. பிரகாஷா

குடும்பங்கள் : 45

ஞாயிறு : காலை 07.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : மே மாதம் 17ம் தேதி.

வழித்தடம் : நாமக்கல்லில் இருந்து 18கி.மீ தூரத்தில் மோகனூர் உள்ளது.

வரலாறு :

மோகனூரில் புனித செல்வநாயகி அன்னையின் முதல் ஆலயமானது, அன்றைய RC பேட்டப்பாளையத்தின் பங்குத்தந்தை அருட்பணி. T. C. தாமஸ் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்டு, அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் 12.05.1979 அன்று அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.

மேலும், பங்குதந்தை அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் முயற்சியால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் 31.05.2016 அன்று அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.

அன்னையின் ஏழு திருவுருவச் சுரூபங்களை தாங்கிய புனித லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு, 31.05.2016 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரகாஷா அவர்களின் வழிகாட்டுதலில், ஆலய கோயில் பிள்ளை.