349 புனித சூசையப்பர் ஆலயம், T மேலப்பட்டி, திருமலைராயபுரம்


புனித சூசையப்பர் ஆலயம்.

இடம் : T மேலப்பட்டி, திருமலைராயபுரம்

மாவட்டம் : புதுக்கோட்டை

மறை மாவட்டம் : திருச்சி

மறை வட்டம் : கீரனூர்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித செங்கோல்மாதா ஆலயம்,T.நடுப்பட்டி, திருமலைராயபுரம்.

பங்குத்தந்தை : அருட்பணி R. ஞான அருள்தாஸ்.

இணை பங்குத்தந்தை : அருட்பணி இன்பென்ட் ராஜ்

குடும்பங்கள் : 80

அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : இல்லை

வாரந்தோறும் புதன்கிழமை மாலை 07.00 மணிக்கு திருப்பலி.

தினந்தோறும் காலை 5:00 மணிக்கும் மற்றும் மாலை 07.00 மணிக்கு ஜெபமாலை.

திருவிழா : ஏப்ரல் மாதம் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து மே 01-ஆம் தேதி காலை ஆலய திருவிழா திருப்பலியும், மாலை அன்பு விருந்தும் நடைபெறும்.

திருவிழா கொடியிறக்கம் மே 02-ஆம் தேதி காலை 7:00 மணியளவில்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி பிலவேந்திரன் (late)

2.அருட்சகோதரர் L. அருள்பிரபு.

3.அருட்சகோதரி S.மரிய லில்லி மலர்

4. அருட்சகோதரி C. அமுதா.

வழித்தடம் :
புதுக்கோட்டை - கீரனூர்
K4, 7C,32 இறங்குமிடம் T மேலப்பட்டி, திருமலைராயபுரம்.

வரலாறு :

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய T. மேலப்பட்டி ஊரில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயமானது, திருமலைராயபுரம் புனித செங்கோல்மாதா ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாலயமானது அருட்தந்தை M.A.அந்தோணி அவர்களின் முன்னேற்பாடுடன் ஊர்மக்கள் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் மரியாதைக்குரிய உரக்கடை A.S. சூசை அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டு, 28-12-1990 அன்று திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பெர்ணாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

மேலும் ஆலய மணிக்கூண்டானது 2006 ஆண்டு ஊர் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் மரியாதைக்குரிய உரக்கடை A.S.சூசை அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டு மேதகு திருச்சி ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்காளால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாலயத்திற்கு மேதகு அருட்தந்தை M.A. அந்தோணி அவர்களின் பங்கு ஊர்மக்களால் மறக்க முடியாதாதாக இருந்து வருகிறது.

பங்கு ஆலயத்தின் மிக அருகிலேயே இவ்வாலயம் அமைந்துள்ளதால் ஞாயிறு திருப்பலிக்கு மக்கள் பங்கு ஆலயத்திற்கு செல்வார்கள்.

1998 -இல் திருமலைராயபுரம் புனித செங்கோல் மாதா ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி K. தேவராஜ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.

திருமலைராயபுரம் பங்கு மற்றும் கிளைப் பங்குகள் 21-05-2005 முதல் திரு இருதயங்களின் குருக்கள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. பங்கு ஆலயத்தின் அருகில் குருக்கள் தங்கவும், அலுவல்களை மேற்கொள்ளவும் பங்கு இல்லம் கட்டப்பட்டது.

விவசாயிகள் நிறைந்த இவ்வூரில் ஜனவரி 14-ஆம் தேதியை புனித அந்தோணியார் பொங்கலாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதில் சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து பொங்கல் வைப்பது தனிச்சிறப்பு.

மேலும் ஜனவரி 18 -ஆம் தேதி மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று ஆலயத்தில் பொங்கல் வைத்து அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடுவர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும்.

தூய வளனார் உயர்நிலை பள்ளி (6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை தமிழ் வழி ) செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெறுவது தனிச்சிறப்பு. இப்பள்ளி சுற்றுவட்டார மாணவர்கள் வாழ்வில் முன்னேற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமலைராயபுரம், T.நடுப்பட்டி, தனிப்பங்காக உயர்த்தப்பட்ட பின் பணிசெய்த பங்குத்தந்தையர்கள் :

1. Fr K. தேவராஜ்
2. Fr இருதயசாமி
3. Fr L.V. யூஜின்
4. Fr சிங்கராயர்
5. Fr A.தேவராஜ்
6. Fr பெஞ்சமின் போஸ்கோ (2005-2012)
7. Fr சதீஷ் மகிழன் (2012-2017)
8. Fr ஜான் பால் (2017-2019 )
9. Fr R. ஞான அருள்தாஸ் (2019 ஜூன் முதல்...)

பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம் மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம்.

பதிவு செய்வோர் மின்னஞ்சல் : joseeye1@gmail.com

https://www.facebook.com/permalink.php?story_fbid=2490339861200658&id=2287910631443583&__tn__=K-R