451 புனித அந்தோணியார் ஆலயம், அரசூர் பூச்சிக்காடு


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : அரசூர் பூச்சிக்காடு, பூச்சிக்காடு அஞ்சல், 628653.

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : சாத்தான்குளம்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித பிரகாசியம்மாள் ஆலயம், பிரகாசபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி சலேத் ஜெரால்ட்

குடும்பங்கள் : 250
அன்பியங்கள் : 6

ஞாயிறு காலை 07.00 மணிக்கு திருப்பலி, மாலை 07.00 மணிக்கு நற்கருணை ஆசீர்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி திருப்பலி : காலை 05.30 மணிக்கு.

செவ்வாய் திருப்பலி : மாலை 07.00 மணிக்கு

திருவிழா : பெப்ரவரி மாதத்தில்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. அந்தோணிராஜா
2. அருட்பணி. செல்வரெத்தினம்

வழித்தடம் : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் உள்ளன (சுமார் 7கிமீ தொலைவு).

வரலாறு :

தூத்துக்குடி மறை மாவட்டத்தில் அமைந்துள்ள பூச்சிக்காடு புனித அந்தோணியார் ஆலயமானது சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

முதலில் தற்போதைய ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள கிழவியாவிளை என்ற இடத்தில், வெறும் ஐந்து குடும்பங்களைக் கொண்டு, ஓலைக்குடில் ஆலயம் அமைத்து புனித அந்தோணியாரை பாதுகாவலராகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர்.

அப்போது சாத்தான்குளம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. அப்போதைய சாத்தான்குளம் பங்குத்தந்தை அருட்பணி. மார்ஷல் அவர்கள் தற்போதைய ஆலயம் அமைந்துள்ள இந்த இடத்தை வாங்கினார்கள்.

பங்குத்தந்தையரின் அறிவுறுத்தலின்படி மக்கள் அனைவரும் கிழவியாவிளை பகுதியில் இருந்து, தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் குடி பெயர்ந்தனர்.

1880 இல் சொக்கன்குடியிருப்பு தனிப்பங்கான போது பூச்சிக்காடு, சொக்கன்குடியிருப்புடன் இணைக்கப் பட்டது. அதன் பிறகு வந்த அருட்பணி. சாமிநாதர் அவர்கள் ஓலை ஆலயத்தை மாற்றி கற்கோவில் அமைக்க திட்டமிடப்பட்டு, 1926 ஆம் ஆண்டில் அஸ்திவாரம் போடப்பட்டு, பின்னர் பணியாற்றிய அருட்பணி. இஞ்ஞாசியார் பணிக்காலத்தில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 1926 ல் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ரோச் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1988 இல் பூச்சிக்காடு தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. தேவநவமணி அவர்கள் பொறுப்பேற்றார்கள். அருகிலுள்ள பிரகாசபுரம் புனித பிரகாசியம்மாள் ஆலயம் பூச்சிக்காடு பங்கின் கிளைப் பங்காக இணைக்கப் பட்டது.

தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் மக்களை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தி வந்தார்கள்.

தற்போதைய ஆலயமானது அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. S. M. சகாயம் அவர்களின் வழிகாட்டுதலில், மக்களின் ஒத்துழைப்புடன் மற்றும் அயராத உழைப்பால், கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஒரு ஆண்டில் அழகிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 21.02.2003 அன்று, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

ஆலய அர்ச்சிப்பு நினைவாக 'ஆலயம்' என்ற ஒலிநாடா வெளியிடப் பட்டது. அருட்பணி. S. M. சகாயம் அவர்களின் பணிக்காலம் பூச்சிக்காடு பங்கின் பொற்காலம் என போற்றப் படுகிறது.

ஆலயத் திருவிழா ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதத்தில் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. ஆலய திருவிழா தேர்பவனியில் அனைத்து சமய மக்களும், சமய பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பிப்பது சிறப்பு வாய்ந்தது. ஆலயத்தில் திருவிழா முடிந்த பின்னர் வருகிற முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அசனம் இப்பகுதியில் சிறப்பு பெற்றதாகும்.

பங்கின் பங்குத்தந்தையர்கள் :

1. அருட்பணி. தேவநவமணி
2. அருட்பணி. ஆல்வின் V. ராயர்
3. அருட்பணி. ஜாண்பால்
4. அருட்பணி. ஜான்சன்
5. அருட்பணி. S. M. சகாயம்
6. அருட்பணி. நெல்சன்ராஜ்
7. அருட்பணி. அருள்மணி
8. அருட்பணி. மார்ட்டின்
9. அருட்பணி. விக்டர் சாலமோன்
10. அருட்பணி. சலேத் ஜெரால்ட்.

தகவல்கள் : ஆலய அர்ச்சிப்பு விழா மலர்.